தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் எ.பி.சி.வி.சண்முகம் - ஐக்கியப் பேரவைக்கு நேரில் வந்து ஆதரவு கோரியுள்ளார். விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஏ.பி.சி.வி.சண்முகம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு ஆதரவு கோரும் முகமாக தொகுதியின் பல பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கிறார் வேட்பாளர் எ.பி.சி.வி.சண்முகம். இன்று (மார்ச் 30) 19.00 மணியளவில் காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், அதன் பொதுச் செயலாளர் பிரபு சுல்தானுக்கு சால்வை அணிவித்து, ஆதரவு கோரினார்.
சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், எம்.ஏ.எஸ்.ஜரூக், என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ உள்ளிட்ட பிரமுகர்கள் உடனிருந்தனர்.
பின்னர் அவர் நகரிலுள்ள முக்கிய பிரமுகர்களையும், பெரியவர்களையும் சந்தித்து ஆதரவு கோரினார். அவருடன், காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளான விஜயசீலன், கதிர்வேலு, ஜஸ்டின், காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான ஷாஜஹான், வி.டி.என்.அன்ஸாரீ உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காங்கிரஸ் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 06:31 / 31.03.2014] |