சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் நாளன்று நடத்துவது குறித்து, அதன் மார்ச் மாத செயற்குழுக் கூட்டத்தில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மார்ச் மாத செயற்குழு கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் மார்ச் மாத செயற்குழுக் கூட்டம், 08.03.2014 வெள்ளிக்கிழமை 19.45 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் ஹாஃபிழ் ஃபஜுல் இஸ்மாயீல் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்ட அமைப்பாளர் உரை:
அடுத்து பேசிய - நடப்பு கூட்ட அமைப்பாளர் ஃபஜுல் இஸ்மாயீல் கூறுகையில், இம்மாத செயற்குழு கூட்டத்திற்கான அழைப்பு மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவை அனைத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களிடமிருந்து பதில் வந்துள்ளதாகவும் கூறினார்.
புதிய உறுப்பினர் சேர்க்கை:
சிங்கையில் வேலைவாய்ப்பு தேடி புதிதாக வந்து அண்மையில் வேலை கிடைக்கப்பெற்ற ஹிஜாஸ் மைந்தன் எனும் எம்.என்.எல். முஹம்மது ரபீக் மன்றத்தின் புதிய உறுப்பினராக இணைக்கப்பட்டதுடன், செய்தித் தொடர்பாளரகவும் ஏக மனதாக அறிவிக்கப்பட்டார். அவர் பேசியதாவது:-
சிங்கை கா.ந.மன்றத்தின் செயலாக்கங்களை ஊடகங்கள் வாயிலாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு தற்போது உடன் இருந்து சேவையாற்றும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கும் ஆதரவு கரம் நீட்டிய உறுப்பினர்களுக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அந்நிய நாட்டில் வேலை தேடி வருவோர்க்கு ஆதரவாக பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதுடன் சொந்த சகோதரனைப் போன்று அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி அவரது வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வரும் இதுபோன்ற நல மன்றங்கள் பல நாடுகளிலும் இருந்து செயல்பட்டு வருவது நம் காயலர்களுக்கு கிடைத்த மாபெரும் அருட்கொடை. இத்தகைய மன்றங்களில் தம்மை ஈடுபடுத்தி நம் ஊர்மக்களுக்கு உதவியாக இருந்து வரும் அனைத்து காயல் நல மன்றங்களின் அங்கங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக. என்னை தேர்வு செய்து எனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பை நல்ல முறையில் செயல்படுத்தும் ஆற்றலை அல்லாஹ் வழங்கியருள துஆ செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் பிப் 2014 வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது. மன்ற உறுப்பினர்களின் சந்தா தொகையை குறித்த நேரத்தில் பெறுவது அவசியம் என்றும் அதனால் உதவிப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஏதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நலிந்தோருக்கு சமையல் பொருட்கள் வழங்கல்:
ஊரில் உள்ள நலிந்தோருக்கு உதவி செய்யும் பொருட்டு 73 பேருக்கு இம்மாதம் 15ஆம் தேதி சமையல் பொருட்கள் வழங்குவது குறித்த தீர்மானத்திற்கு மன்றம் ஒப்புதலளித்தது.
மருத்துவ உதவி:
ஷிஃபா அமைப்பின் மூலம் மருத்துவ உதவிகோறி பெறப்பட்ட வின்னப்பங்கள் யாவும் பரிசீலிக்கப்பட்டு நாற்பத்தி இரண்டு வின்னப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குரிய தொகையையும் அனுப்பி வைக்கப்பட்டது.
அடுத்த கூட்ட அமைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த (ஏப்ரல்) செயற்குழுக் கூட்ட அமைப்பாளராக உறுப்பினர் V.N.S.முஹ்சின் நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் மாத வருடாந்திர பொதுக்குழு குறித்த ஆலோசனை:
நடைபெறவிருக்கும் வருடாந்திர பொதுக்குழு நிகச்சியில் வழக்கம் போல் ஒன்றுகூடல், விளையாட்டுப் போட்டிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள், ஹிஃப்ழுல் குர்ஆன் போட்டி, பரிசுகள் வழங்கல், தங்குமிடம், உணவு ஏற்பாடுகள், போக்கு வரத்து, நிகழ்ச்சி ஏற்பாடு, என பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர். பல கட்டங்களாக பல்வேறு இடங்களில் வைத்து கால்பந்து, பூபந்து, மட்டைப்பந்து, கூடைப்பந்து, கேரம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றை நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக, மார்ச் 7ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு கால்பந்து போட்டி (பெனால்டி கிக்) லவண்டர் விளையாட்டு மைதானத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மன்ற ஆலோசகர் உரை:
தொடர்ந்து, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள், நடைபெறவிருக்கும் வருடாந்திர பொதுக்குழு சிகழ்ச்சிகளை வழக்கம் போல் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் முன் நின்று நடத்த வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். வழக்கப் போல் இவ்வாண்டும் நல்ல முறையில் இந்நிகழ்ச்சி நடைபெற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று கூறினார்.
கூட்ட நிறைவு:
மன்றத்தின் மார்ச் மாத செயற்குழு கூட்டம் ஹாஃபிழ் M.A.C. செய்யத் இஸ்மாயீல் துஆவுடன் நிறைவுற்றது. பின்னர் அனைவருக்கும் இரவு உணவாக ஜித்தா செய்மீன் காக்காவின் கைவண்ணத்தில் சுவையான கருவாட்டுக் குழம்பும், தேங்காய் சோறு, முட்டை, மாசு ஆகியவை பறிமாறப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பிப்ரவரி 2014 செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |