செய்தி: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAr. Habeeb Rahman (Abu Dhabi)[13 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22109
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். உருவத்திலும் குரலிலும் ஒரு கம்பீரம் இருக்கும்.! எப்போதுமே கலகலப்பாக பேசும் அவர்களின் உருவம் இன்னும் என் முன் நிழலாடுகின்றது.நான் சமீபத்தில் ஊரில் இருந்த சில நாட்களில், அவர்களின் சுகவீன செய்தி எனக்கு தாமதமாக கிடைத்ததனால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களின் அனைத்து பாவங்களையும் வல்ல இறைவன் பொறுத்தருளி மேலான சுவனபதியை கொடுப்பானாக! அவர்களை இழந்து வாடும் ஹைதர் அலி காக்காவிற்கும் அவர்களின் அனைத்து சொந்தகளுக்கும் வல்லோன் பொறுமையை கொடுக்க துவா செய்கின்றேன்!
Re:விண்ணை முட்டும் செயற்கை ந... posted byhabeeb rahman (abu dhabi)[16 March 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20638
அருமையான கட்டுரை! நம் ஊரில் உங்கள் நியூ யார்க் அளவிற்கு விலை ஏறுவதற்கு காரணங்கள் நீங்கள் சொன்ன மாதிரி இரண்டு விசயங்கள்! ஓன்று பெண்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம். இன்னொன்று நம் பலவீனத்தை முதலாக்கும் 'உள்ளடி' புரோக்கர்கள்!
முதலாவதை ஒழித்துகட்ட பல வருட திட்டங்களும் செயல்பாடுகளும் அதற்கான தகுந்த மாற்று முறைகளும் (நம் ஊரில் இருக்கும் சின்ன சின்ன வீடு அமைப்புகளினால் 'பல குடும்பம் ஒரு வீடு' அமைப்புக்கு சில நடை முறை சிக்கல்கள் இருக்கும்) தேவை. ஆனால் இரண்டாவது பிரச்சினைக்கு வழி நம் கையிலேயே இருக்கின்றது! நாம் யாரும் இது போன்ற புரோக்கர்களை அணுகக்கூடாது! மற்ற பகுதகளில் இருப்பது போல் நேரிடையாக வாங்க விற்க என்று ஒரு ரியல் எஸ்டேட் வெப்சைட் வேண்டும்!
நிலத்தை வாங்கும் நம்மை போன்ற ஆட்கள் அதை அத்தியாவசிய தேவை இன்றி, உடனே விலை ஏற்றும் முகமாக விற்கவே கூடாது! நிலத்தை அதன் உண்மை விலையை உணர்ந்து, எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவில்லை, அந்த விலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.! இதெல்லாம் சாத்தியமே! அப்படியே நிலம் வாங்கி விற்று காசு பார்க்க நினைப்பவர்கள், அட்லீஸ்ட் நம் ஊரை அவாய்ட் பண்ணி வெளியூரில் வாங்கலாமே! இதையே நானும் இதுவரை பின் பற்றி வருகின்றேன்! இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்! இன்ஷா அல்லாஹ!
Re:கூடங்குளமும், காயல்பட்டின... posted byhabeeb rahman (abu dhabi)[06 March 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20614
நண்பர் பஷீர் அவர்களின் கட்டுரையை படிக்கும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது! கட்டுரையாளரின் நோக்கம் அணு உலையை ஓய்பதா? இல்லை முஸ்லிம்லீக்கை ஒழித்து கட்டுவதா?நாம் ஒரு கட்டுரையை எழுதும்போது செயல் பாட்டின் மீது கவனம் இருந்தால் நடு நிலை இருக்கும்!செய்தவர்கள் மீது இருந்தாலோ? இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம்.... ப்ளீஸ்!
அவரின் கணக்குகள் கேற்பதுக்கு provoking ஆகத்தான் இருக்கின்றது. ஆனால் இந்த கணக்குகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதும், அது மற்ற கணக்குகளுடன் ஒப்பிட்டு கூட்டிகழித்து பார்க்க பட்டதா என்பதும் சந்தேகமே! நமக்கு தேவை இங்கு Provoking mentality அல்ல,மாறாக நாலையும் சேர்த்து பார்த்து நடை முறை சத்தியங்களை உணர்ந்து செயல்படும் maturity தான்! பஷீர் பல கணக்குகளை காட்டி கூடம்குளத்தில் எடுக்கும் மின்சாரம் ஜுஜுபி என்கிறார். கம்மென்ட் பகுதியில், லெப்பை வேறு சில கணக்குகளை காட்டி அது பூதம் என்கிறார். எதை நம்புவது? (லெப்பை அவர்களே, நீங்கள் எல்லா கமெண்ட்ஸ் சேர்த்து ஒன்றாகவே சொல்லலாம், பிட்டு பிட்டாக பிரிக்க தேவை இல்லை)
நம் நாட்டில் விடுங்கள்! மனித உரிமைகளை தலையில் தூக்கி நடக்கும் பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளில் இன்று வரை ஏன் அணு உலையை கொண்டு அதிக மின்சாரம் தயாரிகின்றார்கள்? புகொசிமா சம்பவத்திற்கு பின் இழுத்து மூடியிருக்கலமே? ஏன் அது முடியும் வரை காத்திருக்க வேண்டும்? நேற்று இன்கிர்ந்து வெளியாகும் பத்திரிகையில் ஒரு கட்டுரையை படித்தேன். சொடுக் என்றது! பெட்ரோல் எரிப்பதைகாட்டிலும் பல மடங்கு கார்பன்கள் வெளியாவது நிலக்கரியை எரிப்பதினால்தான். சுருங்க சொல்லின் பல்லாயிரம் ஊர்திகளில்றுந்து வரும் புகையை விட மோசமானது சில அனல் மின் நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகளிருந்து வரும் புகைதான்!
ப்ரோவோகிங் முடிவுக்கு போகும் முன் நாலையும் கேளுங்க!
Re:கூடங்குளமும், காயல்பட்டின... posted byHABEEB RAHMAN (abu dhabi)[03 March 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20585
சகோ. அமீர் சுல்தான் அவர்களே!
அணு உலைகளின் ஆபத்துகளை நாம் ஒன்றும் குறைவாக மதிப்பிடவில்லை! ஆனால் மற்ற தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை உங்களை போன்றவர்கள் குறைவாக எடைபோடுகின்றீர்கள் என்றுதான் சொல்கின்றோம். இதையும் ம க இ க வந்து சொன்னால்தான் ஏற்பீர்கள் போல?
அடிக்கடி செர்னோபில் செர்னோபில் என்று குறிப்பிடுவது இருக்கட்டும். அந்த கசிவில் இதுவரை 30-40 பேர்களுக்கு மேல் இறக்கவில்லை என்று கொஞ்சம் google செய்து பாருங்கள் தெரியும்! ஆனால் உங்கள் அறிவில் குறைந்த ஆபத்து உள்ள போபால் விசா வாய்வினால் மூன்றே நாட்களில் விட்டில் பூச்சிகள் மாதிரி தெருவில் வீழ்ந்து மடிந்தது 3000 பேர்களுக்கு மேல்! இதுவரை கிட்டத்தட்ட 25000௦௦௦ பேர்களுக்கு மேல் இதன் விளைவாக இறந்திருக்கலாம் என்று அண்மையில் வெளியான ஒரு நடுத்தர அறிக்கை தெரிவிக்கின்றது. அதை யாரும் இங்கு குறிப்பிட காணோம்!
அமீர் சுல்தானுக்கு தேவை என்றால் நாம் ஆதாரத்தை அனுப்பலாம்! இது போல் இன்னும் எத்தனையோ தொழிற்சாலைகள் நம் நாட்டில் இப்போதும் இருகின்றது, நம் அருகில் இருக்கும் DCW உட்பட! எல்லா காலமும் நிரந்தரமாக உயிருக்கு ஊரு விளைவிக்கும் இது போன்றவைகளுக்கு எதிராக போராடிவிட்டு பின்னர் கூடங்குளத்துக்கு வரலாம்!
கழிவுகளை களைவது பற்றி நீங்கள் மட்டும்தான் உதயகுமாரின் உதவியோடு, சவூதியிலிருந்து கவலை பட முடியும், இதில் தொடர்புடைய பல வின்ஞானிகள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், முன்னால் ஜனாதிபதி உட்பட நல்ல பொறுப்புள்ள பிரஜைகளுக்கு சிந்திக்கவோ கவலைப்படவோ முடியாது என்று நீங்கள் நினைப்பதுதான் தவறு!
புற்றீசல்கள் போல் பெருகிவரும் கொடிய விளைவுகளை நிரந்தரம் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை திறப்பதை தடுக்க வேண்டும். நீங்கள் தொடங்குங்கள் ஆதரவு தருவார்கள் என்று கிண்டலடிக்காமல், ம க இ க போன்ற உள்ளத்தில் உறுதி உள்ள (கொள்கையில் குளறுபடிகள் இருந்தாலும்) இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினால் மக்களின் ஆதரவும் கிடைக்கும். பயனும் ஏற்பட வாய்ப்பு உண்டு, என்று நினைத்ததால்தான் அப்படி சொன்னோம்!
Re:கூடங்குளமும், காயல்பட்டின... posted byHABEEB RAHMAN (abu dhabi)[02 March 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20579
எழுத்தாளரும் நல்ல சமூக நல சிந்தனையாளரும் எனது நண்பருமான பஷீர் அவர்களின் கூடங்குளம் பற்றிய இந்த கட்டுரையின் கருத்தோடு இங்குள்ள பெரும்பான்மையான மக்களைபோன்று எனக்கும் உடன் பாடில்லை என்றே சொல்வேன்.
அணு மின் நிலையங்களால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றி நாம் எதிர் வாதம் புரிய வில்லை. அது ஓரளவு உண்மைதான். ஆனால் இங்கு பெரும் அளவில் மின்சார உற்பத்தி செய்ய பயன் படுத்தும் அனல் மின் நிலயங்களினால் ஏற்படும் விளைவுகள் அதைவிட மோசமானது என்பதனையும் சிந்திக்க வேண்டும்.
அணு மின் நிலையங்களின் ஆபத்து எப்போதாவதுதான்! முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பாக இருக்கும் கல்பாக்கம் தாராப்பூர் இதற்கு உதாரணம். ஆனால் நிரந்தரம் சுற்றுபுறத்தை பாதிக்கும் அனல் மின் நிலையங்களுக்கு இது எவ்வளவோ மேல்.
ஒஜோனை ஓட்டை போடும் கார்பன்களை அள்ளி கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அதனை சுற்றியிருக்கும் மக்களுக்கு பல சுவாச தொடர்பான நோய்களை உண்டாக்குகின்றது. நீர் நிலையையும் மாசு படுத்துகின்றது.
தமிழ் நாட்டிலேயே மிக பெரிய அனல் மின் நிலையத்தை 15 km (நேர் தூரம்) அருகில் வைத்து கொண்டு நாம் படும் கஷ்டங்களுக்காக குரல் கொடுக்க இதுவரை எந்த உதயகுமாரும் வரவில்லை. 75 km அப்பால் இருக்கும் அவர்களுக்கு குரல் கொடுக்க நாம் ஏன் போக வேண்டும்?
இது அவ்வளவு கொடுமையானது என்றால் ஏன் 14000 கோடி மக்கள் பணம் செலவாகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? 25 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டம் உருவாகிய நேரத்திலோ, அல்லது குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு முன் இதன் கட்டிட பணிகள் தொடங்குவதற்கு முன்போ இதே வீரியத்தில் போராட்டத்தை நடத்தியிருக்கலாமே?
அப்போதெல்லாம் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக குரல் கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்? கேன்சருக்கு அணு மின் நிலங்கள் மட்டும்தான் காரணம் என்றால் நம் ஊரில் பல ஆண்டுகளாக இருக்கும் கேன்சருக்கு என்ன சொல்வது? கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக காயல் பட்டினத்தில் நிதி திரட்டிய இந்த ம க இ க வினர் நிரந்தரம் dcw போன்ற தொழிற்சாலைகளினால் அவதிப்படும் நம் ஊர் மக்களுக்காக போராட அல்லது நிதி திரட்ட கூடங்குளம் போவார்கள?
காவி துவேச படைகளுக்கு எதிரான அவர்களின் பல போராட்டங்கள் போற்றப்படவேண்டியதுதான். ஆனால் அது அவர்களின் கண்மூடித்தனமான எல்லா செயல்களுக்கும் ஆதரவளிக்கும் நிலையில் கொண்டு போய் விடக்கூடாது.!
காற்றாலை சூரிய ஒளி போன்ற வைகளில் மின்சாரம் பெரும் அளவில் உருவாக்க இன்னும் பல தடைகள் இருக்கின்றது என்பதை வல்லுனர்கள் கூறுகின்றார்கள். அதனால்தான் இது போன்ற முறைகளுக்கு கோடிகளை வாரியிறைக்கும் அமீரகம் போன்ற நாடுகள்கூட கூடவே அணு மின் நிலையங்களை உருவாக்கும் வேலைகளையும் தொடங்கிருகின்றது.
கூடங்குளத்தில் இனியும் நிறுவ இருக்கும் ரியாக்டர்களை வேண்டும் என்றால் தடுத்து நிறுத்த அவர்களோடு நாமும் சேர்ந்து போராடலாம். ஆனால் இதுவரை நிறுவிய ரியாக்டர்களை செயல் படாமல் தடுக்கும் அவர்களின் போராட்டத்தை நாம் ஒரு போதும் ஆதரிக்க முடியாது, நாம் செலவு செய்த 14 ஆயிரம் கோடிகளை வெளிநாட்டிலிருந்து உதயகுமாரின் சகாக்கள் கொண்டுவந்து நம்மிடம் கொட்டினால் ஒழிய!
கூடன்குளத்திருக்கு 70 KM சுற்றளவில் இருக்கும் 15 லட்சம் மக்களுக்காக போராடுபவர்கள் கல்பாக்கத்திற்கு 70 KM சுற்றளவில் இருக்கும் 85 லட்சம் மக்களுக்காக என்ன செய்ய போகின்றார் என்பதனையும் அறிய விருப்பம்!
Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!... posted byHabeeb Rahman (Abu Dhabi)[14 February 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20524
எனது சகோதரன் அப்துல் ஹமீத் (சாகுல் ஹமீத் பல வருடங்களுக்கு முன்னர் ஷாஹ் அப்துல் ஹமீத் ஆனதும் சில வருடங்களுக்கு முன்னர் அப்துல் ஹமீத் என்ற அழகான பெயரில் நின்று விட்டதும் அவனது வேறை அறிந்த என்னை போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும்).
பல வருடங்கள் முன்னர் ரூட்ஸ் தமிழில் வெளிவந்தபோது அதை அவனுடன் சேர்ந்து வெறித்தனமாக படித்து முடித்தவர்களில் நானும் ஒருவன்.அவ்வளவு அருமையான நாவல். இருந்தாலும் அதனை எழுதியது மாற்று மத நண்பராக இருந்ததால் இஸ்லாத்தை போற்றும் மூல நாவலின் பல விசயங்களை வசதிக்கு ஏற்ப விட்டதை உணர்ந்து அதன் மூல நாவலின் முழுகருத்துகளையும் உட்படுத்தி மீண்டும் வெளியிட்ட பெருமை அவனையே சாரும். இது போன்ற இன்னும் பல நாவல்களையும் எழுதியுள்ளான், அண்மையில் எழுதிய "இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்' என்ற கட்டுரை உட்பட!
அது துபாயில் குற்றாலத்தில் விற்கும் சுண்டல் போல் சுட சுட விற்று தீர்ந்தது அங்கு இருந்த அனைவரும் அறிந்தது! ஷார்ஜா புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே ஒரு தமிழ் புத்தகம் என்பது அதற்கு இன்னும் பெருமை சேர்க்கும்.
காயல் பட்டினத்தின் வேர்கள் நம் அனைவருக்கும் அரசால் புரசலாக தெரிந்திருந்தாலும், அதனை இனியும் ஆழமாக ஆராய்வது நம் அனைவருக்கும் கடமை என்றுதான் சொல்வேன். இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் நூறு இருநூறு வருடங்கள் பழமையான சுர்சுகளைகூட தலையில் தூக்கி கொண்டாடுவதை நேரில் கண்டிருகின்றேன். நாமோ கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் பழமையான பள்ளியை ஊரில் வைத்துகொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம்.
architect என்ற முறையில் இந்த பள்ளிகளின் பழைய வடிவத்தை மறுபடியும் வெளிக்கொண்டு வருவது நம் ஊருக்கு இனியும் பெருமை சேர்க்கும் என்று நம்புகின்றேன்.அதன் புனரமைப்புக்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நினைவு சின்னங்கள் நம்மிடையில் வாழ்வது, வருங்கால கம்ப்யூட்டர் சந்ததியினருக்கு நமக்கும் நம் மார்கத்தின் மூல வித்துகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்திக்கொண்டே இருக்கும். அவர்களை நாகரிகம் என்ற பெயரில் கூத்தடிப்பதை ஓரளவாவது தடுக்கும்!
Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட... posted byHabeeb Rahman (Abu Dhabi)[04 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15510
அன்புள்ள முத்துவாப்பா தம்பி அவர்களுக்கு!
நான் கே டி எம் தெருவில்தான் வசிக்கின்றேன். இங்குதான் கத்தரிக்காய் முத்தி முப்பது வருஷம் ஆகிவிட்டது. உங்கள் தெரு கத்தரிக்காய் இப்போதுதான் செடியில் பூபூக்க தொடங்கியிருகின்றது! அது முத்தி கே டி எம் தெரு லெவெலுக்கு வர இன்னும் முப்பது வருஷம் ஆகும்!
ஊரில் இருக்கும் நேரங்களில், நான் தினமும் துளிர் வரை நடப்பது வழக்கம் என்பதால் எனக்கும் தெரியும்! உங்கள் காக்கா கூட இதை உணர்ந்துதான் வரும் முன் காப்போம் என்று சொல்கின்றார்! நீங்கள் இப்போது உங்கள் ரோட்டை இழுப்பது விவகாரத்தை கிடப்பில் போடத்தான் உதவும் என்பதால்தான் நான் அதனை குறிப்பிட்டேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை!
"ஒருவழி" இனியும் உருவாகவிட்டால் நாங்களும் அங்குதான் வரவேண்டியிருக்கும். துளிர் வழி புது ரோடு திட்டம் நம்மை விட்டு தூரம் போய் கொண்டிருக்கின்றது. அடைக்கலபுரம் வழியில் அடையாலமெல்லாம் போட்டுவிட்டதாக கேள்விப்படுகின்றோம்.
இந்த நிலையில் அதனை எதிர்பார்த்து உள்ளூரில் "ஒருவழி"யை விட்டு விட்டால், பின்னர் வேறு ஒரு வழியும் பிறக்காது! அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகிவிடும்!
நாம் அந்த வழியையும் முயற்சிக்கலாம். அது வரை இந்த வழியையும் பயன் படுத்தலாம். உங்கள் கத்தரிக்காய் முத்தும் முன் வேறு ஒரு வழியும் பிறக்காமலா போய் விடும்?
Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட... posted byHabeeb Rahman (Abu Dhabi)[03 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15456
இங்கு சீனாவும் வெள்ளியும் டாக்டரும் நியாயத்திற்காகவும் உரிமைக்காகவும் ஒரு வழி பாதையை வழியிருத்தி கை வலிக்க கம்மென்ட் எழுதி "ஒருவழி" யானது ஒரு புறம்! அதனை எப்பாடு பட்டாகினும் தங்கள் தெரு வழி விடுவதில்லை என்று கங்கணம் கட்டிகொண்டு, நெசவு ஜமாஅத் மறு புறம்! இது இரண்டு தெருவுக்கும் இடையில் மட்டும் நடக்கும் சண்டை! நமக்கேன் வம்பு என்று, வேடிக்கை மட்டும் பார்க்கும் கூட்டம் இன்னொரு புறம்! வேடிக்கை கூட்டம் நினைவில் கொள்ளட்டும்! திருநெல்வேலி பஸ் நிலையதில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் பஸ் கிடைக்காமல் "ஊர்வழி" போகும் பஸ்கல் கூட "நேர்வழி" ஆகும்போது அது உங்களையும் பாதிக்கும். இனி வரும் காலங்களில் திரூநேல்வேலியிலிருந்து ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கும்! தயாரா?
ஊர் நலன் என்று சொல்வார்கள்! ஊர் ஒற்றுமை இருக்காது! ஊர் ஒற்றுமை என்று சொல்வார்கள்! ஊர் நலன் இருக்காது! இதோ, இப்போது ஊர் நலனும் ஒற்றுமையும் (வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை விட்டு விடலாம் ) ஓர் அணியில் நின்று நெசவு ஜமாத்தை வேண்டுகின்றது! செவி சாய்க்க விட்டாலும் பரவாயில்லை!நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ரேஞ்சுக்கு மாற்று வழி "மேப்போடு" திரிய வேண்டாம்!
இங்கு கிடைத்த கேப்பில், தமக்கு "வேண்டாதவருக்கு" ஆப்பு வைக்க ஒருவர்! அவரை தாக்கும் முகமாக தமக்கு "வேண்டியவருக்காக" வக்காலத்து வாங்க இன்னொருவர்! நியாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், இதனால் திசை திரும்பி விட வேண்டாம்! உரிமையில் உங்கள் குரல் ஒளித்து கொண்டே இருக்கட்டும்!
சிங்கிள் வழிக்கே சிங்கி அடித்து கொண்டு இருக்கின்றோம்! நாலு வழி கற்பனையோடு என்று சரக்குகளை இறக்கி விடும் சகோதரருக்கு ஒன்றை சொல்லி கொள்கின்றேன்! கற்பனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! எனக்குகூட பேயன்விலையில் ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வருவது மாதிரியும் அதில் இறங்கி வீட்டுக்கு பத்தே நிமிடத்தில் வந்து சேர்வது மாதிரியும் கனவு வருவது உண்டு! தொலை நோக்கு பார்வை என்று காத்திருக்க முடியுமா? சகோதரர் சொல்லும் ரோடுக்கு இன்னும் இருபது வருடம் காத்திருக்கலாம்! ஆனால் அது வரும் வரையாவது நெசவு தெருவை பயன்படுத்தி கொள்ளலாமே? இங்கு ஒரு வழி பாதை நடைமுறை படுத்தி விட்டவுடன் அந்த திட்டங்களெல்லாம் (ஒருவேலை உருவாகினால்) ஒன்றும் கேன்சலாகிவிடாது!
திருச்சியும் திருநெல்வேலியும் பை பாஸ் அடைவதிற்கு கால் நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது! காயல் பட்டினம் என்ன, அண்ணா ஹசாரே உடைய அஜண்டாவிலா இருக்கின்றது, உடனே கிடைக்க? தள்ளிப்போக வைக்கும் சாக்குகள், உங்களின் சரக்குகள்! தயவு செய்து புரிந்துகொள்ளவும்!
சந்தடி சாக்கில், LF ரோட்டையும் சந்தைக்கு கொண்டு வருகின்றார்கள். LF ரோட்டில் எத்தனை வீடுகள் ரோட்டை நோக்கி இருக்கின்றது? முக்கால்வாசிக்கு மேல் குறுக்கு ரோட்டில் தானே இருக்கின்றது? குறுக்கு ரோட்டில் ஒன்னும் பஸ் போகவில்லையே! பிள்ளைகள் விளையாட, பந்தல் போட அது போதாதா?
நகர் மன்றம் இப்போது எங்கள் கையில் ஒன்றும் இல்லை என்று "கை" கழுவலாம்! நெடுஞ்சாலைதுறை முடிவு வெளியாகி அது நெசவு தெருவுக்கு எதிராக அமைந்தால், அப்போது அது செயல் பட வேண்டியிருக்கும், தம் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி! அப்போது தயங்கினால் நான் மேற்சொன்ன சீனாவும், வெள்ளியும் டாக்டரும் அவர்களையும் ஒரு கை பார்ப்பார்கள், நினைவிருக்கட்டும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross