செய்தி: தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி, வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகங்களுக்கு நன்றி! பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.பள்ளி ஆசிரியர் அப்துர்ரஊஃப் உருக்க உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லோருக்கும் பள்ளிபருவத்தில் ஒரு ஆசிரியரை பிடிக்கும். அந்த வகையில் என்னை கவர்ந்த, எனக்கு பிடித்த முதல் ஆசிரியர் மரியாதைக்குரிய ரவூப் சார் அவர்கள்.
அவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் தனி கட்டுரையே எழுத வேண்டும். அந்த அளவிற்கு அவர்களுடன் நெருங்கிய பழக்கம். அவர்களிடம் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரை டியுசன் பயிலும் காலத்தில் அவர்களது குடும்பத்தின் அங்கத்தினராகவே இருந்தோம் நானும் என்னுடன் பயின்ற சில மாணவர்களும் .
மர்ஹூம் கனி காக்கா அவர்களின் வீட்டில் வைத்து டியுசன் படிக்கும் சமயம் அண்டை அயலார்ருக்கு இடையூறு இல்லா வண்ணம் மிதிவண்டிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியது மட்டுமல்லாது தாங்களே அவ்வபோது வெளியே சென்று மிதிவண்டிகளை சரி செய்தது தங்களுக்கே உரிய சிறப்பம்சம்.
டியுசன் பயிலும் காலத்தில் எங்களது வீட்டில் இருந்ததை விட தங்களது வீட்டில் தான் அதிகமாக இருந்துள்ளோம். அரட்டை மற்றும் ஆனந்தத்தின் எல்லை அது. அதே சமயம், கண்டிப்பிலும் குறை இருக்காது.
எல்லோரும் கூறுவது போல உங்களிடம் வெறும் கணிதம் மற்றும் கற்றுக்கொள்ளவில்லை. மேலாக, பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்வது எப்படி என்பதனையும் எங்களுக்கு வாழ்ந்து வழிகாட்டிய ஆசான் நீங்கள்...!
குறிப்பாக, தங்களது தாய் தந்தையர்களின் இறுதி தருணத்தில் தாங்கள் செய்த சேவைகளை உங்கள் உடனிருந்து கண்டவன் நான் (இறைவன் அவர்களை பொருந்தி கொள்வானாக...!)
தாங்கள் பொறுமையின் மறு உருவம் என்று சொன்னால் அது மிகையாகாது. பெரும்பாலும் எல்லோரும் பொறுமையை இறுதிகட்டத்தில் தான் மேற்கொள்வர் ஆனால் அதனை ஆரம்ப கட்டத்தில் கையாள்வதே இறைவன் விரும்பும் செயல். அதனையும் தாங்கள் பின்பற்றி நடந்தீர்கள்.
எத்தனை முறை மருத்துவமனை கஷ்டம் அதன் சிரமங்களில் தவித்தபோதும் கூட பொறுமையுடன் இருந்தீர்கள். நிச்சயம் இறைவனின் நற்கூலி உங்களுக்கு உண்டு.
இன்னும் பல இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்......
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் வழங்கி மீதமுள்ள வாழ்நாளை மன நிம்மதியுடன் கழித்திட பிராத்திக்கின்றேன்.--
செய்தி: மஹ்ழரா, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை முன்னாள் தலைவரின் மகள் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்...!
மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் நண்பன் ரிழ்வான் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன் ....!
மேலும் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு எங்களின் சலாதினையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக!
மர்ஹூமா குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்...!
வெற்றி பெற்ற / பங்கேற்ற சகோதர்கள் குறிப்பாக, தொடர்ச்சியாக முதலிடம் வகிக்கும் ஹாபிழ் இஸ்மாயில் மற்றும் புதிதாக முதலிடம் பெற்ற ஹாபிழ் பாதுஷா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இஸ்மாயில் ஹாபிசா, பெங்களுருவில் இருந்த காலங்களில் உங்களுக்கு பாடம் பார்த்த தருணங்கள் ஓர் வசந்த காலம்.
இங்கு பதிவு செய்த அனைவரும் ஊர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என பதிவு செய்துள்ளனர். அதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. நமது வெற்றி குறித்து "தட்ஸ்தமிழ்" இணைய தளத்தில் இன்று வெளியான செய்தி...
இன்று தங்களின் வெற்றியை பற்றி தமிழகமே வியந்து இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. ஆம், உள்ளாட்சி இடைத் தேர்தலில் எங்கு பார்த்தாலும் அதிமுக வெற்றி என்று செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், நமதூரில் மட்டும் தான் சுயேட்சை வேட்பாளராகிய நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். தாங்கள் வேட்புமனு தாக்கல் சமயத்தில் சந்தித்த பிரச்சனைகளை அனைவரும் அறிவர்....அது எல்லாம் இவ்வெற்றிகாக தான்.
தங்களின் மீது நம்பிக்கை கொண்டு ஜமாஅத் வேட்பாளராக தேர்வு செய்து ,தங்களின் வெற்றிக்காக உழைத்த கோமான் ஜமாத்தார்கள் மற்றும் அருணாச்சலபுரம் சகோதர சமூகத்தாருக்கும் தாங்கள் அரும்பணி ஆற்ற வேண்டும்.
காயல் பட்டினத்து மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதை நம் தமிழக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்ற சகோ. சமஸ் அவர்களுக்கு எங்களின் கோடான நன்றி...!!!
இது குறித்து "தட்ஸ்தமிழ்.காம்" சார்பில் வெளியான இன்றைய செய்தியை காண,
http://tamil.oneindia.in/news/tamilnadu/kayalpattinam-people-agitate-against-dcw-firm-208877.html#cmntTop
இதற்கு அப்புறமாவது, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா?
கவிமகனாரின் கவிதையை படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவன் நான்...! "என்ன நீ இழந்திடுவாய்?" எனும் இக்கவிதை சற்று சிந்திக்க கூடியவையாய் அமைத்திருந்தன...அதிலும்...,
" உலகத்தின் துணையிருந்தும்
இறைவனின் தயவின்றி
என்ன நீ சாதிப்பாய்?
உலகம் உனைக் கைவிடினும்
இறைவனது தயவிருந்தால்
என்ன நீ இழந்திடுவாய்? "
......சிந்திக்க கூடிய சீரிய வரிகள்.
கவிமகனே...! எங்கள் காயல்பதி தந்த தமிழ் மகனே...! நீர் வாழீர்...! மென்மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.
செய்தி: புகாரி ஷரீஃப் 1435: இன்று அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் குழுமினர்!! நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒலி நேரலையில்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அபூர்வ துஆ பிரார்த்தனை நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடைபெற வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் இப்புனித துஆவின் பொருட்டால் நம் பிழைகளை பொருத்து, ஆரோக்கியமான வாழ்வை அனைவருக்கும் வழங்கிடுவானாக...!!!
நேர்ச்சை வினியோகம் நாளை (மே 01) என தவறாக பதிவு செய்ய பட்டுள்ளது. நாளை ஜூன் 1 ஆம் தேதி.
செய்தி: பெங்களூரு கா.ந.மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்குழுக் கூட்டம்! புதிய நிர்வாகிகள் தேர்வு!! விடைபெறும் துணைத்தலைவருக்கு பிரியாவிடை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிறப்பாக நடைபெற்று முடிந்த கூட்டத்திற்கு என் வாழ்த்துக்கள். குறிப்பாக, KWAB மன்றத்திற்கு நண்பர் KKS ஸாலிஹ் அவர்களின் பங்கு இன்றியமையாதது. மிகவும் அருமையான நண்பர்கள் மற்றும் எளிதில் அணுகக்கூடிய காக்காமார்கள் என நம் அபிமான நச்சத்திரங்கள் அனைவரையும் கண்டதும் மட்டில்லா மகிழ்ச்சி. கடந்த கால நினைவுகள் மனதில் உலா வருகின்றன.
புதிய நிர்வாகிகள் / உறுப்பினர்கள் அனைவருக்கும் என வாழ்த்துக்கள். மேலும் இம்மன்றம் நனி சிறப்புடன் செயல்பட இளைஞர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross