ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் - காயல்பட்டினம் அரசு பொது நூலகம், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பால் விரைவில் துவக்கப்படவுள்ள “மக்கள் மருந்தகம்” உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 46 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 20-01-2017 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் இணைப்பொருளாளர் துணி முஹம்மது உமர் அன்சாரி அவர்களின் தலைமையில் மன்றச் பொதுச் செயலாளர்: மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது.பிரபு S.A.R முஹம்மது அப்துல்காதர் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தாயகம் காயல்பட்டினத்தின் பொதுவான பிரச்சினைகள், தேவைகள், குறைபாடுகள் குறித்து அலசி ஆராயப்பட்டு, நகர முன்னேற்றத்தில் மன்றத்தின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆலோசனை செய்யப்பட்டது.
நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு!!
சென்ற ஆண்டு போல இவ்வாண்டும் அபூதபீ காயல் நல மன்றதத்தின் சார்பில் நலத்திட்டங்களுக்கு குறிப்பாக கல்வி, மருத்துவம், இமாம்-பிலால் ஊக்கத்தொகை, ரமழான் மாத உணவுப்பொருள் வழங்குதல், ஆகியவற்றுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அடுத்த செயற் குழுவில் ஒப்புதல் பெற முடிவுசெய்யப்பட்டது.
நமது மன்றத்தின் தன்னலமற்ற உறுப்பினர்களின் ஆர்வமான இவ்வரிய சேவைகள் மூலமாக நல்ல பல தொலைநோக்குடன் கூடிய செயல்திட்டங்கள் இன்ஷாஅல்லாஹ் வரும் ஆண்டுகளில் செயல்படுத்திடவும், இன்னும் பல புதுத் திட்டங்களை அமுல்படுத்திடவும் நமது காயல் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுப்பினர்களின் நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை முறைப்படி மாதம்தோறும் உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து, மன்றத்தின் நகர்நலப்பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆலோசனை செய்யப்பட்டது.
ஷிஃபாவின்- மக்கள் மருந்தகம்- Generic Medical Shop !!
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பால் நகரில் விரைவில் துவக்கப்படவுள்ள “மக்கள் மருந்தகம் “Generic Medicine” பற்றியும், அதன் அவசியத்தை குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு, Rs 50,000/- பங்களிப்பு செய்வதென தீர்மானிக்கபட்டு அத்தொகையை ஷிபாவின் “Generic Medical Shop” பொறுப்பாளர்களிடம் அபூதபீ மன்றத்தின் காயல் பிரதிநிதி மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ மூலம் சேர்க்கப்பட்டது.
அரசு பொது நூலகத்தின் (Round Table with 10 Chairs) நிதி உதவி!!
அரசு பொது நூலகத்தின் மனு மூலம் பெறப்பட்ட பத்து இருக்கைகள் மற்றும் ஒரு வட்ட வடிவ மேசைக்கான (Round Table with 10 Chairs) நிதி உதவி முந்தைய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்ட தொகை RS.10,௦௦௦ நூலக பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.
10TH மற்றும் +2, பொதுத்தேர்வு மையங்கள்!!
நமதூரில் நடைபெறும் 10 மற்றும் +2, பொதுத்தேர்வு மையங்கள் முன்பு போல் மாணவர்கள் தனியாகவும் ,மாணவிகள் தனியாகவும் அமர்ந்து தேர்வு எழுதும் நிலை மாறி சில மையங்களில் இருபாலரும் ஒரே ஹாலில் தேர்வு எழுதி வரும் சூழ்நிலைகளால் மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மனஅழுத்தத்தை தருவதால் நம் பிள்ளைகளின் கோஷா முறை அறிந்து தேர்வு மையங்களை முறைப்படுத்தும்முகமாக இக்ரா மூலம் கல்வியாளர்களையம் ,அதிகாரிகளையும் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்க L.T.இப்ராஹிம் ,S.A.C.ஹமீது மற்றும் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அகியோர்கள் மன்றத்தின் சார்பாக நியமிக்கப்பட்டனர்.
மாதாந்திர செயற்குழு!!
மன்றத்தின் மாதம்தோறும் செயற்குழு கூட்டம் மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் என்றும் இன்ஷா அல்லாஹ் அடுத்த 47ஆவது செயற்குழு கூட்டம் 10-02-2017 வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
இரங்கல் தீர்மானம்!!
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை S.A.H. தாவூத் அவர்களின் சகோதரர். சாளை S.A.H.முஹம்மது அப்துல்காதர் அவர்கள் மனைவி மர்ஹுமா நஜிமு நிஷா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ அவர்களின் தாயாரின் தாயார் மர்ஹுமா பாவலர் எஸ்.ஏ.ஹவ்வா பிள்ளை ஆகியோர்களின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அன்னவர்களின் மஃக்ஃபிரத்திற்காக (பாவப் பிழை பொறுப்பிற்காக) துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
இறுதியாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
செயற்குழு உறுப்பினர் M.E.முகியதீன் அப்துல் காதர் அனுசரணையில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு காயல்பட்டினம் பாரம்பரிய கறிகஞ்சி, வாடா வடை, மற்றும் பழ வகைகள் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
படங்கள்:
துணி முஹம்மத் உமர் அன்ஸாரீ
(இணைப்பொருளாளர்) |