காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில், இம்மாதம் 07 முதல் 10ஆம் தேதி வரை, மகளிருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையுடன் கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமிற்கான முன்பதிவு கே.எம்.டி. மருத்துவமனையில் தற்சமயம் நடைபெற்று வருகிறது.
கே.எம்.டி. மருத்தவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரியும் டாக்டர் சிந்தியா தம்பிராஜ் MBBS, DNB (O&G) - IIM தொலைக்காட்சியில் நாளை (பிப்ரவரி 5; செவ்வாய்), மார்பக புற்றுநோய் குறித்தும், நடைபெறவுள்ள முகாம் குறித்தும் IIM தொலைகாட்சி மூலம் விளக்கமளிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சி நாளை (பிப்ரவரி 5) இரவு 8 மணி அளவில் துவங்கும்.
தகவல்:
எஸ். அப்துல் வாஹிது,
கொச்சியார் தெரு.
[எழுத்துப்பிழை திருத்தப்பட்டது @ 13:58 / 05.02.2013] |