காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளரும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - காயல்பட்டினம் கிளை செயலாளரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுமான கே.எம்.டி.சுலைமான் தாயார் - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த கோ.முஹம்மத் மீரா நாச்சி, இன்று மாலையில் கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 70.
இவர், மர்ஹூம் கோ.செய்யித் முஹம்மத் என்பவரின் மகளும்,
ஹாஜி குளவி மஹ்மூத் மானாத்தம்பி என்பவரின் மனைவியும்,
கே.எம்.டி.சுலைமான் (தொடர்பு எண்கள்: +91 94866 55338, +91 97897 99518),
கே.எம்.டி.ழியாஉல் ஹக் (தொடர்பு எண்: +91 85838 70227),
கே.எம்.டி.அபூபக்கர் ஸித்தீக்
ஆகியோரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்றிரவு 11.00 மணிக்கு, கொல்கத்தா சோலியார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
5.02.2013 அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகையும், அதனைத் தொடர்ந்து குடும்பத்தாருடன் கைலாகு (முஸாஃபஹா) செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 10:26 / 05.02.2013] |