Re:...பாராட்டுக்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[19 February 2016] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43178
கல்வியில் தங்க பதக்கத்தை தட்டி வந்த காயல்பட்டினம் மாணவி செல்வி ஆமினா உம்மாள் என்ற நஸ்மியாவிர்க்கு மாமா மாமி மற்றும் மச்சான்கள் மச்சி மற்றும் குடும்பத்தார்கள் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். அல்ஹம்துலில்லாஹ்.
உன்னுடைய இந்த பெரிய சாதனை நமதூரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்த்து விட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் உந்தன் வாழ்வை சிறப்பாக்கி நீ மென்மேலும் சாதனைகள் செய்யவும் உன் கனவுகள் எல்லாம் நிறைவேறி என்றும் இதுபோல் வெற்றிப்பாதையிலேயே பிரயாணிக்க அருள் புரிய துஆ செய்கிறோம். ஆமீன்.
செய்தி: ஜூலை 25 அன்று தமுமுக சார்பில், சகல வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம்! பேரா. ஜவாஹிருல்லாஹ் பங்கேற்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
போற்றத்தக்க சேவை posted bySalai Sheikh Saleem (Dubai)[25 July 2015] IP: 27.*.*.* India | Comment Reference Number: 41408
நமதூருக்கு இந்த காலகட்டத்தில் என்ன உடனடி தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்கள் தமுமுக வினர். மாஷா அல்லாஹ் பாராட்டுக்கள்.
கல்வி மருத்துவம் என்று சளைக்காமல் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு தங்களின் சமூகத்திற்கு உதவிக்கொண்டிருக்கும் காயல் நல மன்றங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
இதுபோல் நமதூரில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் நகரும் மருத்துவ ஊர்தி ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் குழுவுடன் 24/7 செயல்படக்கூடிய ஒரு சேவை வேண்டும். காரணம் உள்ளூரில் இந்த சேவை இல்லாமல் அதவும் இரவு நேரங்களில் சொல்லெனா துயரங்கள் எற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வருந்துகிறோம் posted byசாளை ஷேக் சலீம் (துபாய் )[23 June 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41095
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் குறிப்பாக மர்ஹூம் அவர்களின் மகனார் எனது பால்ய நண்பன் ஜைனுல் ஆப்தீன் மற்றும் மருமகன் இஸ்மாயில் ஆகியோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ....
பாராட்டுக்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[17 June 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41011
நமதூரில் எத்தனையோ குர்ஆன் மனனம் செய்ய மதரசாக்கள் இருந்தும் நம்மவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள் என்கிற மனக்குறை இருக்கும் கால கட்டத்தில்,
நாகரீகத்தின் உச்சாணியில் இருக்கும் அமெரிக்காவில் இருந்துகொண்டு இறையளித்த மறையை நெஞ்சில் ஏந்தி மனனம் செய்து புனித ஹாபிழ் பட்டமும் வாங்கிய சிறுமி நமதூருக்கே பெருமை தேடிதந்திருக்கிறார்.
பாராட்டுக்கள் நமதூர் வாசிகளின் சார்பில்....
பாடம்:
எந்த கண்டத்தில் வாழ்ந்தாலும், பிள்ளைகளை நாம் வளர்க்கும் விதத்தில் வளர்த்தால், எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைகளாக ஆளாக்க முடியும்.
Re:...விளக்கம் தேவை posted bySalai Sheikh Saleem (Dubai)[15 February 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39268
DCW சம்பந்த பட்ட எல்லா விஷயங்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த ஊரே எதிர்பார்க்கிறது, தங்களுடைய மாணவிகளை DCW தொழிற்சாலைக்கு அனுப்பிய வாவு வஜீஹா நிர்வாகத்தை நாம் எல்லோரும் கேட்காத கேள்விகள் இல்லை, நமதூரை நாசமாக்கும் ஒரு தொழிற்சாலை என்று இதே இணையதளம் கூக்குரலிட்டுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேற்கண்ட எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு செய்தியை நீங்கள் பிரசுரித்திருப்பதில் நிச்சயமாக ஒரு அல்லது சில வலுவானா காரணங்கள் இருக்கலாம், அதை எங்களுக்கு தெளிவு படுத்துவீர்களா?
Administrator: ஊடகங்களின் பணி - நகர் நடப்புகளை மக்களுக்கு தெரிவிப்பதாகும். அந்த அடிப்படையில் - பல ஆண்டுகளாக - காயல்பட்டினம் நகரின் எல்லைக்குள் இயங்கும் DCW குறித்து, பல செய்திகளை காயல்பட்டணம்.காம் வெளியிட்டு வருகிறது. உதாரணம்: தினசரி கடல் காட்சி, காலாண்டு அறிக்கைகள், கழிவுகளால் மீன்கள் இறந்து ஒதுங்குவது, நிலங்களை அடமானம் வைத்து கடன் பெற்றது ...
DCW என்ற TAG மூலம் தேடினால், இணையத்தளத்தில், 2010க்கு பிறகு, DCW தொடர்பான செய்திகள் 755 வெளியாகியுள்ளன என்பதை காணலாம்.
இணையதளத்தின் கருத்து என்பது தலையங்கம் பகுதியில் வெளியிடப்படுகிறது. DCW குறித்த இணையதளத்தின் கருத்து -
என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்! - என்ற தலைப்பிலான தலையங்கம் மூலம் காணலாம்.
http://kayalpatnam.com/editorials.asp?id=48
சாந்த சொரூபி, நல்ல மனதிற்கு சொந்தக்காரர் மரியாதைக்குரிய சுலைமான் காக்காவை ஒவ்வொரு தடவை கடற்க்கரை செல்லும் போதும் அவர்கள் கடையில் சந்தித்து முகமன்கள் பகிர்ந்து கொள்வோம். அவர்களின் உளம் கவரும் புன்னகையே அவர்களின் குணத்திற்கு சான்று.
மர்ஹூம் அவர்களின் பாவங்கள் பொறுக்கப்பட்டு மறுமையில் நல்லடியார்களின் கூட்டத்தில் சுவனபதியில் தரித்திருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் மிக முக்கியமாக கபீர் காக்கா, செய்யத் முஹம்மத் சாஹிப் காக்கா ஆகியோருக்கு எங்களின் சலாமும் ஆறுதல்களும் உரித்தாகட்டும். அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.
Re:... posted bySalai Sheikh Saleem (Dubai)[13 December 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38438
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இறையடி சேர்ந்துவிட்ட மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக் கொடுத் தருள்வானாக ஆமீன்.
அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக் கொடுத்தருள்வானாக ஆமீன்.
ஆழ்ந்த இரங்கல்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[12 November 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 38144
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !!!!
மர்ஹூம் புஹாரி காக்கா அவர்கள் பாம்பே யில் இருந்த சமயத்தில் அவர்களோடு நான் நெருங்கி பழகியவன். மிகவும் நல்ல மனிதர், பண்பாளர், எவ்வளவோ அறிவுரைகள் தந்து உதவியவர்கள், மற்றவர்கள் பற்றிய பேச்சு பிடிக்காதவர்கள், மிக முக்கியமாக கொடுக்கல் வாங்கலில் மிகவும் கண்டிப்பானவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமையில் சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். யாவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross