Re:எங்கே செல்கிறது நம் மாணவ ... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[21 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20542
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்! மிக அருமையான கட்டுரை. ஒவ்வொரு பெற்றோர்களும் இதனை படித்து பாடம் பெற வேண்டிய கட்டுரை.
நமதூரில் இன்றைய சூழ்நிலையில் காலையில் பிள்ளைகள் எழுந்த உடன் 6 மணிக்கே tuition க்கு செல்ல கூடிய நிலைமையை பார்க்கிறோம். தாய்மார்களும் tuition க்கு போ என்று அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஓத அனுப்ப வில்லை. பிள்ளைகளுக்கு ஓத தெரிய வில்லை. தொழுக தெரிய வில்லை. அடிப்படை மார்க்க கல்வி கூட தெரியாத சமுதாயமாக உருவாகி கொண்டு இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்களே. நாளை மறுமையில் பெற்றோர்களே தம் குழந்தைகள் வளர்ப்பு குறித்து இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.
இந்த நவீன காலத்தில் தம் குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற கட்டுரைகள் நம் மக்களுக்கு மிக மிக அவசியம்.
என் நண்பன் சாளை M.A.C. முஹம்மத் மொஹிதீன் B.E அவர்களுடைய கட்டுரை மிக அருமையாக இருந்தது. இந்த விஷயங்களை நம் ஊர் மக்களும் தெரிந்து தம் வாழ்க்கை முறைகளை மாற்றி தம் குழந்தைகளை நல்ல மக்களாக வளர்ப்பதற்கு இது போன்ற விசயங்களை notice களாக வெளி இட வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[15 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16933
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
إنا لله وانا اليـه راجعــــــون اللهــم اغـفـر له وارحمــه
எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கச்சபையின் செயலாளர் பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். அவர்கள் எங்களோடு பணியாற்றிய காலங்கள் எங்கள் நினைவுக்கு வந்தது. காலங்கள் மாறி வரும் நிலையில் மார்க்க கல்வி, Quran ஓதுவதை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்கள். எமது சபை இவர்களை இழந்தது மிகவும் கவலையாக உள்ளது.
மேலும் சமுதாய சேவைகளில் சொல்ல இயலாத அளவுக்கு அவர்கள் செய்த சேவைகளை யாராலும் மறக்க முடியாது. எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் எளிதில் தொடர்பு கொள்ள கூடியவர். அவர்கள் பல சமுதாய மக்களையும் இணைத்து வாழ சொல்லி தந்த பாடம்தான் HOLD HANDS TO SAVE PEACE.
அவர்கள் எங்கு சென்றாலும் HOLD HANDS TO SAVE PEACE என்ற இந்த ஒற்றுமையை நிலை நிறுத்தும் வாசகத்தை சொல்லி தருவது இன்றும் எங்கள் நினைவுக்கு வருகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுப்பானாக.
அவர்கள் பிரிவால் வாடும் நகரத்தலைவர், குடும்பத்தார்கள், உற்றார்- உறவினர்கள், நம் சபையின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வனாக. ஆமீன்!
BY
M.A.MOHAMED THAMBY B.SC.,
C/O.BARAKATH MAHAL
CHENNAI.
Re:மழ்ஹருல் ஆபிதீன் சார்பாக ... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12700
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட எமது சபையின் செயலாளர் பாளையம் இபுறாஹீம் அவர்களின் மகளும், நகர்மனறத்தலைவியுமான P.M.I. ஆபிதா B.Sc., B.Ed., அவர்களுக்கும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை 100 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கூட விடுமுறை நாட்களில் நமதூர் மாணவர்களுக்கு அடிப்படை மார்க்க கல்வியை போதிக்கும் நிறுவனமாகும் என்பதை நாம் அறிந்ததே.
மழை காலங்களில் மழை தண்ணீர் முழுவதுமாக ஒழுகுவதால் மத்ரஸா நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்தேன். மத்ரஸா இடித்துத்தான் கட்ட வேண்டும் என்பதையும் அறிந்தேன். மத்ரஸா photo பார்த்தாலே தெரிகிறது. நோன்பு முடிந்த பின் கட்டிட வேலை ஆரம்பிப்பதாக அறிந்தேன். ஆனால் இது வரை ஆரம்பிக்க வில்லை போல் தெரிகிறது.
கூடிய விரைவில் கட்டிட வேலையை ஆரம்பிக்க வேண்டுகிறேன். நிதி பற்றாக்குறை காரணமாக தாமதமாகி கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நமதூர் மக்கள் புரிவார்கள். அதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.
இன்றைய காலத்தில் அடிப்படை மார்க்க கல்வியாகிய ஓத, தொழுக கூட தெரியாத நிலையில் இன்றைய மாணவ சமுதாயம் உருவாகி கொண்டு இருக்கிறது. நாளை மறுமையில் தம் பிள்ளைகள் குறித்து, பெற்றோர்கள்தான் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மார்க்க கல்வி பயில இது போன்ற மார்க்க கல்வி கூடங்களுக்கு அனுப்பி பயன் பெறுங்கள். நம் பிள்ளைகளை சாலிஹான பிள்ளைகளாக வளர்க்க அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்!
வஸ்ஸலாம்.
80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
Re:புதிய நகர்மன்றத் தலைவர் ஆ... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[22 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11770
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் வாழ்த்து செய்தியை வரவேற்கின்றேன்.
எமது சன்மார்க்க சபையின் செயலர் பாளையம் இபுறாகீம் அவர்களின் சமூக சேவை ஊர் அறிந்ததே. அவர்களின் மகள் ஆபிதா அவர்களை நம் ஊர் மக்கள் ஊர் தலைவியாக தேர்வு செய்து இருப்பதை வரவேற்கிறேன்.
ஆபிதா அவர்களின் சமூக பணி தொடர வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
ஆபிதா அவர்களின் இந்த சமுதாய பணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பையும் தருவதோடு, உங்கள் பொது சேவைகளில் நாங்களும் ஈடுபட எந்நேரமும் தயாராக இருக்கிறோம்.
HOLD HANDS TO SAVE PEACE.
ஒன்று பட்டு வாழுவோம்
ஒருமை பாடு பேணுவோம்
நன்றியோடு தாயகத்தின்
நன்மை மேவ நாடுவோம்.
பண்டு நமது பெருமை தன்னை பாரினற்கு சாற்றுவோம்
பண்பினோடு எவரும் வாழ பாடமினிது ஊட்டுவோம்
நாடு நம் சமூகம் ஓங்க நாளும் சேவை ஆற்றுவோம்
கேடு செய்ய எண்ணுவோரின் கொட்டமிங்கு வீழ்த்துவோம்.
By
M.A.MOHAMED THAMBY B.Sc.,
(MEMBER OF VOICE OF MARO)
Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[22 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11768
புதுப்பள்ளி ஜமாஅத்தின் வாழ்த்து செய்தியை வரவேற்கிறோம்.
நம் ஊர் மக்கள் நமது புதுப்பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த பெண்மணி ஆபிதா அவர்களை ஊர் தலைவியாக தேர்வு செய்து உள்ளார்கள்.
எனவே நாம் ஆபிதா அவர்களின் அனைத்து சமுதாய நலப்பணி முயற்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயல் படுவதே நம் புதுப்பள்ளி ஜமாஅத் இந்த ஊர் மக்களுக்கு செய்யும் மிக பெரிய கடமையாகும்.
எனவே, இந்த ஊர் மக்கள் போற்றும் வண்ணமாக ஒன்றிணைந்து செயல் பட வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக ஆமீன்.
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
Re:4300 வாக்குகளுக்கும் கூடு... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[21 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11543
17:81 وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
17:81. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
21:18 بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
வெற்றி பெற்ற ஆபிதா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
நம் ஊர் மக்கள் உசாராகி விட்டார்கள். சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி யாரும் நம் ஊரை ஏமாற்ற முடியாது. இனி நமது ஊரை பணத்தால் வெல்ல முடியாது.
சகோதரி ஆபிதவின் சேவைகள் தொடர என் வாழ்த்துக்கள்.
மேலும் வெற்றி பெற்ற சாமு காக்கா அவர்களுக்கும், எனது நண்பன் ஜஹாங்கீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்களது பொது சேவைகள் ஊரார் போற்றும் வண்ணமாக இருக்க வேண்டும். புதிய காயல் மாநகரத்தை உருவாக்குவோம்.
வஸ்ஸலாம்.
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[09 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10045
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரி ஆபிதா அவர்கள் நல்ல ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இதற்காக ஊர் மக்களும், ஊர் ஜமாத்துகளும், ஊர் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்தால் நிச்சயமாக ஒரு சிறந்த காயல் மாநகரை உருவாக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!
31:22. எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.
உங்கள் சேவைகள் தனி நபருக்கு சாதகம் இல்லாமல் ஊருக்கு நன்மை தரும் முகமாக இருக்க வேண்டும். ஜாதி, மதம், கொள்கைகள் பாராமல் அனைத்து தரப்பினரும் பாராட்டும் முகமாக இருக்க வேண்டும். உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
HOLD HANDS TO SAVE PEACE.
ஒன்று பட்டு வாழுவோம்.
ஒருமை பாடு பேணுவோம்.
நன்றியோடு தாயகத்தின்
நன்மை மேவ நாடுவோம்.
நன்மை மேவ புத்தகத்தை ஆதரிப்போம்.
வஸ்ஸலாம்.
By
M.A.MOHAMED THAMBY B.Sc.,
C/O.BARAKATH MAHAL,
CHENNAI.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross