சென்னையில் பிப்ரவரி 21, 22, 23 ஆகிய மூன்று தேதிகளில் நிலக்கரியின் உண்மை முகம் (THE REAL FACE OF COAL) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்தும் - நிலக்கரி மூலமான மின் உற்பத்தி மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
அந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்ட இந்திய அரசாங்கத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் எரிசக்தி செயலாளர் (UNION POWER SECRETARY) இ.ஏ.எஸ்.சர்மா - உரை நிகழ்த்தினார். அந்த உரையின் தமிழாக்கத்தை - காயல்பட்டணம்.காம் இங்கு பிரத்தியேகமாக வெளியிடுகிறது.
அந்த உரையில் - தமிழகத்தில் 3 கடலோர மாவட்டங்களில் மட்டும் புதிதாக் 40,000 MW கொள்ளளவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் முதல் இடம் தூத்துக்குடி மாவட்டம் பெறுவதாகவும் (16,460 MW) தெரிவித்தார்.
சர்மா - 1965 ம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் IAS அதிகாரியாக தனது பணியை துவக்கினார்.
1994-95 களில் - தெலுகு தேச கட்சி, எந்த போட்டியும் இல்லாமல் சில தொழில் நிறுவனங்களுக்கு மின்உற்பத்தி திட்டங்களை வழங்கிட முயற்சித்தப்போது அதனை எதிர்த்து, விடுமுறையில் சென்றார். பின்னர் - தனது பணியினை மத்திய அரசாங்க சேவைக்கு மாற்றிக்கொண்டார்.
நேர்மையாக பணியாற்றியமைக்காக தனது 35 ஆண்டுகால பணியனுபவதில் இவர் 26 முறை மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 ம் ஆண்டில் - நிதி துறை செயலாளராக இருந்தப்போது வாஜ்பாய் அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடினால், ஓர் ஆண்டு பதவிகாலம் இருக்கும் நிலையில் பதவி விலகி, முற்கூட்டிய ஓய்வு பெற்றார். அதன் பிறகு, நாடு முழுவதும் - சுற்றுச்சூழல் பாதுக்காப்பு குறித்தும், குறிப்பாக நிலக்கரியினால் ஏற்படும் மாசு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சிறப்பு கட்டுரையை காண இங்கு அழுத்தவும்.
|