ஆறுமுகநேரி உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 31 காவல்துறை துணை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி முறப்பநாடு காவல் நிலையத்துக்கும்,
ஸ்ரீவைகுண்டம் எம்.வேல்ராஜ் தூத்துக்குடி வடபாகத்துக்கும்,
திருச்செந்தூர் எஸ்.ஜெயக்குமார் ஆழ்வார்திருநகரிக்கும்,
சாத்தான்குளம் டி.ஸ்டீபன் குரும்பூருக்கும்,
கயத்தாறு எம்.ரென்னிஸ் தென்பாகம் காவல் நிலையத்துக்கும்,
தென்பாகம் எல்.கந்தசாமி சிப்காட்டுக்கும்,
குரும்பூர் தனிஸ்லாஸ்பாண்டி குலசேகரன்பட்டினத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
எட்டயபுரம் விக்டோரியா அற்புதராணி நாலாட்டின்புதூருக்கும்,
தென்பாகம் சந்தி செல்வி தாளமுத்துநகருக்கும்,
ஓட்டப்பிடாரம் ஜெயந்தி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும்,
சாத்தான்குளம் கற்பகவள்ளி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்துக்கும்,
சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு சபிதா தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவுக்கும்
மாற்றப்பட்டுள்ளனர்.
ஆழ்வார்திருநகரி எஸ்.ஆறுமுகநயினார் சேரகுளத்துக்கும்,
தூத்துக்குடி மத்தியபாகம் எஸ்.முருகன் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவுக்கும்,
வடபாகம் எம்.பாலகிருஷ்ணன் விளாத்திகுளத்துக்கும்,
தெர்மல்நகர் ஆதிலட்சுமி ஸ்ரீவைகுண்டத்துக்கும்,
தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு ஸ்ரீகுமார் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவுக்கும்,
காடல்குடி வேலுச்சாமி ஆத்தூருக்கும்,
எப்போதும்வென்றான் அன்னலட்சுமி கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும்,
ஆறுமுகநேரி என்.ராஜகுமாரி திருச்செந்தூருக்கும்,
ஆத்தூர் சங்கரேசுவரி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும்
மாற்றப்பட்டு உள்ளனர்.
நாரைக்கிணறு எம்.முருகன் செய்துங்கநல்லூருக்கும்,
விளாத்திகுளம் தனலட்சுமி ஸ்ரீவைகுண்டத்துக்கும்,
சேரகுளம் எம்.பழனிச்சாமி முத்தையாபுரத்துக்கும்,
தூத்துக்குடி தென்பாகம் சி.ஜெயராஜ் கயத்தாறுக்கும்,
கொப்பம்பட்டி மேகலிங்கம் செய்துங்கநல்லூருக்கும்,
குலசேகரன்பட்டினம் சுப்புலட்சுமி ஆறுமுகநேரிக்கும்
மாற்றப்பட்டு உள்ளனர்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |