தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளையின் சார்பில், காயல்பட்டினம் அலியார் தெருவில், ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியருகில், இம்மாதம் 07ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 06.15 மணி முதல் இரவு 10.00 மணி வரை பிறை ஆய்வரங்கம், ததஜ தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் யு.அப்பாஸ் அலீ தலைமையில் நடைபெற்றது.
ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.அப்துல் மஜீத் உமரீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, பிறை தொடர்பாக பார்வையாளர்கள் பலர் கேட்ட பலதரப்பட்ட கேள்விகளுக்கு, ததஜ மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.ஏ.ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபீ விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முழுவதும், ததஜ காயல்பட்டினம் கிளை இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல்:
ஷம்சுத்தீன்
தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
காயல்பட்டினம் நகர கிளை |