காயல்பட்டினத்தில், 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நள்ளிரவு துவங்கி, அன்று காலை, மதியம், மாலை, இரவு, இன்று (19.10.2015 திங்கட்கிழமை) நள்ளிரவு என தொடர்ந்து இதமழை பெய்தது. நேற்று பகல் வேளைகளில் மழையும், வெயிலும் வானிலையில் மாறி மாறி இடம்பிடித்தன. பெய்த மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் சிறிது மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
இன்று (19.10.2015 திங்கட்கிழமை) காலை 08.50 மணி நிலவரப்படி, நகரில் மழை மேகங்களுக்கிடையில் வெயில் மறைந்து ஒளிர்கிறது. வானிலை இதமாக உள்ளது.
நகரில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |