காயல்பட்டினம் மகுதூம் தெருவில் இயங்கி வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இந்நாள் மாணவ-மாணவியருக்கும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள முன்னாள் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
பரிசளிப்பு விழா இம்மாதம் 08ஆம் நாள் சனிக்கிழமை காலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பி.அபூபக்கர் கிராஅத் ஓதினார். பள்ளி இயக்குநரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் - ஆறுமுகநேரி கல்விச் சங்க முன்னாள் தலைவர் துரைப்பாண்டியன் இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி, வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அவரும், முன்னிலை வகித்த ஆசிரியை தீபா திரிபுரசுந்தரியும் மாணவ-மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கினர்.
2012-2013, 2013-2014 கல்வியாண்டுகளில், கல்வி - விளையாட்டு - தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளியின் மழலையருக்கு துவக்கமாக பரிசுகள் வழங்கப்பட்டன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, பல்வேறு பள்ளிகளில் பயின்று வரும் - ரஃப்யாஸ் முன்னாள் மாணவ-மாணவியருக்கும், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்து ஹாஃபிழ்களான ரஃப்யாஸ் முன்னாள் மாணவர்களுக்கும் இவ்விழாவில் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், பள்ளி மழலை மாணவ-மாணவியர் பங்கேற்ற மாற்றுடையணிதல் (Fancy Dress) நிகழ்ச்சியும் நடைபெற்றது.
[இப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
விழா நிகழ்ச்சிகள் அனைத்திலும், பள்ளியின் மழலை மாணவ-மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
Mofamalik |