காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையுடன் இணைந்து, இம்மாதம் 10ஆம் தேதியன்று, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம், பல் மருத்துவ இலவச முகாம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விபர அறிக்கை வருமாறு:-
அபூதபீ காயல் நல மன்றம், K.M.T. மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பல் மற்றும் பொது மருத்துவ சோதனை முகாம்!
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ், அபூதபீ காயல் நல மன்றமும் K.M.T. மருத்துவமனையும் இணைந்து காயல் மாநகரத்தில் இலவச பல் மற்றும் பொது மருத்துவச் சோதனை முகாமை நடாத்த நாடியுள்ளோம். சிறந்த மருத்துவர்கள் உங்களின் மருத்துவ சம்பந்தமான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருவதுடன் தகுந்த ஆலோசனைகளையும் வழங்க இசைந்துள்ளார்கள். இந்த அறிய வாய்ப்பினை நழுவ விடாமல் தாங்கள் அனைவர்களும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்.
அனைவர்களும் சுகவாழ்வு பெற்றிட வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகிறோம்.
நிகழ்வுகளின் விபரம்:
இடம்: K.M.T. மருத்துவமனை
நாள்: பிப்ரவரி 10 ஆம் தேதி 2013 [ ஞாயிற்றுக்கிழமை ]
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
நடைபெறும் இலவச மருத்துவ சோதனைகள்:
1. பல் மருத்துவ பரிசோதனை [மருத்தவரின் பரிந்துரையின் படி X - RAYயும் எடுக்கப்படும்]
2. இரத்த அழுத்த சோதனை
3. இரத்த சர்க்கரை அளவு
4. உடல் எடை கூறு சோதனை [B.M.I.]
முகாம் நடத்தும் மருத்துவ நிபுணர்கள்:
1. DR. ஹமீது யாஸிர் BDS [அபூதபீ]
2. DR. அர்ச்சனா BDS [K.M.T.]
மருத்துவ ஆலோசனை மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சிகள்:
நேரம்: மதியம் 1 மணி முதல் 2 மணி வரை
கலந்துகொள்ளும் நிபுணர்கள்:
1. DR. பாவநாச குமார் MD
2. DR. ஹமீது யாஸிர் BDS
3. DR. அர்ச்சனா BDS
“பற்களை பாதுகாத்திடுவீர்!
உடல் நலத்தை பேணிடுவீர்!!”
குறிப்பு: முன்பதிவுக்கு சகோதரர் ஹுசைன் நூர்தீன் அவர்களை [95664 65281] என்ற எண்ணில் 09.02.2013 [சனிக்கிழமை] அன்று தொடர்புக்கொள்ளவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முகியதீன் அப்துல் காதிர்
செய்தித் துறை பொறுப்பாளர்
காயல் நல மன்றம்
அபூதபீ - ஐக்கிய அரபு அமீரகம் |