இந்தியாவின் 68ஆவது குடியரசு நாள் 26.01.2017. வியாழக்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அன்று 08.30 மணிக்கு, பேருந்து நிலையம் அருகில் தேசிய கொடியேற்றப்பட்டது.
நகர செயலாளர் எஸ்.எம்.ஜிஃப்ரீ தலைமை தாங்கினார். பொருளாளர் எம்.மீரான் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மீராத்தம்பி ஃபைஸல் தேசிய கொடியேற்றினார். இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மத் நஜீப் உரையாற்றினார்.
தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஸிக், நகர துணைச் செயலாளர்கள் ஜியாவுத்தீன், மொகுதூம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசா, இளைஞாணி மொகுதூம், மாணவரணி சத்தாம், வர்த்தகர் அணி மாஜா, தொழிற்சங்க அங்கத்தினர், சீதக்காதி திடல் ஆட்டோ ஓட்டுநர் சங்க அங்கத்தினர் உள்ளிட்ட கட்சியினரும், பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
‘ஜம்ஜம் ஸ்டோர்’ நஜீப் |