இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் (கலந்துரையாடல் அமைப்பு) ஏற்பாட்டில் பிப்ரவரி 9 அன்று காயல்பட்டினத்தில் இலக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இது குறித்து அதன் அமைப்பாளர் ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு::
அஸ்ஸலாமு அலைக்கும்,
காயல் நகரில் எத்தனையோ பொது அமைப்புகள் மக்கள் நலன் கருதி அமைக்கப்பட்டு வெற்றியுடன் நடைபெற்று வருகிறது. ஆனால் நமதூரில் இலக்கிய கலந்துரையாடல் அமைப்பு முறை இன்றுவரை இல்லை. அதனால் மாதம் தோறும் வரும் இரண்டாம் சனிக்கிழமை அரசு விடுமுறை நாட்களில் மாலையில் மட்டும் இலக்கிய கலந்துரையாடல் ஏற்படுத்தி உள்ளோம். கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமானால், தின வார மாத இதழ்களைப் படித்து சுவைத்தவை அல்லது நூலகங்களில் வாசித்த நூல்களின் அறிவையும், சந்தித்த பெரியவர்களின் நல் உபதேசங்களையும் அங்கு வந்து பகிர்ந்து கொள்ளலாம்.
பத்திரிக்கை படிக்கத் தூண்டுவதும், நூலகங்கள் சென்று நூல்கள் வாசிக்கத் தூண்டுவதுமே இதன் முக்கிய நோக்கமாகும். (சென்னை மெரினா கடற்கரையில் தரையில் இதுபோல் இலக்கிய கலந்துரையாடல் மாதந்தோறும் இன்றும் நடைபெறுகிறது).
09.02.2013 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மரைக்காயர் பள்ளிக்கு எதிர்புறம் உள்ள ரஹ்மானியா பள்ளியில் நடைபெறுகிறது. அங்கு வர அழைக்கின்றோம்.
ஆலோசகர்கள்:
1. ஆசிரியர் மு. அப்துர்ரஷாக் M.A., B.Ed., M.Phil., Ph.d
2. அ. முஜீப் (அரசு கிளை நூலகர்)
3. வழக்கறிஞர் அமலன்
4. காயல் வி.எம்.பாலமுருகன்
5. கவிஞர் ஷேய்க்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ் (இணையதள எழுத்தாளர்),
அமைப்பாளர், இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் (கலந்துரையாடல் அமைப்பு).
|