Re:...ஓனோமிச்சியும், காயல்பட்டினமும் … posted byvakil. Ahamed (chennai)[21 November 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 38212
" படம் பார்த்து கதை சொல்லுங்கள் '' என்று சிறு வயதில் படித்திருக்கிறோம். ஆனால், பஷீர் ‘ஒரு ஜப்பானிய திரைப் படத்தை பார்த்து, இந்த கதையை நமதூர் சம்பவங்களோடு நமக்கு சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்.
முதுமையின் அனைத்து நிகழ்வுகளையும் இந்த கதைக்குள்ளே அடக்கிட்டிங்கலே, பஷீர். மிக சிறப்பானதொரு சிந்தனை கதையை தந்திருக்கீங்க. ரெம்ப நல்லாஇருக்குங்க!
' கார்ப்பரேட் யுகம் ' பெரும் பகுதியினரை பணத்தில் புரள வைத்திருக்கிறது. ஆனால், அது தனி மனித, குடும்ப, சமூக, கலாச்சார வாழ்வு முறைகளை சிதைத்திருக்கிறது என்பதை தைரியமாக உங்கள் பேனா முனைகளால் கீறி, கிழித்திருக்கிறீர்கள். சபாஷ்.
உங்கள் கண்களில்“ தோக்கியோ ஸ்டோரி' மாதரியான படக்காட்சிகள் இனியும் எத்தனையோ படக்கூடும், அவற்றிற்க்கு இறகு முளைக்கச் செய்வது உங்கள் பொறுப்பு, கடமை.
விதவிதமாய் கதை சொல்லுங்கள், சமூகத்தை தட்டி எழுப்புங்கள். எழுதுங்கள், உங்கள் பேனா இந்த சமூகத்துக்கு எதாவது ஒரு மாற்றத்தை தரும் என்று நம்புகிறேன். உங்களை ‘சமூக மாற்றத்துக்கான காயலின் கதையரசர்’ என வாழ்த்துகிறேன். மேலும் வளருங்கள்…….
வக்கில்.அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
Re:...வாழ்த்துக்கிறேன், ஹைதர்... posted byvakil. Ahamed (chennai)[07 November 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 38053
நேசக்கரம் கொண்டு சவுதியில் இந்திய பள்ளி மாணவர்களை அனைத்து நிற்க்கும், கல்வியில் உயர்த்தி வைக்கும் உம் பணிகள் வானம் தொடும் வகையில் உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வரும் என் பற்பல நினைவுகளில், உம்முடன் படித்த பள்ளி காலமும் என் நினைவுக்கு வருகிறது. உவகையில் திளைக்கிறேன்.
ஊர் வாழ நீங்கள் வாழ்ந்தால், நாளை ஊரே உங்களை வாழ்த்திடுமே ! மீண்டும் உங்களை வாழ்த்துக்கிறேன், ஹைதர்.
தோழமையுடன். . . .
வக்கீல். அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
Re:...பனைகள் மட்டும் posted byvakil. Ahamed (chennai)[05 November 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 38021
பனைகள் மட்டும் "wifi " சிக்னல் தந்திருந்தால் அதனை வெட்டாமல் விட்டு வைத்திருப்போம். ஆளுக்கொரு பனையும் நட்டுத்தள்ளி இருப்போம்.
ஆனால் பாவம் பனையோ நொங்கு ,பனம் பழம், பனம் கிழங்கு, பதனி, கருப்பட்டி, பனம் கற்கண்டு, பணை ஓலை, குருத்து, பனங்கட்டை, மட்டை, கருக்கு, உயிர் காக்க ''அக்சிஜென்'' மட்டும் தானே தந்தது ? அதனால் தான் மனிதன் பனைகளை கொன்றானோ ? இப்படியே இயற்கை எல்லாமும் மனிதனின் சுய நலம் நிலைத்திட அழிக்கப்பட்டால் நாளை ஒரு வேளை கானல் நீர்கொண்டு அவன் தாகம் தீர்பனோ ?
புஹாரி காக்க படமெடுத்து காட்டும் அந்த எட்டு பனையில் ஒன்றையாவது வெட்டாமல் கடைசியாக விட்டுவை மனிதா, ப்ளீஸ். அது பனை மரம் இதுதான் என்று நம் வரும்கால சந்ததிக்கு அடையாளம் காட்ட அத்தாட்சியாக இருக்கட்டும். ப்ளீஸ்.
வேண்டுகோளுடன்...
வக்கில்.அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
Re:...மனமார்ந்த நன்றி posted byvakil,ahamed (chennai)[01 July 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 35707
துளிரின் சேவைகளுக்கு உதவிகள் வழங்கிய கத்தார் காயல் நல மன்றத்தின் சகோதரர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். உங்களின் ஆரோக்கியத்துககாவும்,
வளமான பொருளாதார வாழ்விற்காகவும் ஏக இறைவனிடம் எங்கள் துளிரின் இயலா நிலை குழந்தைகள் துஆ செய்கிறார்கள். நீங்களும் எங்கள் குழந்தைகளுக்காக துஆ செய்யுங்கள்.
வக்கீல்.அஹ்மத்
பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி.
Re:...துளிரில் நேருக்கு நேர் அறிவார்ந்த நண்பர் நிஜாருக்கு.. posted byvakil,ahamed (chennai)[28 April 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 34649
இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த ஒருவர் முஸ்லீம் பெண்கள் இப்பொழுது எல்லா விசயங்களுக்கும் வெளிப்படையாக முன்னேறி வருகிறார்கள் என்றும்
ரோட்டில் போராட்டம் செய்த தங்கள் மாணவர்களுக்கு ஆதரவு அளித்ததையும் சுட்டிகாட்டியவுடன், அது அவரது தவறான கருத்தும், புரிதலும் என்று அவையில் உடனே நான் மறுத்து பேசியதை அரங்கில் இருந்த அறிவார்ந்த நண்பர் நிஜார் கவனிக்கவில்லையா?
தாங்கள் சுட்டிகாட்டிய இருக்கை விசயத்தை கவனத்துடன் பரிசீலனைக்கு ஏற்கிறோம். துளிரில் நிகழ்சிகளை பெண்கள் தனியாக அமர்ந்து பார்க்கும் காணொளியுடன் கூடிய தனி அரங்கம் அமைப்பது காலத்தின் அவசியம். அதற்கு நண்பர் நிஜார் போன்றவர்கள் தனவந்தர்களை அணுகி துளிருக்கு உதவலாம்!
உங்கள் ஆலோசனைகளுடன் அதற்கான தீர்வையும் விரைந்து எதிர்பார்கிறோம்.
Re:...பகலையும். நிலவையும் ஒன்றினைதற்போல்... posted byvakil,ahamed (chennai)[21 March 2014] IP: 14.*.*.* India | Comment Reference Number: 33840
"இன்ப சுற்றுலாவிற்காக கிளம்பும் பயணமாக இருந்தாலும் அதுவே நமது அன்றாட வீட்டு வாழ்க்கையின் அருமையை உணர்த்தும்போது நிரந்தரமாக வீட்டை விட்டு பிரிக்கப்பட்டவர்கள், வீடில்லாதவர்களின் தினசரி வாழ்க்கையை பற்றிய நினைப்பானது ஒரு கணம் என் மனதிற்குள் எழுந்து நிறைந்து சங்கடத்தை உண்டாக்கியது" சூப்பர் சமுக சிந்தனை
"அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே நமக்கு உணவளித்தான். நமக்கு நீர் புகட்டினான். நமது தேவைகளை நிறைவு செய்தான். நமக்கு {ஓய்வெடுக்க} இடமளித்தான். இத்தனைக்கும் தமக்கு உதவி செய்பவரோ அன்பு காட்டுபவரோ இல்லாமல் எத்தனையோ பேர் உலகில் இருந்து கொண்டிருக்கின்றனர்." அழகிய மார்க்க சிந்தனை
பகலையும். நிலவையும் ஒன்றினைதற்போல்... எத்தனை அழகான வார்த்தைகள் உம் புதினத்தில் அருமை, ஆஹா.. காயல்பட்டினத்து சிலவடை, காசின்றி சுற்றுலா முடித்த மகிழ்ச்சி
Re:...ரோட்டு திருமணங்கள் -- சில ஆலோசனைகள் --- posted byvakil ahamed (chennai)[01 September 2013] IP: 14.*.*.* India | Comment Reference Number: 29914
ரோட்டு பந்தல் திருமணங்கள்.....
சில ஆலோசனைகள்.......
1. வீதியில் திருமணங்களை நடத்துவதில்லை என மனவீட்டாரின் மனங்களில் முதலில் மாற்றங்கள் மலர வேண்டும்.
2. இறை இல்லத்தில் திருமணங்கள் நடத்தபடுவதுதான் சிறந்தது
என்பதை உணர வேண்டும். ஆலிம்கள் இதனை எடுத்து சொல்லவேண்டும்.
3. தங்களது வாழ்விடத்துக்கு அருகில் நிகாஹ் மஜ்லிஸ் அல்லது
திருமண மண்டபம் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள பள்ளிவாசலில் நிகாஹ் நடத்த முடிவெடுக்க வேண்டும்.
4. கொள்கை பிரச்சினையால் அருகில் உள்ள பள்ளிவாசலில் இடம் சாத்தியப்படாவிட்டால், தங்கள் கொள்கைக்கு ஒத்து போகிற பள்ளிவாசலில் திருமணத்தை நடத்த முடிவெடுக்க வேண்டும்.
5. இருக்கிற திருமண மண்டபங்கள், மைதானங்கள், பள்ளிகூடங்கள், சங்கங்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத திறந்தவெளி இடங்களையும் வாய்ப்புகளின் அடிப்படையில் திருமணங்களுக்கு பயன்படுத்தலாம் .
6. பெண்கள் சார்ந்த திருமண வைபவங்களுக்கு, பெண்கள் தைக்காக்கள், மதரசாக்கள்,மொட்டைமாடிகள், தோட்டங்களை பயன்படுத்தலாம்.
7. காலம் காலமாக பழகிப்போன ரோட்டு பந்தல் திருமணங்கள் உடனடியாக முடிவுக்கு வராது. எனவே குறைந்த பட்சம் 6 மாதம் அல்லது அதிகபட்சம் 1 வருடம் வரை நகராட்சி நிர்வாகம் ரோட்டு பந்தலுக்குஅனுமதி நீடிப்பு செய்வதுதான் இயற்கை நீதிப்படி சரியானது. ஆனால் இதை கண்டிப்புடன் அறிவிப்பு செய்து,அந்த கால கெடுவுக்குள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
8. வேறு வழியே இல்லை என்று திருமண வீட்டார் தகுந்த காரணம் காட்டுகிறது நகராட்சி நிர்வாகத்திற்கு சரியென்று பட்டால், திருமணத்திற்காக ஒரு நாள் மட்டும் ரோட்டில் பந்தலிட அனுமதிக்கலாம். மறுநாள் பந்தல் பிறிக்க படாத பட்சத்தில் அதிக பட்ச அபராதம் விதிப்பதோடு, பந்தலை நகராட்சி நிர்வாகம் பிரிதெடுப்பதோடு அதனை ஜப்தி செய்யவேண்டும்.
9. ரோடுகளில் திருமணம் நடைபெறும்போது, பிரித்து சேர்க்கும் முறையில் அமைந்த ரெடி மேட் மேடைகள் வைத்து கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கவேண்டும். சண்ட்ரிங் பலகை மேடைகளுக்கு அனுமதி வழங்ககூடாது. வைபவம் முடிந்ததும் மேடை உடனடியாக பிரித்து அகற்றப்படவேண்டும்.
10. ரோட்டில் பந்தல் அமைத்தால், பந்தலில் நடைபெறும் திருமண நிகழ்வுகள்,தொடர்புடைய வைபவங்களை ஒரே நாளில் முடித்திட மணவீட்டார் முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.
11. வைபவ நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் பந்தலை தேவை இல்லாமல் அடைத்து வைத்து போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.
12. பந்தல் பாதை குறிப்பிட்ட நேரத்திற்கு அடைக்கப்படும் பட்சத்தில், அருகில் உள்ள மாற்றுவழி பாதை குறித்து அறிவிப்பு தெரு முனையில் அல்லது சந்திப்பில் எழுதி வைக்கப்படவேண்டும்.
13. பந்தல் அமைத்தவரின் பெயர், முகவரி, செல்பேசி ஆகியவை குறித்த விபரம், அவரை தேவையானால் உடனே தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக பந்தலில் குறித்து வைக்க படவேண்டும். அவரை பற்றிய மேற்படி விபரம் நகராட்சி நிர்வாகத்துக்கும் தெரியபடுத்தபடவேண்டும்.
இதுபோன்ற மாற்று ஆலோசனைகளை நம் மக்கள் முன் எடுக்காத பட்சத்தில், யாராவது நீதி மன்றத்தை நாடினால் ரோட்டு பந்தல் எப்போது வேண்டுமானாலும் நிரந்தரமாக தடை செய்யப்படலாம்.
KANNERUDAN. posted byvakilahamed (Chennai )[13 June 2013] IP: 14.*.*.* India | Comment Reference Number: 27982
இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.
தன் துணைவியார் ஆய்ஷா அவர்களை துளிரின் மனவளர்ச்சி
குன்றிய குழந்தைகளின் மறுவாழ்விற்காக தொண்டு பணியாற்ற
ஊக்கம் தந்த பெருந்தகை கத்தீபு.எம்,ஏ. சாஹிபு தம்பி அவர்கள் மரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களது மறைவிற்கு துளிர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துகொள்கிறது.
சாஹிபு தம்பி அவர்கள் சாந்த குணம் கொண்டவர்கள். எப்பொழுதும் அவர்களை சந்திக்கின்ற பொழுது அவர்களுக்கே
இயல்பான புன்னகையுடன் கைகொடுத்து மகிழ்வதையும், அன்பாக பேசுவதையும் மறக்க முடியவில்லை. சந்திக்கும்
பொழுதெல்லாம் துளிரின் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டு மேலும்
தொடர்ந்து செயல்பட ஆர்வம் ஊட்டுவார்கள்.
அவர்களது மறைவு எமது துளிர் குடும்பத்திற்க்கும் மிகப்பெரும்
இழப்பாகும்.அவர்களது இழப்பினால் துயறுரும்
குடும்பத்தாருக்கும், எங்கள் துளிர் குழந்தைகளின் கருணை தாய் ஆய்ஷா அவர்களுக்கும் பொறுமையையும், அமைதியையும் தந்தருளவும், மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை கொடுத்தருளவும், வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கண்ணீருடன்,
வக்கீல். அஹ்மத்,
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி
காயல்பட்டினம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross