சேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தல், தாது மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தல், காயல்பட்டினம் ஒருவழிப்பாதையில் புதிய சாலையை விரைந்து அமைத்தல், நகரில் குடிநீர் வினியோகத்திலுள்ள பாரபட்சத்தைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - திருச்செந்தூர் ஒன்றியக் குழுவின் சார்பில் இன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பரப்புரைப் பயணத்தின் முதற்குழு தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணித்தது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராஜேஷ், அதன் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து ஆகியோர் ஒருங்கிணைப்பிலான பயணக்குழு, இன்று காலை 09.00 மணியளவில் திருச்செந்தூரில் பயணத்தைத் துவக்கியது.
அங்கிருந்து வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, தெற்கு ஆத்தூர், வடக்கு ஆத்தூர், முக்காணி, பழைய காயல், துறைமுகம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்தது.
காயல்பட்டினத்திற்கு வருகை தந்த பயணக்குழுவினர், பேருந்து நிலையம் முன்பு உரையாற்றிய பின்னர், பயணத்தைத் தொடர்ந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |