இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) சார்பில், திருச்செந்தூர் வட்டார அளவில் இவ்வாண்டின் சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது, எல்.கே.பள்ளிகளின் 10 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) திருநெல்வேலி மண்டலம் சார்பில், திருச்செந்தூர் வட்டார அளவில் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நன்னடத்தை, கல்வித்திறன், விளையாட்டுத் திறன் ஆகியவற்றை அளவுகோல்களாகக் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் சிறந்த பள்ளி மாணவர்களாக, காயல்பட்டினம் எல்.கே. துவக்கப்பள்ளியின் 01 முதல் 05ஆம் வகுப்பு வரையிலான 5 மாணவ-மாணவியரும், எல்.கே. மேனிலைப்பள்ளியின் 06 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான 5 மாணவர்களும் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:-
எல்.கே. துவக்கப்பள்ளியின் 5 மாணவ-மாணவியர்:
(01) எம்.ஷேக் முஹம்மத் (01ஆம் வகுப்பு)
(02) எம்.சபீதா (02ஆம் வகுப்பு)
(03) எஸ்.அபிநயா (03ஆம் வகுப்பு)
(04) எஸ்.சரண்யா (04ஆம் வகுப்பு)
(05) ஆர்.முஹம்மத் ரிழ்வான் (05ஆம் வகுப்பு)
எல்.கே. மேனிலைப்பள்ளியின் 5 மாணவர்கள்:
(06) கே.எஸ்.முஹம்மத் ஹுனைஃப் (06ஆம் வகுப்பு)
(07) எம்.எஸ்.ஸஅதுல்லாஹ் (07ஆம் வகுப்பு)
(08) எம்.ஏ.கே.காதர் தாஹா (08ஆம் வகுப்பு)
(09) எம்.இசட்.காதர் ஸாஹிப் ரியாஸ் (09 ஆம் வகுப்பு)
(10) பி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் (10ஆம் வகுப்பு)
இம்மாணவர்களுக்கு சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா, எல்.கே.மேனிலைப்பள்ளி கலையரங்கில், இம்மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை (நேற்று) 17.00 மணிக்கு நடைபெற்றது.
ஆயுள் காப்பீட்டுக் கழக திருநெல்வேலி மண்டல அதிகாரிகள், எல்.கே.பள்ளிகளின் துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர் வாழ்த்துரை வழங்கினார்.
மேடையில் முன்னிலை வகித்த ஆயுள் காப்பீட்டுக் கழகம் நிறுவன அதிகாரிகள் அனைவருக்கும் எல்.கே. பள்ளிகள் நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளர் வி.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
பின்னர், இவ்வாண்டின் சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ், எல்.கே. பள்ளிகளின் 01 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டது.
எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
விழா ஒருங்கிணைப்புப் பணிகளை, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில், அதன் அலுவலரான - காயல்பட்டினத்தைச் சேர்ந்த கொமந்தார் இஸ்மாஈல் செய்திருந்தார்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |