காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 12ஆவது மாதாந்திர கூட்டம் குறித்து அவ்வமைப்பின் சார்பில் அதன் அமைப்பாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டணம் மார்ச் 8 (2014) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் புதுப்பள்ளி மகாம் ரிஸ்வான் சங்கம் (அரசு நூலகம்) அருகில் 12வது மாதாந்திர கலந்துரையாடல் சொற்போர் நடந்தது.
இதன் அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் இலக்கிய பிரியர்களை வரவேற்று பேசினார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்ன பொன்மொழி ஒன்று சொல்லி துவங்கி வைத்தார்கள்.
வறுமை வருமுன் செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்
சுகவீனம் வருமுன் சுகத்தைத் தேடிக் கொள்ளுங்கள்
மரணம் அடையுமுன் நல்அமல்களை தேடிக் கொள்ளுங்கள்
என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 12ஆம் மாத இலக்கிய கலந்துரையாடலில் முகைதீன் பள்ளி ஆசிரியர் பி.ஏ.ஜெ.மகதூம் அவர்கள், எஸ்.இ.எம்.ஹிஜாஸ் நூஹு அவர்கள், திரு. ஆ.ராமகிருஷ்ணன், திரு. கே.சுந்தரபாண்டியன் ஆகியோர்கள் விருந்தாளிகளான கலந்து கொண்டனர்.
முகைதீன் பள்ளி ஆசிரியர் பி.ஏ.ஜெ.மகுதூம் அவர்கள் பேசும் போது நிறைய தகவல்களைப் பதிவு செய்தார்கள். 916 கோல்ட் என்றால் என்ன என்று தெளிவுபடுத்திப் பேசினார்கள். வேப்ப மரம் நம் நாட்டுக்குச் சொந்தமானது. ஆனால் அமெரிக்கா அதில் வைத்திய பொருட்கள் இருப்பதை உணர்ந்து அமெரிக்காவுக்கு வேப்பமரம் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது என்று விபரம் தந்தார்கள்.
கௌரவ ஆலோசகர் க.வில்சன் அவர்கள் இந்தியாவைப் பற்றி பல தகவல்களை புதுமைப்படுத்தினார். இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய கட்சியாக எப்படி உருவாகிறது என்றால் நான்கு மாநிலத்திலும் கட்சி உறுப்பினர்கள் அதிகம் வேண்டும். அத்துடன் நான்கு மாநிலங்களின் ஆடுயுக்களும் அக்கட்சிக்கு வேண்டும் என்றார்.
கோவில்பட்டி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இஞ்சினியரிங் படிக்கும் ஏ.ஆ.மீரான் கூறும்போது சென்னையில் ஒரு டீக்கடையை இஞ்சினியர் நடத்தி வருகிறார். அவரே 45 டிகிரியில் டீயை ஆத்துவதால் டீ ருசியாகவும் சுவையாகவும் இருப்பதாக அருகாமையிலுள்ள மக்கள் இவர் கடைக்கு டீ சாப்பிட படை எடுக்கிறார்கள் என்றார். காகம், நாய், பாம்பு, திருடர்கள் இல்லாத தீவு லடசத்தீவு. ஒவ்வொரு தீவும் 3 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். சுற்றிலும் கடல் சூழ்ந்து இருக்கும். தனி அதிகாரம் பெற்றவர்கள் மட்டும் தான் உள்ளே வர முடியும். அதனால் திருடர் பயமில்லை - கள்ளர்களும் இல்லை எங்கும் தென்னை மரங்களும் காட்சி தரும் என்றார்.
நேரில் சென்ற நமது உறுப்பினர் ஏ.கே.செய்யது அகமது மூன்று மாதங்கள் பயணத் தொடரை விவரித்து வருகிறார். கௌரவ ஆலோசகர் திரு.வி.எம்.பாலமுருகன், ஏ.ஆர்.ஷேய்க் முஹம்மது ஆகியோர் அறிவியல் தகவல்களையும் நாகேஷின் நகைச்சுவைகளையும் சொன்னார்கள்.
மஃக்ரிபு பாங்கு சொன்னவுடன் இந்த இலக்கியப் பேச்சு முடிவு பெற்றது. கவிஞர் ஷேக் நன்றி கூறினார். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 11ஆவது மாதாந்திர கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |