தம்மாம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09.10.2015 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இக்கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சௌதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின், 73 வது பொதுக்குழு கூட்டம், 09.10.2015 வெள்ளிக்கிழமை பின்னேரம் மக்ரிப் தொழுகைக்கு பின்பு, தம்மாமில் உள்ள சகோதரர் தாவூத் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இந்நிகழ்ச்சியை சகோதரர் ஹாபிழ் H. இஸ்மாயில் அவர்கள் திருமறை அல்குர்ஆன் வசனங்களை கிராஆத் ஓதி துவங்கி வைக்க, மன்றத்தின் இணைச் செயலாளர் சகோதரர் பாளையம் M.S. சதக்கத்துல்லாஹ் அவர்கள் வந்து இருந்த அனைவர்களையும் வரவேற்றார்.
மன்றத்தின் தலைவர் ஜனாப் ரபீக் அஹ்மத் அவர்கள் மன்றத்தின் செயல்பாடுகள், சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கு இடைப்பற்ற நாட்களில் மன்றத்தால் செய்யப்பட உதவிகளை விவரித்து விளக்கி கூறினார். அதில் ஷிஃபா மூலம் அளிக்கப்பட்ட மருத்துவ உதவியையும், சிறு தொழிலுக்காக கொடுக்கப்பட்ட உதவிகளையும் குறிப்பிட்டு கூறினார்.
மேலும் நம் ஊரில் அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் நம் மக்களுக்கு அவசரமான மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்படுவதை கவனத்தில் கொண்டு “அவசர தேவைக்கு மருத்துவ உதவி” திட்டத்தை நம் மன்றம் தயாரித்து, மற்ற மன்றங்களின் ஒத்துழைப்போடு நமது KMT நிர்வாகத்தை தொடர்பு கொண்டது, அதற்க்கு KMT நிர்வாகத்தின் நிலைப்பாடு, நமது மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் தலைவருமான டாக்டர் இத்ரீஸ் அவர்களின் தொடர் முயற்சிகள் நடைபெறுவதையும் விவரித்து கூறினார்.
அதை தொடர்ந்தது, துணைத் தலைவர்களில் ஒருவரான சாளை ஜியாவுத்தீன் அவர்கள், விடுமுறையில் ஊரில் இருந்த சமயம் நடைபெற்ற நலப் பணிகளை எடுத்துக் கூறினார். பசுமைக்காயல் திட்டத்தின் முதல் கட்டமான காயல் கடற்கரையை சுத்தமாக வைத்து இருக்கும் நிகழ்வுகளையும், மன்றத்தின் மூலம் கொடுக்கப்பட்ட சிறு தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வுகளையும் விவரித்தார்.
பின்பு மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் தம்மாம் இஸ்மாயில் அவர்கள் மன்றத்தால், ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து, சகோதரர் மனநல ஆலோசகர் ஹூஸைன் பாஷா அவர்களைக் கொண்டு , " அகமும் புறமும்" மற்றும் "குழந்தை மனசு" என்ற தலைப்பில்நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியைப் பற்றியும் , மேலும் வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற “ Personality Development “ நிகழ்ச்சியைப் பற்றியும், இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் திட்டமிட்டு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் விவரித்து பேசினார்.
மன்றத்தின் பொருளாளர் ஜனாப் இப்ராஹிம் அவர்கள் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
தம்மாம் பகுதிக்கு புதிதாய் வந்துள்ள சகோதரர்களான பிரபு S . S . சாமு சப்வான், சாகுல் ஹமீது பைசல், அஷ்ரப் அலி, ஷைக்னா லெப்பை, காதர் சுலைமான் அவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, மன்றத்தில் இணைத்துக் கொன்டார்கள். பின்பு உறுப்பினர்கள் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறினார்கள்.
அனைவர்களுக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டு, மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரான ஜனாப் P.S.M.ஷைக் நூர்தீன் அவர்களின் நன்றி உரையுடன், துஆ ஓதி மனநிறைவுடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ். இப்பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஜியாவுத்தீன்
(துணைத்தலைவர், தம்மாம் காயல் நல மன்றம்)
தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (72ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |