காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பீ.எம்.ஐ.சஊத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 12.11.2016 சனிக்கிழமையன்று, அமைப்பின் துணைத்தலைவர் யு. முஹம்மது நூஹு அலுவலகத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஹாஃபிழ். எம்.எஸ்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் பி.எம்.ஐ.சவூத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் ஹாஃபிழ். பி.எஸ்..அஹமது ஸாலிஹ் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. எமது அமைப்பின் முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கத்தீப் ஏ.ஜெ.முஹம்மத் மீரா ஸாஹிப் மற்றும் ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் முன்னாள் துணை இமாம் அல்ஹாஜ் ஏ.எச்.நூஹ் அமானுல்லாஹ் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவர்களது மஃபிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.
2. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபாய் 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
3. SHIFA ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
4. பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORING பற்றிய தகவலை காயல்பட்டினத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் முறைப்படி தெரிவித்து, எதிர் வரும் கல்வி ஆண்டில் மாணவ மாணவியர்க்கான சீருடைகள் தயார் செய்வதற்கு எமது தையல் நிறுவனத்தை பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
5. காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையிலிருந்து பெறப்பட்ட கடிதம் பரிசீலிக்கப்பட்டு அவ்வமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பது எனவும் எமது மன்றத்தின் சார்பாக பேரவையின் கெளரவ ஆலோசனை குழு உறுப்பினராக செயலாளர் பி.எம்.ஐ.சவூத் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் பி.எம்.ஐ.சவூத் நன்றி கூற, ஹாஃபிழ். பி.எஸ்.அஹமது ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி துணைத் தலைவர் யு. முஹம்மது நூஹு அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|