ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே! posted by(சதக்) இப்னு சாகிப் (Dammam, Saudi Arabia)[06 March 2012] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17506
ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே! என்பது போல் உள்ளது முஸ்லிம் லீக்குடைய அறிக்கை.
நகர அரசியல் கட்சியினர் என்று பிரசுரம் போடும் இவர்களால் எந்த அரசியல் கட்சியினர்கள் இவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள் என்று தெளிவாக சொல்ல முடியுமா? வேண்டுமென்றால் திமுகவும், பாஜகவினரும் ஆதரிக்கிறார்கள் என்பார்கள்.
மக்களின் உயிரோடும், நம்முடைய சந்ததியினரோடும் அரசியல் செய்யும் லீக்கினர் நாளை தாரங்கதாராவினால் பலன்கள் அதிகம் எனவே அவர்களை ஆதரித்தும் கடையடைப்பு செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள் போலும். எல்லாம் அரசியல். எல்லாவற்றிலும் அரசியல்!!!
கோரிக்கை posted byசதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia)[05 January 2012] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15581
சகோதரர் லுக்மானுடைய கோரிக்கை, பல தகவல்களை வேண்டியுள்ளது. இவைகளை கேட்டுத்தான் பெற வேண்டுமா? குறைந்தது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது அதிகாரிகள் நகர்மன்ற கூட்டத்தில் வைக்க வேண்டாமா?
அதிகாரிகளின் பணி சுமையின் காரணத்தால் வெளியிட முடியவில்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த அடிப்படை தகவல்கள் இருந்தால்தானே நம்மூர் வளர்ச்சி திட்டத்தில் மன்ற தலைவி மற்றும் உறுப்பினர்களால் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்க முடியும். நகராட்சி அலுவலர்களும் மன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, காயல் நகரத்தை முன்மாதிரி நகரமாக மாற்ற வேண்டும்.
KAYAL FIRST TRUST-க்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் முன்பு பல முக்கியமான விடயங்களை, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்று, இந்த வலைதளம் மூலம் நகர மக்களுக்கு அறிய தந்துள்ளீர்கள். சகோதரர் லுக்மானுடைய கோரிக்கைகள் முக்கியமானது என்பதால், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இதை பெற முடியுமா? விளக்கம் தந்தால் நல்லது.
செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒவ்வொரு நகராட்சி கூட்டத்தையும் நம்மூர் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியக்கூறுகள் உண்டா? குறைந்தபட்சம் கூட்டத்தொடரை வீடியோ எடுத்து காயல் வெப்சைட்களிலும், சேனல்களிலும் போட்டால் நகர்மன்ற உறுப்பினர் முதல் அதிகாரிகளில் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிய ஏதுவாக இருக்கும். இதற்கான செலவுகளை உலக காயல் நலமன்றங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறதா? என்பதை யாராகிலும் தெரிந்தால் சொல்லுங்களேன்!
Re:காயல்பட்டினத்தில் துணை மி... posted byஇப்னு சாகிப் (Dammam, Saudi Arabia)[03 November 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12846
மின்சார வாரியத்திற்கு வழங்கிய நிலம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் நல்லது.
மேலும், நம் பெரியவர்களின் ஹலால் ஆக சம்பாதித்த பணம் வீணாகவோ அல்லது தேவைக்கு அதிகமாகவே செலவழிப்பதை தடுக்கும் முகமாக இச்செய்தியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. குறைந்தபட்சம், வரும் காலங்களில் இப்படிப்பட்ட நற்காரியங்களுக்கு செலவழிக்கும் போது சட்டதிட்டங்களை தெரிந்து செலவழித்தால் மிகவும் நல்லது.
எப்படியாயினும், இந்நிலத்திற்காக பணம் வழங்கிய நல்லவர்களுக்கு, அல்லாஹ்வின் அருள் நிறைவாக கிடைக்கட்டுமாக! ஆமீன்
ஊரான் வீட்டு நெய்யே........... posted byசதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia)[02 November 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12809
இதை ஏனுங்க பெரிசு படுத்துறீங்க?!
திமுக மட்டும்தான் தம்பட்டம் அடிக்கிறதா? நம்மூர் 4ஆம் வார்டு உறுப்பினர் முஸ்லிம் லீக் வேட்பாளராமே? முஸ்லிம் லீக் கட்சியில் நின்று வெற்றி பெற்றோர் பட்டியலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஊரான் வீட்டு நெய்யே. என் .....டி கையே! என்பது அரசியலில் சகஜம்தானோ?
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted byசதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia)[21 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11479
சகோதரி ஆபிதாவிற்கு வாழ்த்துக்கள்.
அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை அளித்துள்ளான். அவனுக்கே புகழ் அனைத்தும். அந்த வல்லோன் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்ற உணர்வோடு நீங்கள் காயல்பதிக்கு பணியை தொடருங்கள்.
இன்று முதல் நீங்கள், காயல் மக்கள் அனைவருக்கும் பொதுவான நகராட்சி தலைவர். உங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு மட்டுமல்ல என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளவும். நீங்கள் வேட்பாளராக இருக்கும் போது உங்கள் மீது வீசப்பட்ட சுடுச் சொற்களை அல்லாஹ்விற்காக மறந்து விடுங்கள். இனி நம்மூர் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். கடினமான பாதை ஆரம்பமாகிறது. அல்லாஹ் உங்களுடைய பணியை இலகுவாக்கி வைப்பானாக!
சிந்தனைக்கு: 7ஆம் வார்டு - திரு. அந்தோணி அவர்கள் வெற்றி. வாழ்த்துக்கள்.
வார்டு எண்: 7.
வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் : 7
எதிர்த்து போட்டி இட்டவர்கள் : 7 முஸ்லிம் வேட்பாளர்கள்.
உஷாரையா! உஷாரூரூரூ........ posted byசதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia)[17 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11118
வெற்றி பெருபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். பதவியில் இருக்கும் போது, அல்லாஹ்விற்கு பயந்து மக்களுக்கு பணி செய்யுங்கள்.
முன்பு போல் அல்லாமல், லஞ்சம் லாவண்யத்திற்கு சிறுதும் இடம் கொடுக்காதீர்கள். காயல் இளைஞர்கள் உஷராகி விட்டார்கள். நீங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவீர்கள். தவறிழைப்பவர்கள் யாராகிலும், திருந்த முயற்சியுங்கள். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு மக்களால் ஆட்படுத்தப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இது எப்போ....?! posted byசதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia)[15 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10734
விமர்சனங்கள், கருத்துக்கள், வியாக்கியானங்கள், ம்ம்ம்ஹூஃப். இப்படியே போயிட்டு இருந்தா எப்படி? 18ஆம் தேதி சீக்கிரம் வராதா? என்று எண்ண வைத்து விட்டார்கள்.
தற்போதைய செய்தி: S.K. சாலிஹ் கூட ஐக்கிய பேரவைக்கு எதிரான வேட்பாளர் என்று பிரபல காயல் இளவல் இன்று பிரச்சாரம் செய்கிறாராமே?! ஐக்கிய பேரவை, வார்டுக்கு கூடவா வேட்பாளர்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்? இது எப்போ....?!
சந்தேகம் posted byசதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia)[13 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10510
இன்று காயலில் நடக்கும் தேர்தல் பிரச்சனையை பார்த்தால், ஷைத்தான் தன் ஆயுத(சந்தேகம்)த்ததை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறான் என்றே தெரிகிறது.
சகோதரி ஆபிதா, முச்செரிக்கையில் ஏன் கையெழுத்திடவில்லை என்றால், ஐக்கிய பேரவையின் செயல்பாடுகளில் சந்தேகப்பட்டேன் என்கிறார்.
ஐக்கிய பேரவையை நம்பி முச்சரிக்கையில் கையெழுத்திட்டு இரண்டாம் இடத்திற்கு வந்த சகோதரி வஹிதாவை ஏன் மாற்று வேட்பாளராக பரிந்துரைக்கவில்லை என்றால், ஐக்கிய பேரவையோ 'ஒருவேளை அவர் வாபஸ் பெறாமல் விட்டுவிட்டால் வாக்குகள் பிரிந்துவிடுமே என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்.' என்று சந்தேகப்பட்டுள்ளது.
சகோதரி ஆபிதா சந்தேகப்பட்டால், சந்தேகப்படுபவர் தலைமை பதவிக்கு லாயக்கற்றவர் என்று விமர்சிக்கிறோம்.
அதையே ஐக்கிய பேரவை சந்தேகப்பட்டால், ராஜதந்திரம் என்று பாரட்டுகிறோம்.
எனக்கு ஒரு 'சந்தேகம்'. சதோதரி ஆபிதாவை மட்டும்தான் சிலர் வழிகெடுக்கிறார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross