Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:41:52 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12036
#KOTW12036
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 9, 2013
காஜி சான்றிதழ்கள் சட்டப்படியானவை என அரசு அங்கீகரிக்க வேண்டும்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2378 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காஜிகளின் சான்றிதழ்கள் சட்டப்படியானவை என அறிவிக்குமாறு மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொண்டும், முஸ்லிம் திருமணங்களை ஒருபோதும் சிறப்புத் திருமண சட்டப்படி பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என முஸ்லிம் சமுதாயத்தை கேட்டுக் கொண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநில பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (அக்.5) காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள பெரியார் மைய அரங்கில் நடைபெற்றது.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், காயிதெ மில்லத் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. மற்றும் மாநில நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், மாவட்டங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 454 பேர் கலந்துகொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சமுதாயப் பிரபலங்களில் காலம் சென்றோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் மஃபிரத்துக்கு (பாவப் பிழை பொறுப்புக்கு) துஆ - பிரார்த்தனை செய்யப்பட்டது.

பின்னர், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தேசிய பொதுச் செயலாளரும் - தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றினர்.

வருகை தந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 01 - இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்குகள் கூட்டங்கள் வெற்றிக்கு நன்றி:

இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்கு கள் தமிழகத்தின் பெரும் பாலான நகரங்களில் சிறப்பாக நடத்தி, முஸ்லிம் சமுதாய மக்கள் மத்தியிலும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் இடத்திலும் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் பற்றிய தெளிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய மாவட்ட முஸ்லிம் லீகுகளுக்கு இப்பொதுக்குழு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கிறது.

இந்தக் கருத்தரங்குகள் வெற்றிபெற அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பும், ஆதரவும் அளித்துள்ள மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் சங்கைக்குரிய உலமாக்களுக்கும், சமுதாயச் சான்றோர்களுக்கும், புரவலர்களுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கிறது.

தீர்மானம் 02 - மஹல்லா ஜமாஅத் மாநாடு:

தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு, 2013 டிசம்பர் 28 சனிக்கிழமை திருச்சியில் நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.

தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத்துகளை கிராமப்புற மஹல்லா ஜமாஅத், நகர்ப்புற மஹல்லா ஜமாஅத், மாநகர் மஹல்லா ஜமாஅத் என்று மூவகைப்படுத்தி, ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத் நிர்வாக மும், மஸ்ஜிது பராமரிப்பு, மதரஸா நடத்துதல், ஷரீஅத் பஞ்சாயத்து நடத்துதல், மஹல்லா ஜமாஅத் பைத்துல்மால் நடத்துதல், திருமணப் பதிவு செய்தல், பிறப்பு இறப்பு பதிவு செய்தல், அரசுகளின் நலத் திட்டங்களை ஜமாஅத்தினரின் பயன்பாட்டுக்கு உதவி புரிதல் போன்றவைகளில் முன்னுதாரணமாக திகழும் மஹல்லா ஜமாஅத் துகளை மேற்கண்ட மூன்று வகையில் இருந்தும் வகைக்கு ஐந்து ஜமாஅத்துகள் தெரிவு செய்து, அவ்வாறு தேர்வு செய்யப்படும் 15 மஹல்லா ஜமாஅத்களுக்கு முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது எனவும் இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் 03 - வார்டு கன்வீனர்கள் நியமனம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளில் சிலர் மாற்றப்பட்டும், சிலர் வெளிநாடு சென்றும், அவர்களின் முகவரிகள் மாற்றப்பட்டும் உள்ள நிலையில், மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளின் புதிய பட்டியலை தலைமை நிலையத்துக்கு அக்டோபர் 15ம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண்டப்படுகிறது. ஒவ்வொருவரின் முழு முகவரியுடன் தொடர்புக்குரிய தொலைபேசி எண்ணும் அவசியம் குறிப்பிடப்படுதல் வேண்டுவதாகும்.

இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புகள் இல்லாமல் இருக்கிற மாநகர, நகர, பேரூர் வார்டுகளில், வார்டு கன்வீனர் என்று அந்த வார்டு முஸ்லிம் லீகர் ஒருவரைத் தெரிவு செய்து, அவ்வாறு கன்வீனர்கள் நியமிக்கப்பட்டுள்ள வார்டு விவரங்களும், அவைகளின் கன்வீனர்களின் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்களும், அவர்களின் புகைப்படங்களுடன் அக்டோபர் இறுதிக்குள் தலைமை நிலையத்துக்கு மாவட்ட தலைவர்கள் / செயலாளர்கள் அனுப்பி வைக்கப் பணிக்கப்படுகிறார்கள்.

அக்டோபர் இறுதிக்குள் இந்த பட்டியல் அனுப்பத் தவறும் மாவட்டங்களில் உள்ள மாநகர, நகர, பேரூர் வார்டுகளுக்கு, அந்தந்த வார்டுகளில் உள்ள முஸ்லிம் லீக் உறுப்பினர்களில் ஒருவரை வார்டு கன்வீனராக நியமித்து அறிவிக்கும் அதிகாரத்தை தலைமை நிலையம் செயல்படுத்தும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 04 - தேர்தல் நிதி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள சமுதாய மக்களிடமிருந்து தேர்தல் நிதி திரட்டுவது என்றும், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம், ரூ. 500, ரூ. 100 என்று நன்கொடை ரசீது அச்சிட்டு மாவட்ட முஸ்லிம் லீகுகள் மூலம் அக்டோபர் 15ம் தேதியிலிருந்து துவங்குவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 05 - காஜிகளுக்கு அங்கீகாரம்:

தலைமை காஜி, மாவட்ட காஜிகள், மஹல்லா ஜமாஅத்துகளில் இயங்கும் மஸ்ஜிதுகளின் இமாம்களான மஹல்லா காஜிகள், முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணம் மற்றும் மணமுறிவு நிகழ்வுகளின் போது முன்னின்று, அக்காரியங்களை நிறைவேற்றி வைக்கும் பழக்கமும் பண்பாடும் பாரம்பரியமாக முஸ்லிம் சமுதாயத்தில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்தான் திருமணம் அல்லது மண முறிவு நடந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை காஜிகள் வழங்கி வரும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. இத்தகைய காஜிகளின் சான்றிதழ்கள் நீதிமன்றங்களிலும், அரசாங்க அலுவலங்களிலும் சொத்து மற்றும் பாகப் பிரிவினைகள் நடக்கும் மன்றங்களிலும், ஏற்றுக்கொள்ளப்படுவதும் தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள வழக்கமேயாகும்.

இந்தப் பாரம்பரிய முறையில் திருமணம், மணமுறிவு மற்றும் வாரிசுதாரர்கள் பற்றிய காஜிகளின் சான்றளிப்புகளை தமிழக அரசும் மத்திய அரசும் அங்கீகரித்து ஏற்று, காஜிகளின் சான்றிதழ்கள் சட்டப்படியானவை என்று அறிவிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 06 - மஹல்லா ஜமாஅத் திருமணப்பதிவு:

தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் திருமணப்பதிவு தப்தர் (பதிவேடு)களில், தமிழ்நாடு அரசு 2009இல் நிறைவேற்றியுள்ள திருமண கட்டாயப்பதிவு சட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் திருமண பதிவுக்கென்று தனியே தரப்பட்டுள்ள படிவம் 1 (அ)இல் கண்டுள்ள விவரங்களின்படி முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்யுமாறும், அதற்குரிய நான்கு நகல்களை வைக்குமாறும், பதிவு செய்யப்பட்ட படிவ நகல் ஒன்றை மணமகன் வீட்டாருக்கும், மற்றொன்றை மணமகள் வீட்டாருக்கும், மற்றொன்றை மஹல்லா ஜமாஅத்திற்கும், மற்றொன்றை மாவட்ட காஜியின் திருமணப் பதிவு கோப்புக்கும் தரும் வகையிலும் தப்தர்களை அமைத்துக்கொள்ளுமாறு தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 07 - முஸ்லிம் திருமணங்களை சிறப்பு திருமணப் பதிவு சட்டப்படி பதிவு செய்யாதீர்:

மஹல்லா ஜமாஅத் தப்தர்களில் பதிவு செய்யப்படும் திருமணங்கள், அரசு பதிவாளர் அல்லது சார்பதிவாளர் இடம் பதிவு செய்யும்போது, படிவம் 1(அ) இல் உள்ளபடியும், மஹல்லா ஜமாஅத் தப்தரில் உள்ளபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம் திருமணங்களை விஷேச திருமணப்பதிவு சட்டப்படி (Special Marriage Act) பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் தத்தமது ஜமாஅத்தார்களுக்கு விளக்கிக் கூறுமாறும் இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 08 - ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துக:

இந்திய சிறுபான்மையருள் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் சமுதாயம், கல்வி, பொருளாதார, சமூக வாழ்வில் மிகவும் பின் தங்கியும், எஸ்ஸி, எஸ்.டி. வகுப்பினரின் நிலையிலும் தாழ்ந்து உள்ள நிலையிலும் உள்ளதால், முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கென்று தனியே 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு சட்டமாக்கி, முஸ்லிம் சமுதாயத்திற்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 09 - பொதுசிவில் சட்டம் பற்றிய பிரிவை நீக்குக:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள 44வது பிரிவும், நாடு முழுவதிலும் எல்லா மக்களுக்கும் ஏற்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அதில் இடம் பெற்றிருக்கும் வாசகமும், அதே அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், மத சுதந்திரத்திற்கும், சமயச் சார்பின்மைக் கொள்கைக்கும் மாறுபட்டும், முன்னுக்குப் பின் முரணாகவும் இருப்பதால், அந்த 44வது பிரிவை அரசியல் அமைப்புச்சட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக் குழுக் கூட்டம் வற்புறுத்துகிறது.

தீர்மானம் 10 - உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகள் நியமனம் செய்யக் கோரிக்கை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகள் 40 பேரும் கூடுதல் நீதிபதிகள் இருவரும் உள்ளனர். அறுபது நீதிபதிகள் நிரந்தரமாக இருப்பதற்கு நியதி இருக்கிறது. இப்போதுள்ள 42 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவராக இருக்கிறார். அவரும், வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.

42 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்து வந்துள்ள மரபு இருக்கிறது. அந்த பாராட்டுக்குரிய மரபு இப்பொழுது பின்பற்றப்படாதிருப்பது, தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்குரிய பிரதிநிதித்துவமே இல்லை என்னும் வருந்தத்தக்க நிலையை உருவாக்கியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் குறைந்தபட்சம் நான்கு முஸ்லிம் நீதிபதிகள் இடம்பெறும் வகையிலும், சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையிலும் நீதிபதிகளின் நியமனங்களைச் செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் பரிந்துரைக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 11 - இலங்கை வடக்கு மாகாண புதிய அரசுக்கு வரவேற்பு:

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழ் தேசிய முன்னணி 80 சதவீதம் வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியைக் குவித்து, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராகத் தேர்வு செய்திருப்பதை இக்கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்துகிறது.

இலங்கையின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வகையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அதிகாரப்பகிர்வுகளையும் ஜனநாயக முறையில் பெறுவதற்குரிய அணுகுமுறையை தமிழ் தேசிய முன்னணி அரசு பின்பற்றும் என முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

வடக்கு மாகாண தமிழ் தேசிய முன்னணி அரசின் இந்த பண்பட்ட, பாராட்டுக்குரிய, பக்குவப்பட்ட அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு இலங்கை அரசும், இந்திய அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் தேவைப்பட்ட ஒத்துழைப்பு, ஆதரவு, உதவிகள் அனைத்தையும் செய்திட முன்வர வேண்டும்மென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12 - நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி:

2014 மே மாதம் நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்று, ஜனநாயகப் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்வதென்றும், தேசிய அளவில் ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, சமூகநீதிக் கொள்கைகளைப் பேணிப் பாதுகாப்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்து, மாநிலந்தோறும் தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் துறைகளில் தன்னிறைவு பெறும் வகையில் எல்லா வகையான ஒத்துழைப்பும் நல்கிவருவதோடு, நாட்டு மக்களின் சமூகப் பன்முகத் தன்மையை மதித்துப் போற்றி, மதம், மொழி, இனம், மற்றும் கலாச்சார வழிப்பட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பளித்து, அவர்களின் நன்மதிப்பைப் பெறுகின்ற நல்லாட்சி அமையப் பாடுபடுவதெனவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் தி.மு.க.வுக்கும் இடையில் நீண்ட காலமாக தொடர்ந்து நீடித்து வரும் கொள்கை ரீதியான உறவும், கூட்டணியும் தொடரும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமை நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved