இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களது கூட்டத்தாரையும் எதிரிகளிடமிருந்து இறைவன் காப்பாற்றிய நாள் முஹர்ரம் 10 என்ற வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் முஹர்ரம் மாதம் 09, 10 நாட்களில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பது வழமை.
நடப்பாண்டில், அக்டோபர் 23, 24ஆம் நாட்களில் முஹர்ரம் 09, 10 நாட்களாகக் கொண்டு, காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியில் அவ்விரு நாட்களிலும் மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல் நாளன்று (நேற்று முன் நாள்) அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, மஞ்சாள் வாடா, சிக்கன் 65, பால் கலந்த குளிர்பானம், பப்பாளிப் பழம், இளநீர் ஆகியன நோன்பு துறக்கும்போதும், தொழுகைக்குப் பின் தேனீரும் பரிமாறப்பட்டது. இதில் சுமார் 85 பேர் வரை கலந்துகொண்டனர்.
மறுநாளில் (நேற்று) பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, பெட்டீஸ், க்ரில் சிக்கன், ஈத்தம்பழ சர்பத், பழங்கள், ஆகியன நோன்பு துறக்கும்போதும், தொழுகைக்குப் பின் தேனீரும் பரிமாறப்பட்டது.
பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்ட இந்நிகழ்வில், அந்நாட்களில் நோன்பு நோற்றிருந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படக்காட்சிகள்:-
தகவல் & படங்கள்:
P.H.M.முஹம்மத் இஸ்மாஈல்
அஹ்மத் நெய்னார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |