ஆறாமாண்டு வினாடி-வினா போட்டி:
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
ஆறாமாண்டு போட்டி, 06.09.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது. இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
பங்கேற்ற மொத்த அணிகள்:
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 21 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 31 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 33 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 30 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 30 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 23 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 60 அணிகளும்
என இந்த 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு 2 பேர் வீதம் 228 அணிகளில் 456 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
போட்டி நடத்துநர்:
கோயமுத்தூர் Quiz Clubஇன் இயக்குநர்களும், புதுயுகம் தொலைக்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தி வருவோருமான – கோவை செந்தில்குமார், கோவை நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோர் இணைந்து இப்போட்டியை நடத்தினர். நடராஜன் கிருஷ்ணசாமி - 5ஆம் ஆண்டு வினாடி வினா போட்டியை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நுழைவுப் போட்டி:
முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் நடராஜன் கிருஷ்ணசாமி ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.
இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:
பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் முதல் ஒரு பள்ளியிலிருந்து மட்டும் இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்கும், இதர அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தலா ஓர் அணிக்கும் என, 2 + 6 என்ற அடிப்படையில் 8 அணிகளுக்கு இடமளிக்கப்படும் என போட்டி துவங்கும் முன் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப்போட்டிக்குரிய 8 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.
அதிகளவில் சரியான விடையளித்த எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
என மொத்தம் 8 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை நடத்துநர் மீண்டும் வாசித்து, பங்கேற்ற மாணவ-மாணவியரிடம் விடைகளைக் கேட்க, அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விடையளித்தனர். சில அரிதான கேள்விகளுக்கு ஓரிரு மாணவர்கள் விடையளித்தனர். அவர்களை நடத்துநர் அழைத்து, அந்த விடைக்கான விளக்கத்தைக் கேட்டபோதும், அவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்தனர். அவ்வாறான மாணவ-மாணவியருக்கு, நடத்துநர் இனிப்புப் பண்டங்களைப் அன்பளிப்புச் செய்தார்.
மதிப்பீட்டாளர்கள்:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ‘நெட்காம்’ புகாரீ, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், சமூக ஆர்வலர் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.
கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, அசைபட விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.
பார்வையாளர்களுக்கும் பரிசுகள்:
போட்டியில், 8 அணியினரும் விடையளிக்கத் தவறிய கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:
நிறைவில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எஸ்.எஸ்.மீரா ஸாஹிப் மரைக்கார்,
எல்.வீரபத்ரன்
ஆகியோரடங்கிய அணி முதலிடம் பெற்றது.
இவ்வணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் அரசு நூலகர் முஜீப் வழங்கினார்.
6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாமிடம்:
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின்
எம்.எம்.எம்.ஜைனப் கதீஜா,
எஸ்.எம்.எஸ்.ஃபாத்திமா முபஷ்ஷரா
ஆகியோரடங்கிய அணி இரண்டாமிடத்தைப் பெற்றது.
இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மூன்றாமிடம்:
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
என்.ஃபாத்திமா நஸ் ரீன்
ஏ.எம்.ஃபாத்திமா நிஹாரா
ஆகியோரடங்கிய அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.
இவ்வணிக்கு, ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதர 5 அணிகள்:
இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ரூபாய் 500 பணப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற இதர 5 அணிகள்:-
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எம்.என்.அஸ்லம்,
எஸ்.ஐ.ஆர்.அஹ்மத் பஷீர்
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின்
எஸ்.எம்.எஸ்.நத்ஹர் ஸாஹிப்,
எம்.எச்.எல்.புகாரீ ரமழான்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
எஸ்.ஐ.ஹுஸைன் ஸலாஹுத்தீன்,
கே.எம்.முஅவ்வித் காஜா
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
ஏ.ஆர்.ஹலீமா நஸ் ரீன்,
இசட்.எம்.ஃபாத்திமா முஅல்லிஃபா
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
டீ.எம்.எஸ்.மகுதூம் அலீ ஃபாத்திமா,
கே.எம்.ஏ.கதீஜா ஷரீஃபா
நினைவுப் பரிசுகள்:
பரிசளிப்பு விழாவில், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் நூலகர் அ.முஜீப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கும், வினாடி-வினா போட்டியை நடத்திய கோவை செந்தில் குமார், கோவை நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை தலைமையேற்று நடத்திய கத்தர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர் இசட்.எம்.டி.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவற்றை, இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகியும், இப்போட்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் வழங்கினர்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதியும் - இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளருமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார்.
ஏற்பாடு:
போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில், பார்வையாளர்களாக பலர் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்கம், கத்தர் காயல் நல மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில், இக்ராஃ மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, அதன் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர் பொக்கு ஹுஸைன் ஹல்லாஜ், ஹாஃபிழ் எம்.ஐ.சுல்தான், பீ.எச்.எம்.இஸ்மாஈல், குடாக் புகாரீ, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, தமிழன் முத்து இஸ்மாஈல், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) அங்கத்தினர் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.
கடந்தாண்டு (2014) கத்தர் காயல் நல மன்றம் சார்பில் நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |