தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை முழுமையாக ஆற்றுவதற்கு ஏதுவாக, தூத்துக்குடி மாவட்டத்தில், கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப் படுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும். என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் அனைவரும் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன்,அதிமுக மாநில மகளிர் அணிச் செயலாளர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் எல். சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், தூத்துக்குடி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பி. மனோகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தகவல்:
www.tutyonline.com |