சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், காயல்பட்டினம் மாணவி எழுதிய கட்டுரை முதற்பரிசைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் “மாணவர் முரசு” என்ற பெயரிலான தமிழ் நாளிதழில், காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி வருபவருமான எம்.என்.தவ்ஃபீக் ஸாலிஹ் என்பவரின் மகள் டி.எஸ்.ஜீனத் நிஸா எழுதியனுப்பிய கட்டுரை முதற்பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு, அந்நாளிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவி டி.எஸ்.ஜீனத் நிஸா, ஹாஜி மா.செ.மஹ்மூத் நெய்னா என்பவரின் மகன்வழிப் பேத்தியும், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் என்பவரின் மகள்வழிப் பேத்தியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
ஷேக் முஹம்மத் |