சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 3 லட்சத்து 30 ஆயிரத்து 750 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 50வது செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 23-ம் தேதி) AL FANEYA (சவுதி ETA ) குழும வளாகத்தில் மன்ற ஆலோசகர்களான சகோதரர்கள் பொறியாளர். S.M.A. முஹியத்தீன் சதக்கத்துல்லாஹ் மற்றும் M.E.L. நுஸ்கி ஆகியோரது ஏற்பாட்டில் ஆஸூரா தின இஃதார் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பமாக கூட்டத்தை இறைமறை ஓதி M.E.L. நுஸ்கி அவர்கள் துவக்க அதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் சாராம்சத்தை ஸூபி இப்ராஹிம் அவர்கள் வாசித்தார். அதன் பின் பொறியாளர். S.M.A. முஹியத்தீன் சதக்கத்துல்லாஹ் அவர்கள் வந்தோரை வரவேற்றார். அடுத்து இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற மன்ற வெள்ளி சித்தீக் அவர்கள் தலைமையுரையாற்றினார். சகோதரர் வெள்ளி சித்தீக் அவர்கள் தனது தலைமையுரையில் நம் மன்றம் கடந்த வருடங்களில் மிக சிறப்பாக சேவைகளை புரிந்து வருகிறோம் என்றும், இந்த வருடத்தோடு (2014-15) எல்லா உறுப்பினர்கள் பொறுப்பு காலம் முடிவடைவதால் மேலும் வலு சேர்க்கும் விதமாக நல்ல ஆர்வமுள்ள பொதுக்குழு உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களையும் செயற்குழுவில் இனைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.
நல திட்ட உதவிகள்:
நம் ஊரிலிருந்து பெறப்பட்ட 13 மருத்துவ கடிதங்கள் அலசப்பட்டு அவ்வகைக்கு ரூ. 2,56,000/ ஓதுக்கீடு மற்றும், அதோடு நேரடியாக பெறப்பட்ட கல்வி மற்றும் சிறு தொழில் உதவியாக ரூ. 74,750/ வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
இரவு நேர அவசர மருத்துவ உதவி:
'இரவு நேர அவசர மருத்துவ ஊர்தி மற்றும் மருத்துவர் சேவை' தேவை என்பதை கருதி நமதூர் KMT மருத்துவமனையில் செயல்படுத்தும் திட்டத்தை நம்மன்ற தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரீஸ் மற்ற காயல் நல மன்றங்களோடு கலந்தாலோசித்த செய்தியை உறுப்பினர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.
பார்வையாளர்கள் கருத்து:
எல்லா செயற்குழு கூட்ட நிகழ்வுக்கும் 2 அல்லது 3 பார்வையாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சீறிய கருத்தை/ஆலோசனையை பெரும் விதத்தில், இக்கூட்டத்திற்கு சகோதரர்கள் இர்ஷாத் மற்றும் சுலைமான் ஷபீக் கலந்து கொண்டு கருத்தை தெரிவித்தார்கள்.
ஷபீக் தெரிவிக்கையில், நம் ரியாத் மன்றம் வரும் விண்ணபங்களை கையாளும் முறைகளை தெரிவிதற்கு ஆர்வமாகவே இருந்தேன், இந்த தடவை ஒரு வாய்ப்பு கிடைத்தது. எல்லா வின்னபங்களும் துல்லியமாக ஆராயப்பட்டு அழகான முறையில் நோயின் தன்மை அடிப்படையில் உதவிகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இர்ஷாத் அவர்கள் சவுதி அரேபியாவில் ரியாத் மன்றம் வெகு வேகமாகவும், அழகாகவும் விண்ணபங்களை பரிசீலிக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.
இக்கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சகோதரர்கள் S.M.A.முஹியத்தீன் சதக்கத்துல்லாஹ் M.E.L. நுஸ்கி Y.A.S.முஹ்சின்,S.S.முஹம்மத் மற்றும் ஹாஜி செய்து முஹம்மத் ஆகியோரின் அனுசரணையில் இஃப்தார் உணவு வழங்கப்பட்டது.
இறுதியாக Y.A.S.முஹ்சின் அவர்கள் நன்றி நவில S.M.B. செய்யது முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் துஆ பிரார்த்தனையோடு குழு படம் எடுத்து பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யித் இஸ்மாயீல்
ஹாபிழ் S.A.C.சாலிஹ்
செய்தி தொடர்பாளர்கள் - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (49ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |