Re:...எனது தேடலும் இதுவே... posted bySithy Lareefa (Chennai)[20 June 2017] IP: 106.*.*.* India | Comment Reference Number: 45609
மா ஷா அல்லாஹ்.... அருமையான ஒரு தேடல்... சிறு வயதில் தெருவில் ஒரு டிரக்கில் கொண்டு வந்து விற்ற சீன கதைகளின் தமிழாக்க புத்தகங்கள் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை... எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் குழந்தைகளுக்கான புத்தகங்கள் நிறைய எழுதிட வேண்டும்... அல்லது குறைந்தபட்சம் தமிழாக்கமாவது செய்திட வேண்டும் என்பதே எனது நீண்ட கால இலட்சியம்... குறிப்பாக குறைந்த விலையில் கிடைத்திடச் செய்ய வேண்டும்... ஏனெனில் தற்போது கிடைக்கும் குட்வேர்ட்ஸ் புத்தகங்கள் வாங்கத் தூண்டுவதாய் இருந்தாலும் விலையைப் பார்த்தவுடன் கீழே வைத்திடவே தோன்றுகிறது!
Re:... மறக்க முடியாத பயணம்... posted bySithy Lareefa (Chennai)[05 April 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45426
மா ஷா அல்லாஹ்... வழக்கம் போல ஆசிரியரின் எழுத்து எங்களையும் மதீனாவை நோக்கி கூடவே அழைத்துச் சென்றது...
பாலைவனப் பெருவெளியில் உலாவிய ஒட்டகங்கள், புறாக்கள், சிட்டுக்குருவிகள் என அனைத்தையும் எங்கள் கண்முன் நிறுத்தியது. நாங்கள் மதீனா சென்ற நாட்களை மீண்டும் அசைபோட வைத்தது...
ஒரு சிறிய திருத்தம்... ரவ்ழா ஷரீஃபை காண்பதற்காக ஒரு சிறிய தள்ளுமுள்ளு என்று ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்... சிறிய தள்ளுமுள்ளு அல்ல... மூச்சு முட்டும் அளவுக்கு மிகப்பெரிய தள்ளுமுள்ளுவை நாங்கள் சென்றபோது அனுபவிக்க நேர்ந்தது... எனினும் அண்ணலார் வாழ்ந்தது, வணங்கியது, ஆட்சி செய்தது, என அவர்களது காலடி பட்ட இடங்களையும், இப்போது அவர்களின் பொன்னுடல் அடங்கப்பட்ட இடத்தையும் காண எதையும் பொறுத்துக் கொள்ளலாம் அல்லவா...
பெருமானாரின் புன்னிய பூமியின் ஞாபகங்களோடு பேராசிரியர் பெருமானாரின் ஞாபகங்களையும் இணைத்ததற்கு நன்றி.
Re:...மறக்க முடியாத ஆசிரியர் posted bySithy Lareefa (Chennai)[02 April 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45413
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆயிஷா சித்தீக்காவில் நாங்கள் மாணவியர்களாக இருந்த போது எங்களின் மதிப்பிற்குரிய ஆசிரியர்... சிறந்த நகைச்சுவை உணர்வாளர்... அவரது வகுப்பறைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை....
கடினமான பாடங்களும் கூட அவருடைய எளிமையான சொல்வழக்குகளாலும், நடைமுறை உதாரணங்களாலும் மிகவும் விரும்பிப் பயின்ற பாடங்களாகியது எங்களுக்கு கிடைத்த பெரும்பாக்கியம்.
அன்னாரது குடும்பத்திற்கு அல்லாஹ் பொறுமையைத் தந்தருள வேண்டும்... அன்னாரது பிழைகளை அல்லாஹ் பொறுத்தருளி... இந்த உலகத்தில் அவருக்கு ஒரு ஜன்னத்தை மனைவியாக அல்லாஹ் வழங்கியது போல, மறு உலகிலும் அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் என்னும் சுவனபதியைத் தந்தருள்வானாக... ஆமீன்.
Re:...கனவுக் கல்வி posted byசித்தி லரீஃபா (Chennai)[27 February 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45258
மா ஷா அல்லாஹ்... கூடவே கல்விச் சுற்றுலா சென்றது போன்றதொரு உணர்வைத் தந்தது எழுத்தும், படங்களும்.
அனைத்தையும் அறுத்தெறிந்து விட்டு இது போன்ற கல்விச் சூழலில் அடைக்கலமாகி விடலாமா என்று மனம் ஆசைப் படுகிறதுதான். ஆனால் ஊறிப் போன பொதுப்புத்தி கால்களைக் கட்டிப்போடுகிறதே...
பூனைக்கு யாராவது மணி கட்ட மாட்டார்களா...? என்று மனம் ஏங்குகிறது.
இன் ஷா அல்லாஹ்... மாற்றங்கள் வரும்... மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதது.
கல்வியில் மாற்று வழிகளைத் தேடும் உங்கள் சிந்தனைகளின் செயலாக்கத்திற்கான முயற்சிகளை எதிர்காலத்தில் நீங்களே முன்னெடுத்துச் செய்யுங்கள்...
உங்களின் அழகிய எழுத்தும், எண்ணங்களும் செயலாக்கங்களை நோக்கி நகரட்டும். இன் ஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்.
செய்தி: “தோக்கியோ ஸ்டோரி (Tokyo Story)” - ஜப்பானியப் பட திரையிடல் & கருத்து பரிமாற்ற அமர்வு: எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு நடத்திய 11ஆவது நிகழ்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தொடரட்டும்.... முயற்சிகள். posted byசித்தி லரீஃபா ( chennai)[07 November 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44869
இது போன்ற கருத்தாழமிக்க ஆவணப் படங்களை பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்... அதே வேளையில் ஏதோ சினிமா காட்டுகிறார்கள் என்று அவர்கள் நினைத்திடாத வகையிலே படத்தின் மையக் கருத்தையும், அதிலிருந்து நாம் கற்க வேண்டிய படங்களையும், படம் திரையிடப் பட்டதற்கான காரணத்தையும், தெளிவாக இஸ்லாமிய ஒளியில் விளக்கிட ஏற்பாடும் செய்தல் வேண்டும்.
தென்னயும், வாழையும், கொய்யாவும், சீத்தாவும், எலுமிச்சையும், கோழிகளும், ஆடுகளும், துள்ளி ஓடும் அணில்களுமாய்... ஒவ்வொரு வீடுகளின் பின்னாலும் இருந்த கொல்லைகள் இன்று வீடுகளாய் உருமாறிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் ஒரு வீடு எனும் காயலின் அசுரப் பசிக்குப் பலியான தோட்டங்களை... வருங்காலத் தலை முறையினருக்கு படங்களாக மட்டுமே நம்மால் காட்ட முடியும்.
Re:...கவனிக்கப்படாத காலக் கருவூலங்கள்.... posted bySithy Lareefa (Chennai)[30 September 2016] IP: 61.*.*.* India | Comment Reference Number: 44734
அஸ்ஸலாமு அலைக்கும்...
எஸ்.கே. மாமா அவர்களின் அறிவுக்கருவூலத்திலிருந்து நேரடியாக பலன் பெற்றவள் நான்...
எனது பயான்களுக்கான அரிய பல குறிப்புகளையும், புள்ளி விபரங்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் எனக்குத் தருவார்கள். இன்றளவும் அவர்கள் எனக்களித்த சில பேப்பர் கட்டிங்குகளை நான் பாதுகாத்து வருகிறேன்.
அவர்கள் உடல் நலிவுற்ற நாட்களில் அவர்களது அருமைத் துணைவியார் மர்ஜூனாமா, " மாமாவின் உடல்நிலை அடிக்கடி மோசமாகிக் கொண்டே வருகிறது... எனவே அவர்களது அறிவை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்." என்று அடிக்கடி எங்களிடம் கூறுவது உண்டு...
தன் கணவரது அறிவு அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற அந்த அருமைத் துணைவியின் ஆதங்கம் ஓர் அபூர்வமே...!
மாமா குளோபல் வார்மிங்' பற்றி இஸ்லாம் கூறும் அனைத்து விபரங்களும் குரான் ஹதீஸ் ஒளியில் தான் சேகரித்து வைத்திருப்பதாகவும் அதை என்னிடம் தருவதாகவும், நான் அதனைப் பற்றி முழுமையாக ஓர் உரை நிகழ்த்த வேண்டும் என்றும் என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார்கள்... இதற்காக மாமாவின் வீட்டிற்கே சென்று அந்த குறிப்புகளைக் கேட்டேன்...
ஷமீம் காக்கா சொன்னது போல வீட்டை துப்புரவு செய்த போது அவைகள் தவறி விட்டன என்றும், தேடி எடுத்துத் தருவதாகவும் மாமா கூறினார்கள். மாமாவின் மரணத்திற்குப் பின்னரும் அந்த குறிப்புகளுக்காக அவர்களின் குடும்பத்தார்களிடம் கேட்டேன்... அவர்களுக்கும் அது பற்றி ஒன்றும் தெரியவில்லை...
இப்படி எத்தனை பொக்கிஷங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்து மறைந்ததோ தெரியவில்லை... மாமா வாழும் காலத்திலேயே இன்னும் அவர்களை அதிகமாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமோ...! என்னும் மனக்குறை இன்றும் என்னுள் தொடர்கிறது. ..
Re:...காயல் மாநகரின் அடையாளங்களுள் ஒருவர்... posted bySithy Lareefa (Chennai)[25 September 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44703
ஊர் நலன் மற்றும் சமூக நலன்களைப் பற்றி எப்போதும் சிந்தித்தும், செயலாற்றியும் வந்த வெள்ளந்தியான மனிதர் என்பதை அவர்களின் எழுத்துக்களின் வழி உணர முடிந்தது.
அல்லாஹ் அவர்களது நல்ல அமல்களை அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தெளவ்ஸ் என்னும் உயர்வான சுவனபதியிலே அவர்களை நிலை பெறச் செய்வானாக...! ஆமீன்.
Re:...உறவுகளின் வழியேதான் உலகைக் காண்கிறேன்... posted bySithi Lareefa (Chennai )[24 March 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43404
அஸ்ஸலாமு அலைக்கும்.
" உம்மா....ஸே! மாஷா அல்லாஹ் " கட்டுரை எழுதியே ஆக வேண்டும் என்ற திட்டத்துடன் எழுதப்பட்டது அல்ல. போகிற போக்கில், மனதில் பட்டதை, என்னைச் சுற்றி நடந்த, நடக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை.... உள்ளதை உள்ளபடி கட்டுரையாக்கியிருந்தேன். இது ஒரு எழுத்துப் பாணியா, சுவாரஸ்யத்திற்கான உத்தியா என்பதெல்லாம் நான் அறியேன்....
நானும், எனது குடும்பமும் சார்ந்த நிகழ்வுகளையே பெரும்பாலும் மேற்கோள் காட்டுகிறேன் என்பது கூட எதிர்காலங்களில் என்மீதான விமர்சனமாக வைக்கப்படலாம்.
நான்கு குழந்தைகளின் தாயாக... அதிகமாக வெளியில் செல்ல அவசியமில்லாத ஒரு இஸ்லாமியப் பெண்ணாக, என் உறவுகளின் வழியேதான் உலகத்தைக் காண்கிறேன் என்பதுதான் உண்மை.
கட்டுரைக்கு வந்திருந்த கருத்துக்களை போட்டு வாங்கியது என நீங்கள் குறிப்பிட்டிருப்பது "வாள் முனையில் இஸ்லாம் பரவியது" என்று கூறுவது போலுள்ளது. நான் கேட்டேன் என்பதற்காக முகம் தெரியாத அன்பர்களும், அறிமுகமில்லாத சகோதரிகளும் கூட தங்கள் வேலைகளை ஒதுக்கி விட்டு கருத்து எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது....?
கட்டுரையின் ஏதோ ஒரு பகுதி அவர்களது வாழ்வின் ஏதோ ஒரு பகுதியைப் பேசியிருக்க வேண்டும்... அவர்கள் சொல்ல நினைத்து முடியாமல் போன விஷயங்களை தொட்டிருக்க வேண்டும்.... நேரிலும், தொலைபேசியிலுமாக என்னிடம் பேசிய சகோதரிகள் மூலமாக இதை நான் உணர முடிந்தது.
சமீபகாலமாக ஏ.எல்.எஸ்.மாமாவின் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கவில்லை போல் தெரிகிறது...
இந்த கட்டுரைக்கான இன்ஸ்பிரேஷனே மாமாவின் போன கட்டுரைதான்.
பெண்கள், மாணவர்கள் என அவரவர்கள் அவரவர்களுக்கான பகுதிகளைக் கொண்டு மட்டுமே கட்டுரையை உள்வாங்கிக் கொள்ள, எழுத்தாளரான நீங்களோ எழுத்தாளர்களுக்கான கடைசிப் பகுதியை மட்டுமே உள்வாங்கியுள்ளீர்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது...
ஒரு எழுத்தாளராக.... கருத்துக்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் உங்களுக்கும் உண்டு என்பதைத்தான்.... காலங்கள் பல கடந்தும் உங்கள் ஆக்கம் பற்றிய புள்ளி விபரங்களை இப்போதும் புள்ளி பிசகாமல் நினைவில் கொண்டிருப்பதைக் கொண்டு உணர முடிகிறது.
எது எப்படியோ... நல்ல மாற்றம் ஒன்றிற்கு எனது கட்டுரை வித்திட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி...
வாசக கருத்துக்களின் வாயிலாக எண்ணற்ற எழுத்தாளர்கள் இனங்காணப்படுவதற்கு இக்கட்டுரை நல்லதொரு தொடக்கமாக அமைவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross