காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட், இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.
10ஆம் ஆண்டு நிகழ்ச்சி, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” எனும் தலைப்பில், 05.09.2015 சனிக்கிழமையன்று காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
கலந்துரையாடல் நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா:
அன்று 11.00 மணிக்கு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் மாநில சாதனை மாணவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், 19.00 மணிக்கு, பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன.
கலந்துரையாடல் நிகழ்ச்சி:
அன்று காலையில் சாதனை மாணவியரான - திருப்பூர் விகாஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற ஜெ.பவித்ரா, கோயமுத்தூர் சவுடேஷ்வரி வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற எல்.பி.நிவேதா ஆகியோருடன், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தம் பெற்றோருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சாதனை மாணவியருடன் எம்.ஜெ.ஹபீபுர்ரஹ்மான் கலந்துரையாடினார். மாணவ-மாணவியரின் கேள்விகளுக்கும் சாதனை மாணவியர் விடையளித்தனர்.
பரிசளிப்பு விழா:
அன்று 19.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், எம்.ஏ.எஸ்.ஜரூக், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முஹம்மத் ஆயிஷா, ஜுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மு.ஜெஸீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மாணவர் ஹாஃபிழ் ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை:
விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார். உரையைத் தொடர்ந்து அவருக்கு, முன்னிலை வகித்த - இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் நினைவுப் பரிசு வழங்கினார்.
சாதனை மாநில - நகர சாதனை மாணவ-மாணவியரைப் பாராட்டிப் பேசிய அவர், காயல்பட்டினம் கடற்கரை இளம்பருவத்திலுள்ள மாணவர்கள் சமூகச் சீரழிவில் திளைப்பதற்குக் களமாகிவிடுமோ என்று அச்சப்படுவதாகவும், தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுவதாகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார். [அவரது முழு உரை தனிச் செய்தியாக வெளியிடப்படும்.]
இக்ராஃ, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறிமுகவுரை:
தொடர்ந்து, இக்ராஃ கல்விச் சங்கம் குறித்து - அதன் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் குறித்து அதன் அறங்காவலர் ‘நெட்காம்’ புகாரீ ஆகியோர் அறிமுகவுரையாற்றினர்.
மாநிலத்தின் முதன்மாணவியர் குறித்து இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் அறிமுகவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் சிறப்புரையாற்றினார். முன்னதாக, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் - சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்தரத்தக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும், இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்த அமைப்பினரைப் பாராட்டியும் பேசிய அவர், மாணவர்களின் நல்ல எதிர்காலம் அவர்களது ஆசிரியர்கள் கைகளிலேயே உள்ளதாகவும், அதை மனதிற்கொண்டு அவர்கள் செயலாற்றி, நாட்டை வளமான பாதையில் வழிநடத்த மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். [அவரது முழு உரை தனிச் செய்தியாக வெளியிடப்படும்.]
சிறப்பு விருந்தினருக்கு, இக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினர் கே.ஏ.ஆர்.செய்யித் என்ற டைமண்ட் செய்யித் நினைவுப் பரிசு வழங்கினார்.
மாநிலத்தின் முதன்மாணவியருக்கு பரிசுகள்:
பின்னர், சாதனை மாணவியருக்கு - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
ஏற்புரை:
பின்னர், சாதனை மாணவியர் ஜெ.பவித்ரா, எல்.நிவேதா ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
மாநிலம் முழுக்க பல்வேறு பாராட்டு நிகழ்ச்சிகளில் தாம் பங்குபெற்று வருவதாகவும், காயல்பட்டினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் - அனைத்து பள்ளிக்கூடங்களின் மாணவ-மாணவியரையும் ஓரிடத்தில் வைத்து, அவர்களோடு கலந்துரையாடச் செய்துள்ளது - மற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் வேறுபட்டு, தனித்தன்மையுடன் திகழ்வதாகவும், அதற்கு தாங்கள் மனமுவந்து நன்றி தெரிவிப்பதாகவும், நிகழ்ச்சி நடைபெறும் காயல்பட்டினத்திலிருந்து மாநில சாதனையாளர்கள் தொடர்ந்து உருவாக வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் அவர்கள் பெருமிதத்துடன் கூறினர்.
வாழ்த்துரை:
விழாவின் இணையனுசரணையாளர்களுள் ஒருவரான முள்ளக்காடு சாண்டி பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் எஸ்.பீ.சாண்டி வாழ்த்துரையாற்றினார்.
சிறந்த பள்ளிகளுக்கு பணப்பரிசு மற்றும் விருதுகள்:
கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய - காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்களுள்,
பள்ளியின் மொத்த தேர்ச்சி சதவிகிதம்,
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்,
1000க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியரின் எண்ணிக்கை
உள்ளிட்ட - நிர்ணயிக்கப்பட்ட கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு, பரிசுக்குரிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் வழங்கினார்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி 438.26 புள்ளிகளைப் பெற்று, மொத்த பள்ளிகளுள் முதலிடம் பெற்றது. அதற்காக விருதை அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, 411.46 புள்ளிகளைப் பெற்று, மொத்த பள்ளிகளுள் இரண்டாமிடம் பெற்றது. அதற்கான விருதை அப்பள்ளியின் தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா பெற்றுக்கொண்டார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி 405.09 புள்ளிகளைப் பெற்று, மொத்த பள்ளிகளுள் மூன்றாமிடம் பெற்றது. அதற்கான விருதை அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் பெற்றுக்கொண்டார்.
பின்னர், 75க்கும் மேல் மாணவ-மாணவியரைக் கொண்ட பள்ளிகள் ஒரு பிரிவாகவும், 75க்கும் கீழ் மாணவ-மாணவியரைக் கொண்ட பள்ளிகள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, அவற்றுள், முதலிடம் பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
75க்கும் மேல் மாணவியரைக் கொண்ட சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி 229.15 புள்ளிகள் பெற்று, அப்பிரிவில் முதலிடம் பெற்றது. இதற்காக, அப்பள்ளிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், விருதும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது. அதை அப்பள்ளியின் தலைமையாசிரியை மு.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
75க்கும் கீழ் மாணவியரைக் கொண்ட பிரிவில், எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி 283.33 புள்ளிகள் பெற்று, அப்பிரிவில் முதலிடம் பெற்றது. இதற்காக, அப்பள்ளிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், விருதும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது. அதை, அப்பள்ளியின் ஆசிரியை பெற்றுக்கொண்டார்.
ப்ளஸ் 2 தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றதைப் பாராட்டி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளிக்கு விருதும், ரூபாய் 2,500 பணப்பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் வழங்க, பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள்:
நகர பள்ளிகளிலிருந்து 10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளை எழுதி, மாநில - நகரளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சாதனை மாணவ-மாணவியர், அவர்களது சாதனைகள், அவர்களுக்கான பரிசுகள், அப்பரிசுகளுக்கு அனுசரணையளித்தோர், பரிசுகளை மாணவ-மாணவியருக்கு வழங்கியோர் ஆகிய விபரங்களைக் கொண்ட பட்டியல் வருமாறு:-
ப்ளஸ் 2 தேர்வில் நகரளவில் முதல் மூன்றிடங்கள்:
ப்ளஸ் 2 தேர்வில் தனிப்பாடங்களில் மாநில அளவில் சிறப்பிடங்கள்:
ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஹாஃபிழ் மாணவருக்கான பரிசு:
ப்ளஸ் 2 தேர்வில் ஹாஃபிழ் மாணவ-மாணவியருள் முதல் மூன்றிடங்கள்:
SSLC தேர்வில் நகரளவில் முதல் மூன்றிடங்கள்:
SSLC தேர்வில் ஹாஃபிழ் மாணவ-மாணவியருள் முதல் மூன்றிடங்கள்:
மாநிலத்தின் முதன்மாணவியருக்கும், நகரளவில் முதலிடங்களைப் பெற்றோருக்கும், விழாவிற்குத் தலைமை வகித்த - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், பயனுள்ள தலைப்புகளில் நூற்களைப் பரிசாக வழங்கினார்.
தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்றோர்:
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் (200க்கு 200) (Subject Centum) பெற்றோர், 1200க்கு 1000 மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவ-மாணவியருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அவர்களது விபரப்பட்டியல்:-
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் (100க்கு 100) பெற்ற மாணவ-மாணவியருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அவர்களது விபரப்பட்டியல்:-
சிறந்த கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றோருக்கு ரியாத் கா.ந.மன்றம் பரிசு:
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு பெற்றாலும், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்களை (கட் ஆஃப்) அதிகளவில் பெற்றிருந்தால்தான், பொறியியல் - மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், அதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஊட்டுவதற்காக, ரியாத் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றோருக்கும் பணப்பரிசு வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவ-மாணவியர் விபரப்பட்டியல் வருமாறு:-
இப்பரிசுகள் அனைத்தையும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான், எம்.ஏ.எஸ்.முஹம்மத் ஜரூக், ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், முன்னிலை வகித்த - இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர் டைமண்ட் செய்யித், எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா, இக்ராஃ கல்விச் சங்க மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, நகரப் பிரமுகர்களான நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன், எம்.என்.எம்.ஐ.மக்கீ, குடாக் புகாரீ, டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், துபை காயல் நல மன்ற பிரதிநிதி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயற்குழு உறுப்பினர் இஸ்ஸுத்தீன், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ‘நெட்காம்’ புகாரீ, நகர்மன்றத் தலைவரின் கணவர் ஷேக் அப்துல் காதிர், பீ.எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் உள்ளிட்டோர் பரிசுகளையும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர். நேரில் வர இயலாத மாணவ-மாணவியர் சார்பில், அவர்களின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் நன்றி கூற, துஆ பிரார்த்தனையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. காயல்பட்டினம் நகரிலுள்ள அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளில் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ, கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினரான பொக்கு ஹுஸைன் ஹல்லாஜ், இசட்.எம்.டி.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ – சுருக்கச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2014) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ பரிசளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:00 / 24.10.2015] |