போதிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளததால், 12.10.2015 அன்று நடைபெறவிருந்த - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அக்டோபர் மாதத்திற்கான சாதாரண கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
நகர்மன்றக் கூட்டம்:
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அக்டோபர் மாதத்திற்கான சாதாரண கூட்டம், 12.10.2015 திங்கட்கிழமையன்று 11.00 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு - கூட்டப் பொருள் உள்ளிட்ட ஆவணங்களை உள்ளடக்கி, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - அனைத்து உறுப்பினர்களுக்கும் பதிவு அஞ்சல் அனுப்பியிருந்தார். 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகிய இருவர் தவிர மற்ற அனைவரும் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
கூட்டப் பொருள்:
இக்கூட்டத்தில், பின்வருமாறு - 93 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தது:-
12.10.2015 திங்கட்கிழமையன்று காலை 11.00 மணியளவில் நகராட்சி அலுவலக வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் கூட்டம் நடைபெறவிருந்தது.
ஒத்திவைப்பு:
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மட்டுமே கூட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். நண்பகல் 12.00 மணி வரை காத்திருந்தும் வேறு உறுப்பினர்கள் யாரும் கூட்டத்திற்கு வருகை தராததால், போதிய உறுப்பினர்கள் வராததால், (QUORUM இல்லை என்பதால்) கூட்டத்தை ஒத்திவைப்பதாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அறிவித்தார்.
செய்தியாளர்களுடன் சந்திப்பு:
கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை மினிட் புத்தகத்தில் எழுதிய பின், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கூட்டம் அறிவிக்கப்பட்ட முறை, அனைத்து உறுப்பினர்களுக்கும் பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்ட கூட்டப் பொருள் உள்ளிட்ட ஆவணங்கள், நகர்மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், ஆணையர் ஆகியோருடனான அஞ்சல் போக்குவரத்து உள்ளிட்டவற்றை அவர் விபரமாகக் கூறினார்.
அசைபடப் பதிவு:
கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சியில் இதற்கு முன் (22.09.2015 அன்று) நடைபெற்ற கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |