மைக்ரோகாயல் அமைப்பின் காயல் மெடிக்கல் கார்டு (KAYAL MEDICAL CARD) மற்றும் Chronic Detection and Treatment (CDT) க்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 முதல் விநியோகிக்கப்படுகின்றன. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும்,
மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் அசோசியேசன் நம் KMT மருத்துவமனையுடன் இணைந்து பைலட் ப்ராஜக்ட் என்ற முறையில் 2013 செப்டம்பர் முதல் 2014 மார்ச் வரை சுமார் 50 பயனாளி குடும்பங்களுக்கு இந்த காயல் மெடிக்கல் கார்டு என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ கன்சல்டேசன், பரிசோதனைகள், மருந்துகள் ஆகியவற்றின் மதிப்பில் 25% மட்டும் பயனாளிகளால் செலுத்தி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நல்ல மருத்துவ சேவையை பெற்றுள்ளனர்.
மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் அசோசியேசன் KMT மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தும் காயல் மெடிக்கல் கார்டுக்கான (KMC) 2014-2015 பருவ வருட விண்ணப்பங்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச் 12) முதல் கீழ்க்காணும் இடங்களில் வினியோகிக்கப்படும்.
(1) மைக்ரோகாயல் அலுவலகம்,
கடைப்பள்ளி எதிரில்,
காயல்பட்டணம்.
தொலைபேசி எண்: 04639 281381
(மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை)
(2) டெஸ்ட் நவ் இரத்தப்பரிசோதனை நிலையம்,
முர்ஷித் ஜெராக்ஸ் மாடியில்,
எல்.கே.லெப்பைதம்பி சாலை,
காயல்பட்டணம்.
தொலைபேசி எண்: 81486 05641
இந்த சேவையை கீழ்காணும் நபர்கள் மற்றும் பெற தகுதியானவர்கள்:
(1) மஸ்ஜித், மதரசாவில் பணிபுரிபவர்கள்
(2) இஸ்லாத்தில் திரும்பியவர்கள்
(3) விதவைகள்
(4) அனாதைகள்
(5) வீட்டில் உழைக்க சக்தி படைத்தவர்கள் இன்றி வாழ்பவர்கள்
மேலும் மேற்கூறப்பட்ட 5 வகையினரும் ஜகாத் வாங்க தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும்.
CDT (CHRONIC DETECTION AND TREATMENT) என்பது தொடர் நோய்களுக்கான (உதாரணம்: சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொலஸ்ற்றால், இருதய சம்பந்த நோய்கள்) தொடர் மருந்து மற்றும் பரிசோதனைகளுக்கான உதவி திட்டம். இன்ஷா அல்லாஹ் இது மருத்துவர்கள், பரிசோதனையாளர்கள், மொத்த மருந்து கொள்முதலாளர்கள் (GENERIC) ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.
இந்த சேவையையும் மேற்கூறிய 5 வகையினர் மற்றும் பெற தகுதியானவர்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|