ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், தாயகம் திரும்பும் அதன் முன்னாள் தலைவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளதோடு, 06.11.2015 அன்று மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் நிகழ்வறிக்கை:-
அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் 35ஆவது செயற்குழு கூட்டம் 09- 10 - 2015 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் டாக்டர் H.M. ஹமீது யாசிர் அவர்களின் தலைமையில் மன்றத்தின் தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்களின் இல்லத்தில் வைத்து கூடியது.மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் பீ.எம். ஹுஸைன் நூருத்தீன் அவர்கள் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
முன்னாள் மன்ற தலைவருக்கு நடத்திய பிரியா விடை நிகழ்ச்சி!
நமது மன்ற முன்னாள் தலைவரை மரியாதை செய்யும் முகமாக கடந்த செயற்குழு கூட்டத்துடன் செட்டிநாடு ஹோட்டலில் வைத்து அவர்களின் சேவைகள் மற்றும் நமது காயல் மக்களுக்காக அவர்கள் அர்பணித்த பல நற்ச்செயல்களை நினைவு கூர்ந்து நடப்பு கவுரவ தலைவர், மன்றத்தின் தலைவர், மற்றும் மூத்த உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து முன்னாள் தலைவர் ஏற்புரையுடன் கூடிய அறிவுரைகளை வழங்கிய பின்னர் நிகழ்ச்சிகள் யாவும் சிறப்பாக நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்!
முன்னாள் தலைவரின் மடல் மன்றத்தின் பார்வைக்கு!
நமது மன்ற உறுப்பினர்களின் ஆர்வமான பொது சேவைகள், காயல் மக்களுக்காக தங்களை அர்பணித்தல் போன்ற நல்ல பல தொலை நோக்குடன் கூடிய செயல் திட்டங்கள் போன்றவைகளை பாராட்டியும், இன்னும் பல புது திட்டங்களை அமுல்படுத்தி நமது காயல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கோரியும், தானும் தாயகத்தில் இருந்து நமது மன்ற காயல் பிரதிநிதியாக செயல்பட ஆவலாக இருப்பதுடன் மன்ற உறுப்பினர்கள் தங்களின் சந்தாக்களை விரைவாக செலுத்தி மன்ற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்படி கேட்டும் துஆ செய்து எழுதி அனுப்பிய முன்னாள் மன்றத் தலைவரின் மடல் இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
மன்றத்தின் 7ஆவது பொதுக்குழு, நவம்பர் 6 ஆம் திகதி கூட்ட முடிவு!
மன்றத்தின் அடுத்த (7ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று வெகு சிறப்புடன் நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் மற்றும் பொதுக்குழு இதர காரியங்களை செயல்படுத்தும் பொறுப்பில் ஹாஜி ஐ. இம்தியாஸ் அஹ்மத், V.S.T.ஷேக்னா லெப்பை, எஸ்.ஏ.சி.ஹமீத் ஆகியோர் , சந்தா தொகை வசூலிக்கும் பொறுப்பில் இணைப்பொருளாளர்கள்: நோனா அபூஹுரைரா, மற்றும் எம்.ஓ.அன்ஸாரீ, மக்கள் தொடர்பு செயலராக: ஏ.ஆர். ரிஃபாய் [ 055 420 30 56 ] மற்றும் இஸ்மாயில் [ 050 293 37 78 ], பொதுக்குழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனைத்து உறுபினர்களுக்கும் மின்னஞ்சல் / குறுஞ்செய்தி (Email/SMS) வாட்சப் (WhatsApp), இணைய தளங்களின் மூலம் தகவல் தெரிவித்து உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பொறுப்பில் இணைச் செயலாளர் கே.ஹுபைப் [050 849 0978 ] மற்றும் டாக்டர் விளக்கு எஸ்.செய்யித் அஹ்மத் [050 945 04 04] ஆகியோர்கள் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும் இடம் முடிவான பிறகு தனி அழைப்பு செய்தியாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.
பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை குறித்து கலந்து ஆலோசிக்க அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் இம்மாத இறுதியில் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்கள் அறிவிக்க ஜனாப். N.K. அபு ஹுரைரா அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |