Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:05:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13236
#KOTW13236
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 13, 2014
ஒரு வழிப்பாதையில் சாலை பணிகளுக்கான நீதிமன்ற தடை நீங்கியது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3761 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் ஒரு வழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியில், புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது.



இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கவேண்டியுள்ளதால் - சாலை மீண்டும் தோண்டப்படும் என்றும், அதனால் பொது மக்களின் வரிப்பணம் வீண் விரயம் ஆகும் எனக்கூறி - பெரிய நெசவு தெருவை சார்ந்த டி.செய்து அஹமது என்பவர் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் - பொது நல வழக்கு (PUBLIC INTEREST LITIGATION) தொடுத்திருந்தார்.

அவ்வழக்கு (எண் WP [MD] 20879 / 2013) ஜனவரி 2 அன்று விசாரணைக்கு வந்தப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர், புதிய சாலை அமைப்புப் பணிக்கு இடைக்காலத் தடைவிதித்து பதில் வழங்கும்படி நகராட்சிக்கு உத்தரவிட்டனர். நகராட்சி சார்பில் ஒரு வார காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டாலும், பல்வேறு காரணங்களுக்காக வழக்கு நிறைவுறாமல் இருந்தது.

இன்று (மார்ச் 13) இவ்வழக்கு நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.



மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பெத்து ராஜேஷ் ஆஜரானார். நகராட்சி சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.செல்வராஜ் ஆஜரானார். வாதங்களை தொடர்ந்து இறுதியில் - இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தேர்தல் நடக்க இருப்பதால், பணிகள் துவங்குமா?
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [14 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33700

அல்ஹம்துலில்லாஹ். தடை நீங்கிவிட்டதால், பணிகள் சீக்கிரமே ஆரம்பித்து, மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்று நம்பலாம். அந்த தெருவாசிகளுக்கு சிரமம் நீங்கும்.

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வேலை துவங்குமா? அல்லது, இந்த பணி தேர்தல் அறிவிக்கும் முன்பே துவங்கப்பட்டதால் பிரச்சனை ஏதும் இல்லாமல் தேர்தலுக்கு முன்பே பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [14 March 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33701

எப்பம்தான் ரோடு போடுவார்களாம்? ஒருவழி பாதை இல்லாமல் அனைத்து பேருந்துகளும் நகர எல்கைக்குள் உள்ளே வருவதில்லை. ஒருசிலரின் உள்நோக்க குளறுபியாடியினால் புகைவண்டிக்கு ஆறுமுகநேரி போதுபோல, பேருந்து பயணம் செல்ல இனி வரும் காலம் திருச்செந்தூர்தான் போகவேடிய நிலை இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. விரைவில் சாலை அமையபெற்று முடிவுக்கு வர துவா அனைவரும் செய்வோமாக..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [14 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33702

நகரின் அணைத்து வியாபார பெருமக்களும், பொது மக்களும் மற்றும் ஜமாஅதுக்களும், பொதுநல அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட ஆயத்தமாகி கொண்டு இருக்கும் வேளையில் நல்ல ஒரு செய்தி கிடைத்துள்ளது.. இன்ஷா அல்லாஹு கூடிய விரைவில் நல்ல தரமான சாலை அமைக்கப்பெற்று பொது மக்களின் அன்றாட போக்குவரத்து சீராக அமைந்து இனி யார் மூலமாகவும் இனி எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இச்சாலை முடிவுக்கு வர நாம் யாவர்களும் பிராத்திப்போமாக.. ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [14 March 2014]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 33703

அல்ஹம்துலில்லாஹ். எப்படியோ ரோடு போட்டு முடிச்சா நல்லதுதானே எல்லோருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved