அல்லாஹ் த ஆலா மர்ஹூமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து உயர்ந்த பதவியான ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் உற்றார், உறவினர்கள், மற்றும் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையினை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
செய்தி: கடற்கரை குருசடி மின்னிணைப்பு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த மின்வாரியம்: “நடப்பது என்ன?” குழுமம் கண்டனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.I.மூசா நெய்னா (புரைதா - சவூதி அரேபியா )[25 May 2017] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45539
நடப்பது என்ன குழுமம். சட்டவிரோத குருசடி விசயத்தில் மேற்கொண்ட, மேற்கொள்ளவிருக்கின்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
இந்த விசயத்தில் சட்டரீதியான தொடர் நடவடிக்கை எடுப்பதின் மூலம் மாவட்ட மற்றும் உள்ளூர் மின்வாரிய அதிகாரிகள் சட்டபடி தண்டிக்கபட வேண்டும். இதற்கு நகர் நல விரும்பிகள் ஒத்துழைக்க வேண்டும்.
செய்தி: காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார்! பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நமது நகர மக்களின் நெடு நாள் தேவையான 2 - ம் குடி நீர் திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மூலமாக தொடங்கி வைத்ததற்கு பாராட்டுக்கள்.
பொன்னங்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் நகர பொதுமக்கள் கலந்து கொண்டதாக செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் செய்தியில் இணைக்கபட்ட புகைபடங்களில் நமதூரின் முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொண்டதாக தெரியவில்லையே. இத்திட்டம் நிறைவேற பல வழிகளில் பாடுபட்டவர்களை பாராட்டும் விதமாக ஒரு விழா ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.
மேலும் , அனைத்து கட்சி பிரமுகர்கள், குறிப்பாக இத்திட்டத்திற்கு முதலில் வித்திட்ட திராவிட முன்னேற்ற கழகம், பின்னர் இத்திட்டம் தொடர குரல் கொடுத்த முஸ்லிம் லீக், அதிமுக போன்ற கட்சி பிரமுகர்கள், முன்னால் நகராட்சி தலைவர்கள், குறிப்பாக மதிப்பிற்குரிய வாவு. அப்துர்ரஹ்மான் ஹாஜியார், மதிப்பிகுரிய சகோதரி ஆபிதா ஷேக் அவர்கள், மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், அனைத்து ஜமாத்தின் ஒருங்கிணைப்பாக இருக்ககூடிய ஐக்கிய பேரவை நிர்வாகிகள் மற்றும் பலர் திரளாக பங்கேற்றிருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
இவர்களை எல்லாம் புறக்கணித்ததின் நோக்கம் என்ன. முன்னால் சேர்மன் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களும் , சகோதரி ஆபிதா ஷேக் அவர்களும் இத்திட்டம் விரைவாக நிறைவேற எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் தற்போது வாட்ஸப் குழுமம் என்ற பெயரில் எங்களால் தான் இத்திட்டம் நிறைவேறியது என்று பறைசாற்றி கொண்டு இத்திட்டத்தின் முழு பலன்களையும் சொந்தம் கொண்டாடுவதை ஏற்று கொள்ளமுடியாது.
நமதூரின் பெரியவர்களின் கடின உழைப்பாலும் , முயற்சியாலும் நமதூருக்கு எத்தனையோ நல்ல பல காரியங்கள் நடைபெற்றுள்ளன. அது போல் தான் இத்திட்டமும். இதில் பலருக்கும் பங்குண்டு.
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.I.மூசா நெய்னா (புரைதா - சவூதி அரேபியா )[30 October 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44846
நடப்பது என்ன குழுமத்தின் இச்செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது.
முதற்கட்டமாக மக்களுக்கு பைகளை வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தது நன்று.
சமீப காலமாக வெளியூரில் இருந்து மக்கள் அதுவும் பண்டிகை காலங்களில் அதிகமாக வருவதினால் கடற்கரை மணலின் இயற்கை தன்மை மாறுபட்டு மாசுபடுகிறது. எனவே இது போன்ற விழிப்புணர்வின் மூலம் மக்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து அவர்களே முடிந்த அளவு சுத்தம் செய்தால் மணலின் இயற்கை தன்மை மாறுபட வாய்ப்பு இல்லை.
Re:...வாழ்த்துக்கள் posted byM.I. முசா நெய்னா (புரைதா - சவூதி அரேபியா )[19 May 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43865
அண்ணாச்சியின் வெற்றி ஏற்கெனவே தெரிந்தது தான். அண்ணாச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காயல் மாநகர மக்கள் என்றென்றும் திமுகவின் தலைமையின் பக்கம் இருக்கும் வரையில் திமுகவை வெல்ல முடியாது. திருச்செந்தூர் தொகுதி மக்கள் குறிப்பாக காயல்மாநகர மக்கள் என்றைக்கும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்களிப்பதில்லை. அதனால் தான் அண்ணாச்சி போன்ற நல்லவர்கள் மிக சுலபமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல முடிகிறது. நமது தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி அவர்கள் தான் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடில்லை.
Re:... posted byM.I. முசா நெய்னா (Buraidha - Saudi)[19 May 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43861
அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் இறைவனுக்கே.. நமது மண்ணின் மைந்தர் சட்டமன்ற உறுப்பினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த லீக் கட்சியின் தலைமைக்கும் , வெற்றி பெற அயராது பாடுபட்ட திமுக கட்சி தலைமை மற்றும் தொண்டர்களுக்கும் நமது காயல் மாநகர மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க கடமை பட்டுள்ளோம். சட்டமன்றத்தில் தங்களது திறமையை பயன்படுத்தி, தொகுதி மக்களுக்கும் , நமது சமுதாய மக்களுக்கும் தொண்டாற்றி , அத்தொகுதியின் நிரந்தர உறுப்பினர் என்ற பெருமையை வரும் காலங்களில் தக்க வைத்து கொள்ள வாழ்த்துகிறேன்.
உங்கள் தலைவியின் பிறந்த நாளை கொண்டாடுவதில் இருக்கின்ற அக்கறை, தற்போது கொடி ஏற்றி விழா எடுத்த ஸி - கஸ்டம்ஸ் ரோடு 2 வருட காலமாக மிகவும் மோசமாக உள்ளதே. நகராட்சியில் புதிதாக ரோடு போட ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி பல மாதங்கள் ஆகியும் ஆணையரின் அலட்சியத்தால் செயல் வடிவம் பெறாமல் கிடப்பில் உள்ளதே. அது விசயமாக ஆளும் கட்சியான தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் பொறுத்தருளி ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் இணையதளம் நாளுக்கு நாள் புது புது பொழிவுடன் இன்றைய கால தொழில் நுட்பத்துடன் update செய்வதினால் மற்ற இணையதளங்களுக்கு ஒரு எடுத்து காட்டாக அமைகிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் Home Page ஐ பார்க்கும் பொது ஒரு Attractive Look உள்ளது. கிட்டத்தட்ட எல்லா அன்றாட செய்திகளும், வாசகர்கள் மிக எளிமையாக அவர்களுக்கு தேவையான பகுதியினை தேர்ந்தெடுத்து செய்திகளை அறிந்து கொள்ளவும், பழைய செய்திகளை Recall செய்து பார்க்கவும் வசதியாக உள்ளது.
மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross