செய்தி: ரயில்வே டிக்கெட் முன்பதிவு இப்போது 120 நாட்களுக்கு முன்னர் பண்ணலாம்! இ-டிக்கெட் பயணியர் - இனி SMS தகவலை காண்பிக்கலாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரயில்வே டிக்கெட் முன்பதிவ... posted byM.Parthipan (tuticorin)[08 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16655
இது நல்ல செய்திதான் இருந்தாலும் 120நாட்களுக்கு முன்பு யாரும் இங்கு செல்லவேண்டும் என்று திட்டமிடுவது இல்லை. இதனால் புரோக்கர்களே முன்பதிவு டிக்கெட்டுகளை ஏதாவது ஒரு பெயரில் எடுத்து வைத்துக்கொள்கின்றனர்.
ரயில்வே டிக்கெட்டுகளை எடுத்து விற்கும் புரோக்கர்கள் தொழிலில் நன்கு அனுபவம் பெற்று விட்டதால் அதற்கேற்ப முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்துவைத்துக்கொள்கின்றனர். இதற்கேற்ப டிக்கெட் கேட்பவர்களிடம் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
இதனை ரயில்வே நிர்வாகம் தடுக்கவேண்டும். புரோக்கர்களை முற்றிலுமாக ஒழித்து பயணிகள் பயன்பெறும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
செய்தி: DCW நிறுவனம் குறித்து விளக்கம் கோரி, 1986இல் சதக்கத்துல்லாஹ் அப்பா வெல்ஃபர் அசோஸியேஷன் சார்பில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW நிறுவனம் குறித்து விள... posted byparthipan (tuticorin)[13 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14452
டிசிடபிள்யூ தொழிற்சாலையால் கடலில் ஏற்படும் மாற்றம் குறித்த விரிவான கட்டுரை இம்மாத சூரியகதிர் இதழில் வெளியாகியுள்ளது என்பதை தங்களது பார்வைக்கு தெரிவிக்கிறேன். அன்புடன் உங்கள் வாசகன் எம்.பார்த்தீபன்.
அந்த இதழில் வெளியான செய்தி தேவைஎனில் அனுப்புகிறேன் நன்றி
Re:அதிமுக அரசின் பேருந்து கட... posted byparthipan (tuticorin)[10 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14345
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லை பெரியாறு
அணை பிரச்னைக்கு உடனடியாக தீர்வுகாண மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாவட்டம்,
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்திடவேண்டும் என்று திமுக தலைமை
செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(12ம் தேதி) காலை
8மணி முதல் மாலை 5மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டணம், கோவில்பட்டி நகராட்சிகளில்
உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.
காயல்பட்டணம் சீதக்காதி திடலில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன்
எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். ஜெயதுரை எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி,
முன்னாள் எம்.பி.,ஜெயசீலன், காயல்பட்டணம் நகர செயலாளர் ஜெய்னுதீன் உள்ளிட்டவர்கள் முன்னிலை
வகிக்கின்றனர்.
இதில், திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். உண்ணாவிரதப்போராட்டத்தில் கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி கூறியுள்ளார்.
Re:சென்னை - தூத்துக்குடி மார... posted byparthipan (tuticorin)[07 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14227
விமான நேரத்தில் மாற்றம் உள்ளது. சரியான டைம் இதுவாகும் .காலை 9.55க்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம், 11.20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மீண்டும் 11.40 க்கு புறப்படும் இந்த விமானம் மதியம் 01.05க்கு சென்னை சென்றடையும்.
இரண்டாவது விமான சேவை தினமும் மதியம் 2.35 மணிக்கு புறப்படும் King Fisher விமானம் மாலை 4.05க்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறது. தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மாலை 4.30க்கு புறப்படும் இந்த விமானம் மாலை 06.05க்கு சென்னை சென்றடைகிறது.
Administrator:
விமான சேவை நேரங்கள் - அந்நிறுவனங்களின் இணையதளத் தகவல்கள் படி வெளியிடப்பட்டுள்ளன.
Re:DCW தொழிற்சாலை உற்பத்தி வ... posted byparthipan (tuticorin)[06 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14191
தூத்துக்குடியில் இருந்து வெளியாகும் டியூட்டி நியூஸ் இணையதள செய்தியை விட்டுவிட்டீர்களே. அதிலும் டிசிடபிள்யூக்கு எதிராகத்தான் செய்தி வெளியாகி இருந்தது.
Moderator: தாங்கள் தெரிவிக்கும் அச்செய்தியின் இணைப்பை நமக்குத் தந்தால், அதையும் இணைத்து வெளியிடலாம். அடுத்து, செய்தியைப் பொருத்த வரை நாம் ஆதரவு - எதிர்ப்பு என்று எந்த அளவுகோலும் வைக்கவில்லை. இந்நிகழ்வு குறித்த முறையான தொகுப்பாக அச்செய்தி இருப்பின், நிச்சயம் அது பயன்படுத்திக்கொள்ளப்படும்.
Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை... posted bym.parthipan (tuticorin)[28 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13861
நான் தூத்துக்குடியில் இருந்தாலும் உங்களது வலைத்தள செய்தியை நாள்தோறும் கண்டு வருகிறேன். தங்களது இந்த செய்தியில் பிழை உள்ளது. பொற்கொடி திருச்செந்தூர் கோட்டாட்சியர்(சப்-கலெக்டர்) ஆவார். தாங்கள் அவர்களை வட்டார போக்குவரத்து அலுவலர் என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி
Administrator: Thanks for pointing out the mistake. It has been corrected
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross