சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் கடன் திட்டங்கள் குறித்து விளக்கும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்புக் கருத்தரங்கம் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
சிறுபான்மை நலத்துறை இயக்குநர் வழிநடத்தும் இக்கருத்தரங்கில், சிறுபான்மையின மக்களுக்கு மத்திய - மாநில அரசுகளால் வழங்கப்படும் கடன் வகைகள், அவற்றைப் பெற்றிடுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்படுவதோடு, இத்திட்டங்களில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் கேட்டறியப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், சிறுபான்மை சமுதாயத்தின் பொதுநல ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |