காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - இன்று (மார்ச் 15) நள்ளிரவு - அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க அரசாங்க விருந்தினராக
பயணம் மேற்கொள்ளும் நகர்மன்றத் தலைவர் - 3 வாரங்கள், அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள
உள்ளார்.
INTERNATIONAL VISITOR
LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில்
அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய சமூக ஆர்வலர்கள் செல்கின்றனர்.
அவர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர்
முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர்,
ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர் ஆவர்.
சென்னை விமான நிலையத்தில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் உட்பட பயணக்குழுவினர் ...
தற்போதைய தகவல்கள்படி - இக்குழுவினரின் பயண விபரம் வருமாறு:
(1) மார்ச் 15 முதல் மார்ச் 20 வரை - வாஷிங்டன் டி.சி.
(2) மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை - பால்டிமோர் மற்றும் அன்னபோலிஸ், மேரிலன்ட்
(3) மார்ச் 22 முதல் மார்ச் 26 வரை - டெட்ராய்ட், மிசிகன்
(4) மார்ச் 26 முதல் மார்ச் 30 வரை - சியாட்டல், வாஷிங்டன்
(5) மார்ச் 30 முதல் ஏப்ரல் 02 வரை - மோன்ட்கோமரி மற்றும் செல்மா, அலபாமா
(6) ஏப்ரல் 02 முதல் ஏப்ரல் 05 வரை - நியூயார்க், நியூயார்க்
முன்னதாக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், அக்டோபர் 21, 2013 முதல் நவம்பர் 8, 2013 வரை, இப்பயணத்தை
மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சனையால் 16 நாட்கள் அமெரிக்க அரசாங்கத்தின்
பல்வேறு துறைகள் முடங்கியது காரணமாக - பயணத் தேதி ஒத்திவைக்கப்பட்டு, புதிய தேதிகள் அமெரிக்க அரசாங்கத்தால் சமீபத்தில்
வழங்கப்பட்டது என தெரிகிறது.
சென்னை விமான நிலையத்தில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரை வழியனுப்ப வந்திருந்த அவரின் கணவர் சேக் அப்துல் காதர் ...
|