திருச்செந்தூரிலுள்ள முஹ்யித்தீன் பள்ளிவாசல் அருகில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதை அங்கிருந்து அகற்றக் கோரி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிடப்பட்டதாகத் தெரிகிறது. கடைசியாக, இது குறித்து - ஜூன் 27, 2015 அன்று, அக்கட்சியின் மாவட்ட பொது செயலாளர் எச்.ஷம்சுத்தீன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் IAS யிடம் மனு வழங்கியுள்ளார்.
பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார் [வழக்கு எண்: WP(MD) No.14816/2015].
வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 18, 2015 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,
இந்த உத்தரவு கிடைக்கபெற்ற 6 வாரங்களில், மனுதாரரின் ஜூன் 27 கோரிக்கையை பரிசீலனை செய்து, அதில் உள்ள விபரங்களை உறுதி செய்து, தகுதியின் அடிப்படையிலும், சட்டத்திற்கு உட்பட்டும் முறையான ஆணை பிறப்பிக்க - மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிவாசல் அருகிலிருந்து டாஸ்மாக் கடையை அகற்றாவிடில், மக்கள் திரள் போராட்டம் நடத்தப்போவதாக SDPI தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பின்வருமாறு அறிவித்துள்ளது:-
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 3:00 pm / 21.10.2015] |