ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள், 13.11.2015 அன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க - அமீரகம் வாழ் அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
துபை காயல் நல மன்றத்தின் நவம்பர் 2015 மாத செயற்குழு கூட்டம் மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் புஹாரி அவர்கள் வில்லாவில், இம்மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் நடைபெற்றது.
இன்ஷா அல்லாஹ் துபை காயல் நல மன்றத்தின் 2015 ஆம் ஆண்டின் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை துபை சத்வா-வில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் நடைபெறும் என அறியத் தருகிறோம்.
அமீரகத்தில் வாழும் அனைத்து காயலர்களும் இந்தப் பதிவையே அழைப்பாக ஏற்று, தங்களின் குடும்ப சகிதம் கூட்ட இடத்திற்கு முற்கூட்டியே வருகை தந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கு முற்கூட்டியே வருகை தரும் பொருட்டும், கூட்டத்தை இறுதி வரை இருந்து சிறப்பிக்கும் பொருட்டும், பரிசுப் பொருட்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
இது சம்பந்தமான விரிவான செய்தி மீண்டும் இதே வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என அறியத்தருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |