| |
செய்தி எண் (ID #) 12038 | | | புதன், அக்டோபர் 9, 2013 | முஸ்லிம் மாணவர் பேரவை மாநாட்டில், காயல் மகபூப் எழுதிய “இடஒதுக்கீடு பார்வையும், சமுதாயக் கடமையும்” நூல் வெளியீடு! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2169 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்.)யின் சார்பில் இம்மாதம் 05ஆம் தேதி மாலையில், சென்னை எழும்பூரிலுள்ள பெரியார் திடலில் நடைபெற்ற மாநில மாநாட்டின்போது, முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், ‘மணிச்சுடர்’ நாளிதழின் செய்தி ஆசிரியரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான காயல் மகபூப் எழுதிய “இட ஒதுக்கீடு பார்வையும், சமுதாயக் கடமையும்” என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, விருதுநகர் ஹோட்டல் அதிபர் இப்ராஹிம்ஷா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, மேடையிலுள்ள கேரள அமைச்சர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உள்ளிட்டோருக்கு அடுத்தடுத்த பிரதிகள் வழங்கப்பட்டன. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|