அடக்க முடியாமல் வந்த சிரிப்பு! posted byM.S. Abdul Hameed (Dubai)[02 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36955
"அந்த மர்மப்பொருள் வேறு ஒன்றுமில்லை. மூக்குத் தூள் பட்டைதான்." - இந்த வரிகளைப் படித்தவுடன் என்னை அறியாமல் கட கட வென சிரித்துவிட்டேன்.
இதைப் படித்த பொழுது மறைந்த எஸ்கே மாமா தமாஷாக சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அதுவும் இந்தக் கட்டுரை ஆசிரியர் சொன்னதுதான்.
நமது பெரியோர்களிடம் முன்பு தூள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததல்லவா... நோன்பு சமயத்தில் பகலெல்லாம் தூள் போடாமல் ஏக்கத்தோடு இருப்பவர்கள் நோன்பு துறக்கும் சமயம் ஒரு கையில் பேரீத்தம் பழத்தையும், இன்னொரு கையில் தூளையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு மோதினாரின் பாங்குக்காக தயாராக காத்திருப்பார்களாம்.
மோதினார் "அல்லாஹு அக்பர்..." என்று இழுத்து பாங்கை தொடங்குவதுதான் தாமதம்... பசி மற்றும் தூள் வெறியில், வாய்க்கு போக வேண்டிய பேரீத்தம் பழம் மூக்குக்கும், மூக்குக்கு போக வேண்டிய தூள் வாய்க்கும் போகுமாம்.
இதனை எஸ்கே மாமா தமாஷாக சொல்லும்பொழுது வயிறு வலிக்க சிரித்து விழுவோம்.
மிக அருமையான கட்டுரை. எத்தனையோ இன மக்கள் தங்கள் அடுத்த தலைமுறைக்கு கதை போல சொல்லித்தான் தங்கள் பரம்பரை வரலாறை தக்க வைத்துக்கொண்டார்கள்.
இன்று குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் அரிதாகி வருகிறது. எந்த ஒரு விஷயத்தையும் கதை போன்று சொன்னால் அது குழந்தைகளின் உள்ளங்களில் அழகாக பதிந்து விடும். அதனால்தான் நம் உம்மாமார்கள் நாம் குழந்தைகளாக இருந்த பொழுது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறையும், நபிமார்கள், சஹாபாக்கள் வரலாறுகளையும் கதை போல் சொல்லி நம் உள்ளங்களில் பதிய வைத்தார்கள்.
அதன் புண்ணியத்தால்தான் நாம் இன்று நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம். எனவே இந்த கதை சொல்லும் பழக்கம் வரும் தலைமுறைக்கும் தொடரப்பட வேண்டும்.
அல்லாஹ் மஹ்பிரத்தை நல்குவானாக! posted byM.S. Abdul Hameed (Dubai)[07 August 2014] IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36285
பள்ளிப் பருவத்தில் என்னுடன் ஒன்றாகவே சுற்றித் திரிந்த என் ஆருயிர் நண்பன் S.O. ஷாஹுல் ஹமீதுக்கும், என் ஆருயிர் நண்பர் பாசுல் ஹமீதுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அல்லாஹ்வின் பால் சென்று விட்ட அன்னாருக்கு அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தை தந்தருள்வானாக.
மவ்த் வரைக்கும் ஹயாத் posted byM.S. அப்துல் ஹமீது (துபை)[16 February 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33191
அருமையான பதிவு. என் கட்டுரைக்கு நீட்சியாக இந்தக் கட்டுரையை எழுதிய என் பால்யகால நண்பன் ஷமீமுல் இஸ்லாமுக்கு மனமார்ந்த நன்றிகள்.
“அல்லாஹ் உனக்கு மவ்த் வரைக்கும் ஹயாத் தருவானாக” என்று நமதூரில் தமாஷாக துஆச் செய்வோமே... இப்பொழுதுதான் புரிகிறது, அது தமாஷ் இல்லை என்று. ஹயாத்துக்கு மிக நெருக்கமானது ஹயா எனும் வெட்கம் என்பதால் “அல்லாஹ் உனக்கு மவ்த் வரைக்கும் ஹயா தருவானாக” என்று அதற்கு அர்த்தம் கொள்ளலாம்.
அருமையான ஆய்வுக் கட்டுரை! posted byM.S. அப்துல் ஹமீது (Dubai)[28 August 2013] IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29801
உலகறிந்த மார்க்க அறிஞர் யூசுப் அல் கர்ழாவி அவர்களும் இறைநினைவைத் தூண்டுகின்ற நல்ல இசையைக் கூடும் என்கிறார்.
"ரூட்ஸ்" (வேர்கள்) என்ற ஆங்கில நாவலில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த கருப்பினத்தைச் சேர்ந்த அதன் ஆசிரியர் அலெக்ஸ் ஹேலி, ஆப்ரிக்காவில் முஸ்லிம்களாக இருந்த தன் மூல வேரை கண்டுபிடித்தார். அதற்கு அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது அவருடைய குடும்பத்தவர்கள் வழி வழியாகப் பாடி வந்த குடும்ப வரலாற்றுப் பாடல்கள்தான்.
கேரள மாப்பிள்ளாமார்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் சிந்தி வீர தீரத்துடன் போராடினார்கள். அவர்களின் தியாகங்கள் இன்றளவும் இன்றைய தலைமுறைகளுக்கு தெரிவது அவர்களின் மாப்பிள்ளா பாடல்கள் மூலம்தான். இன்று கேரள முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளைத் தாலாட்டுவது இந்த மாப்பிள்ளா பாடல்களை வைத்துதான்.
இந்தப் பாடல்கள் காலம் காலமாக நின்று நிலவ வேண்டும் என்றால் அதற்கு இசை (இராகம்) மிக அவசியம்.
ஆக, இறை நினைவைத் தூண்டும் எந்த இசையும் அனுமதிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். இறை நினைவை அகற்றுகின்ற, கீழான இச்சையைத் தூண்டுகின்ற, மதி மயக்குகின்ற இசை நிச்சயம் ஹராம் ஆகும்.
இப்படிப்பட்ட நல்ல பயனுள்ள கட்டுரைகளை மென்மேலும் தரும்படி என் அன்பு நண்பர் சாளையாரை கேட்டுக்கொள்கிறேன்.
Re:...சுதந்திரத்திற்காக பாடுபட்ட மறைக்கப்பட்டவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்! posted byM.S அப்துல் ஹமீது (Dubai)[16 August 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29528
திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை காந்திஜியிடம் வழங்கிய பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானியை நினைவுகூர்வோம்.
1905ல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்த, சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரையும் பங்குதாரர்களாக்கிய, 1907ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்ற உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிபை நினைவு கூர்வோம்.
1908ல் வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப் பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றபொழுது, அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான முதல் நபர் முஹம்மது யாஸீன் என்ற இளைஞரை நினைவுகூர்வோம்.
இந்திய சுதேசி வர்க்ககத்தின் இலட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்' என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை 16.10.1906ல் நிறுவி, அதற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டி, ரூ. இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை தனது கம்பெனி சார்பாக வாங்கிய ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட்டை நினைவு கூர்வோம்.
“காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முஹம்மது அலீயின் சட்டைப் பைக்குள் இருக்கிறார்!” என்று ஈ.வெ.ரா. பெரியார் குறிப்பிட்ட, அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்திய மௌலானா முஹம்மது அலீயை நினைவுகூர்வோம்.
காந்தியை தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த, குஜராத்தில் போர்பந்தரில் பிறந்து பல நாடுகளுக்கும் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய, 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்குக் கப்பல்களையும், 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நிறுவிய அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இரு ஐவேரி சகோதரர்களை நினைவுகூர்வோம்.
அருமையான முயற்சி! posted byM.S அப்துல் ஹமீது (Dubai)[16 August 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29527
இந்த நல்ல முயற்சியை ஏன் அனைத்து நாடுகளின் காயல் நல மன்றங்களும் சேர்ந்து செய்யக் கூடாது? பட்டியலில் ஒருசில மன்றங்களே இடம் பெற்றுள்ளன.
அனைத்து மன்றங்களும் அதனதன் பங்களிப்பைச் செய்தால் கணிசமான தொகை இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் சென்று சேருமே... அவர்களின் துயர் துடைப்பதற்கு இது பேருதவியாக இருக்குமே...!
செய்தி: நோன்புப் பெருநாள் 1434: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.30 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஈத் முபாரக்! posted byM.S. அப்துல் ஹமீது (துபை)[07 August 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29285
அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் நிலவட்டுமாக!
எல்லோருக்கும் என் இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
வாசிப்புப் பழக்கம் வாழ்க்கையில் வசந்தத்தை வரவழைக்கும்! posted byM.S. அப்துல் ஹமீது (Dubai)[15 October 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22825
ஏ.எல்.எஸ். இப்றாஹீம் காக்கா அவர்கள் அந்தக் காலத்திலேயே வாசிப்புப் பழக்கம் உடையவர்களாக இருந்தது அறிந்து மிக்க வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
இன்று வாசிப்புப் பழக்கம் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் நம் சமுதாயம் உள்ளது. நல்ல நூல்களை வாசிப்பது நம்பிக்கையை அதிகரிக்கும்.
வாசிக்கும்பொழுது குறிப்பெழுதும் பழக்கத்தைச் சொன்னது மிக அருமை. நான் இதனை சகோ. சாளை பஷீர் மூலம் கற்றுக்கொண்டேன். அவர் நிறைய நூல்களை வாசிப்பார். அதுவும் படுவேகமாகப் படித்து முடித்து விடுவார். படிக்கும்பொழுது முக்கிய விடயங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய விடயங்கள் வரும்பொழுது புத்தகத்தின் முதல் பக்கத்தில் அதன் பக்க எண்ணை எழுதி வைப்பார். மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கும்பொழுது அந்த நூலின் சாரம்ச விடயங்களின் பக்க எண்கள் முதல் பக்கத்தை அலங்கரிக்கும்.
நீங்கள் எத்தனை காலம் கழித்து அந்த நூலை எடுத்துப் படித்தாலும் சரி. முதல் பக்கத்தில் எழுதி வைத்துள்ள பக்க எண்களை மட்டும் புரட்டினால் போதும். மொத்த நூலும் ஓரளவு நினைவுக்கு வந்து விடும். வாசிப்பவர்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றிப் பார்க்கலாம்.
காலத்திற்கேற்ற கருத்துள்ள கட்டுரை posted byM.S. அப்துல் ஹமீது (Dubai)[15 October 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22823
மாஷா அல்லாஹ். அருமையான கட்டுரை. அனேகமாக எனதருமை நண்பர் ஹாஃபிழ் புகாரீயின் கன்னிக் கட்டுரை இது என்று எண்ணுகிறேன். அசத்தியிருக்கிறார். காயல் தமிழிலும், தூய தமிழிலும் எழுதியுள்ளது சிறப்பு.
கேரளாவில் இன்றளவும் இந்த மக்தப் அமைப்பு உறுதியாக உள்ளது. அதனால்தான் உலகெங்கும் பரவிக் கிடக்கும் மலையாளிகளில் பெரும்பாலோர் ஈமானிய பிடிப்போடு, குறைந்தபட்சம் தொழுகையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறவே தொழாத மலையாளி கூட அழகான உச்சரிப்புடன் குர்ஆன் ஓதுவதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். சிறு வயதில் மக்தப் சென்று அவர்கள் குர்ஆனையும், மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களையும் கற்று விடுவதுதான் இதற்குக் காரணம். அது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறது.
மக்தபினால் ஏற்படும் இன்னொரு முக்கிய பலன் குர்ஆன் உச்சரிப்பு. சிறு வயதில் குர்ஆன் ஓதி முறையான உச்சரிப்புப் பயிற்சியை எடுப்பவர்களுக்கு மட்டுமே அரபி உச்சரிப்பு சரியாக வருவதைக் காண்கிறோம். அப்படியில்லாமல் வயதான பின் ஆர்வப்பட்டு குர்ஆனைக் கற்பவர்கள் என்னதான் முயன்றாலும் அந்த உச்சரிப்பு வருவதில்லை. வசம்பு இலையைப் போட்டு நாக்கில் தேய் தேய் என்று தேய்த்தாலும் அந்த அழகிய உச்சரிப்பு வராது.
ஆக, நமது மார்க்கம் நிலைபெற்றிட, திருக்குர்ஆன் உள்ளங்களில் உறுதிப்பட்டிட மக்தப் மிக அவசியம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross