செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2012: மூன்றாம் நாள் ஆட்டத்தில் திருவனந்தபுரம் அணியை தூத்துக்குடி அணி வென்று காலிறுதிக்குத் தகுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆஸாத் கோப்பை கால்பந்து 20... posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[12 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18807
தொய்வில்லா வேலை பழுவில் கூட இந்த கால்பந்தாட்டப் போட்டிகளை உடனுக்குடன் அப்டேட் செய்யும் காயல்பட்டணம் டாட் காமிற்கு நன்றி! மேட்ச் மட்டுமல்ல ஊர் பிரமுகர்கள் ரசிகர்கள் வாண்டுகள், சில ரோஜாக்கள் (மழலைகள்) இப்படி தரை, கலரி, சேர், அரங்கம் என பல பகுதிகளையும் ஃபோட்டோ எடுத்துப் போடுவதால் நாங்கள் ஊரில் இருப்பது போல் ஒரு பிரம்மை! நன்றி!
குசும்பு:
சாலிஹ் காக்கா அப்படியே கலரி பக்கம் போனா என் மகன் இருப்பான். உங்க கண்ணில் பட்டால் உடனே க்ளிக்குங்கோ நானும் நாலு நாளாத் தேடுறேன் பய கண்ணில் பட மாட்டெங்கிறானே? (ஒரு தந்தையின் ஆதங்கம்தான்! தப்பில்லையே?)
Re:ஹைதராபாத்தில் காயல் நல மன... posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[12 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18806
முதலில் வாழ்த்துக்கள்! வருக! வருக! வாழ்க!
உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து பயனில்லை. உருப்படியானவர்கள் எண்ணிக்கை நண்பர் சொன்னதைப் போல் நான்கு பேர் இருந்தால் கூட போதும். சமூக மேம்பாட்டில் ஆர்வமும் அக்கறையும் சேவை செய்யும் மனப்பாண்மையும் இருந்தால் நான்கு நாலாயிரங்களுக்குச் சமம்.
எனக்குத் தெரிந்து காயல்பட்டினத்திற்கு மட்டும் தான் இப்படி உலகளாவிய நல மன்றங்கள் உதவியும் ஒத்துழைப்பும் செய்து செயல்பட்டு வருகின்றன. வேறு எந்த ஒரு ஊருக்கும் இவ்வளவு அமைப்புகள் இல்லை என்றே கூறலாம்.
Re:அபூதபீ கா.ந.மன்ற நிர்வாகி... posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[12 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18805
தனி மரம் தோப்பாகாது! என்பது கால விதி. எனவேதாம் இஃரா இன்று பல நல மன்றங்களின் உதவியால் தோப்பாகி கல்விக்கு கனிவான நிழல் தந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முதன் முதலில் வித்திட்ட ஜித்தா காயல் நலமனறத்தை நாம் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.
அபுதாபி காயல் நல மன்றத்தின் நிவாகக் குழு மிகுந்த அக்கறையோடு இஃராவை அனுகி கலந்தாலோசித்திருப்பது திருப்தி அளிக்கின்றது. இவர்களின் பொது நல ஆர்வமும்,சமூக அக்கறையும் தெளிவாகத் தெரிகின்றது.பாராட்டுக்கள்!
கல்வி உதவிக்கு இஃராவைப்போல் நாம் மருத்துவ உதவிக்கு நமதூரில் ஏதேனும் ஓர் நல்ல அமைப்பை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் பலருக்கும் அது பயனுள்ளதாக அமையும்.
Re:சிங்கை கா.ந.மன்றத்தின் சா... posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[11 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18787
சிங்கை நலமன்றத்தின் சேவைகள் யாவும் மிகச் சிறப்பாக உள்ளது. ஏழைகளுக்கு உதவி புரிவதில் உங்களை மிஞ்ச ஏணி வைத்தலும் எட்டாத உயரத்தில் தங்கள் நலமன்றம் இருந்து வருவது பாராட்டத்தக்கது. அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை உங்கள் யாவருக்கும் இம்மையிலும்,மறுமையிலும் வழங்கியருள வாழ்த்துகின்றேன்.
மண்ணின் மைந்தன் நவாஸ்,பாளையம் ஹஸன் காக்கா,என் அன்பு மைத்துனர்கள் சேக் அப்துல்காதர்,ஜக்கரியா மற்றும் சிங்கை நல மன்றத்தின் சிங்கங்கள், உள்ளூர் பிரதி நிதிகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த இனிய ஸலாம்.
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பட்டமளிப்பு விழா! 8 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்‘ ஸனது (பட்டம்) பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாருங்கள்....வாழ்த்துவோம்...!!! posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[11 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18785
அல்லாஹ்வின் அருள்மறையை மனனம் செய்து ஹாஃபிழ்களாக மரணிக்கும் வரை ஓர் உன்னத பட்டத்தைப் பெற்ற இளவல்களைப் பாராட்டி வெறும் இரண்டு கமெண்ட்ஸ் மட்டுமே! இதுவே மறுமைக்குப் பயனற்ற உலக் கல்வியில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருந்தால் ஒரு முந்நூறு கமெண்ட்ஸாவது வந்திருக்கும். கொடுமைடா! இந்த மாணவர்களின் சொந்தக்காரர்கள் ஆளுக்கு ஓர் கமெண்ட்ஸ் போட்டிருந்தால் கூட எட்டு கமெண்ட்ஸ் வந்திருக்கும்.
கழுதை வெட்டைக்கும், ஆடு குட்டி போட்டதுக்கும் மெனெக்கெட்டு கைவலிக்க கருத்தெழுதும் அன்பு நண்பர்களே! இம் மாணாக்கள் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடிய,பழுதில்லாக் கல்வியைக் கற்றுத் தேர்ந்துள்ளனரே? இரண்டு வரிகளில் இவர்களை வாழ்த்த மனம் சுருங்கிப் போனது ஏனோ? வாருங்கள் வாழ்த்துவோம்....!!!
கருத்து என்பது ஒரு ஊட்டச்சத்து மிக்க டானிக். அதைப் புகட்டும் போது இன்னும் ஒரு படி மேலே போக நிச்சயமாக அது உதவும்.
Re:மாடித் தோட்டம் குறித்த பய... posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[11 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18784
முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துக்கள்!
மாடியில் தோட்டம் போட்டு நமக்குத் தேவையான காய் கறிகளைப் பயிரிடலாம்.இதற்கான கண்று,செடி விதைகள் மாவட்ட வேளான்மைக் கழகத்தில் பெறலாம். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பீக்கங்காய்,சுரைக்காய்,மற்றும் புதிய ரக (பெரிய சைஸ்) வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் முருங்கை ஆகியவற்றை என் தாயாரும் சகோதரிகளும் பயிரிட்டு பலனை அனுபவித்து வருகின்றனர்.இதனால் ஃபிரஷான நம்ம தோட்டத்தில் விளைந்த காய் கனிகளை உண்ணும் போது ஒரு வகை திருப்தியும், நல்ல சுவையும் இருக்கத்தான் செய்கின்றது.
நண்பர் பஷீர் அவர்களின் இந்த யோசனை நிச்சயம் சாத்தியத்திற்குரியதே! முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பது உண்மை!
இருந்தாலும் மவுசு இன்னும் குறையல்லே....சபாஷ்!!! posted byஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[11 May 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18783
சென்னை மாநகர காவல் படை அணி இந்த போடு போடுதே? வாழ்த்துக்கள்! புகைப்படங்கள் அருமை. நண்பர் முஜாஹித் அலி அடக்க ஒடுக்கமாக புன்னகையோடு நிற்பது கண்டு மகிழ்ச்சி! என்னதான் கிரிக்கெட் தன் ஆதிக்கத்தால் மற்ற விளையாட்டுக்களை மண்டியிடச் செய்தாலும் நமதூர் கால்பந்தாட்டம் களைகட்டத்தான் செய்கின்றது. வாண்டுகள்,சிறியவர்,பெரியவர் என பேதமின்றி இப் போட்டியைக் கண்டுகளிக்கத்தான் செய்கின்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross