தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வரை கிழக்கு கடற்கரை சாலை அமைக்க ரூ.242 கோடியில் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு, அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர் ரவிக்குமார் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனுக்க்ளுக்கு தீர்வு கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக 586 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, நில ஆர்ஜித நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில், அரசு நிலங்களும், தனியார் இடங்களும் உள்ளது. தனியார் நிலங்களுக்கு இழப்பீடு செய்வது குறித்து அவர்கள் தான் முடிவு செய்வார்கள். தூத்துக்குடி விவிடி சந்திப்பில் மேம்பாலம் கட்டுவது குறித்த வரைபடம் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆதிதிராவிட வகுப்பினருக்கான இந்திராகாந்தி தி்ட்டத்தின் கீழ் 200 வீடுகள் கட்டப்பட்டு தயாராக உள்ளது. அதில் குடியேர விரும்புபவர்கள் தற்போது வசித்து வரும் குடிசைவீட்டு முன்பு நின்று புகைப்படம் எடுத்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஏழைமாணவ, மாணவியர் கல்விக் கடனுக்காக 8 முகாம் நடத்தப்பட்டது. இதில், ரூ.10 கோடி வழங்கப்பட்டது. சான்றிதழ் சரியில்லாத காரணத்தினால் 2கோடி ரூபாய் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்கள் தவிர அனைத்து தாலுகா அலுவலகங்களும் கனிணி மயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விபரங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 170பேருக்கு, 150 லேப்டாப்கள் வழங்கப்பட்டு, கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு பின்னர், 3 கிராமங்களுக்கு ஒரு பெண் வீதம் நியமிக்கப்பட்டு, அந்த கிராமத்திலுள்ளவர்கள் ரயில் கட்டணம், மின் கட்டணம், செல்போன் ரீஜார்ஜ் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்காக சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வரை ரூ.242 கோடியில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்க அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரை கடற்கரைசாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், உதவி அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்:
www.tutyonline.com
|