காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி வி.எஸ்.எஸ்.ஹல்லாஜ், 23.10.2015 வெள்ளிக்கிழமையன்று 21.15 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
மர்ஹூம் வேனா ஷேக் சுலைமான் அவர்களின் மகனும்,
மர்ஹூம் வாவு முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,
வி.எஸ்.எஸ்.ஸித்தீக் என்பவரின் சகோதரரும்,
வி.எச்.ஷேக் ஸுலைமான், வி.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், வி.எச்.அபூபக்கர், வி.எச்.முஹம்மத் அப்துல் காதிர், வி.எச்.ஷம்சுத்தீன் ஆகியோரின் தந்தையும்,
வாவு முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மாமனாரும்,
வி.எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் வி.எம்.எம்.ஹல்லாஜ், வி.எம்.எம்.ஜின்னா, எம்.கே.எஸ்.செய்யித் ஹுஸைன் ஆகியோரின் மச்சானும்,
கத்தீபு ஸாஹிப் தம்பி, கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் மருமகனும்,
எஸ்.எம்.எஸ்.தைக்கா தம்பி, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஹாஜி கே.டீ.பாதுல் அஸ்ஹப் ஆகியோரின் சகலையும்,
எஸ்.எச்.முத்து காதிர் ஸாஹிப், எஸ்.எச்.ஷேக் சுலைமான் ஆகியோரின் தாய்மாமாவும்,
வி.ஏ.எஸ்.ஷேக் ஸுலைமான் என்பவரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, 24.10.2015 சனிக்கிழமையன்று 13.30 மணியளவில், ஆந்திராவிலுள்ள ஜாமிஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:
S.E.முஹம்மத் நூஹ் |