SDPI காயல்பட்டினம் நகர கிளை கூட்டத்தில், அக்கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு, DCW ஆலையிடம் பணம் பெற்று நலத்திட்டப் பணிகள் செய்வதாக மோசடி செய்வோருக்குக் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
Social Democratic Party of India - SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை கூட்டம், 17.10.2015 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் நகர கிளைக்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினம் நகரில் சுகாதாரம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக மரங்களை நடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் பழுதடைந்துள்ள 40க்கும் மேற்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்யவும், DCW அலையின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் சூழலில், பொதுமக்கள் என்ற போர்வையில் தங்கள் சுய இலாபத்திற்காக DCW ஆலையிடமிருந்து பணம் பெற்று, நலத்திட்டத்தைச் செய்வதாக கூறிக்கொண்டு மோசடி செய்யும் ஒரு சில நபர்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தகவல்:
அப்துர்ரஹ்மான்
(நகர செயலாளர் - SDPI காயல்பட்டினம் கிளை)
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |