காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளரும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - காயல்பட்டினம் கிளை செயலாளரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுமான கே.எம்.டி.சுலைமான் தாயார் - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த கோ.முஹம்மத் மீரா நாச்சி, இன்று மாலையில் கொல்கத்தாவில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், அதன் செயலாளர் மொகுதூம் முஹம்மத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியாக நீண்ட காலமாக திறம்பட செயலாற்றி வரும் - பொதுநல ஊழியர் சகோதரர் கே.எம்.டி.சுலைமான் அவர்களின் தாயார் வஃபாத்தான செய்தியறிந்து மிகவும் வருந்தினோம்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் நற்கிரியைகளை முழுமையாக ஏற்று, மறுமையில் ‘ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக என்றும்,
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் எம் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி சகோதரர் கே.எம்.டி.சுலைமான் அவர்கள் உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக என்றும் வல்லோனை உளமார பிரார்த்திக்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |