காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில், நேற்று மதியம் இதமான இதமான மழை பெய்தது. இதனையடுத்து, நேற்றிரவு நகரின் பல பகுதிகளில், விளக்கு வெளிச்சங்களைத் தேடி ‘அழையா விருந்தாளி’களாக ஈசல் படை வந்து குவிந்தது.
காயல்பட்டினம் செய்கு ஹுஸைன் பள்ளியில் மஃரிப் தொழுகையில் ஈடுபட்டிருந்தோரின் ‘சகல பகுதிகளிலும்’ அவை சுற்றிப் பார்த்ததால், அவர்கள் சிறிது அவதியுற்றனர்.
அண்மைக் காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகின்றபோதிலும், ஈசல் படை ஊருக்குள் நேற்றிரவுதான் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |